சமாதானம் ஆகிவிடு!!

சமாதானம் ஆகிவிடு!!
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13

தொடர்: 86

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•

ஷைகு ஷிஹாபுத்தீன் அப்துல் வாரிஸ் அல் மாலிகீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; 

எனக்கும் ஷைகு நாஸிருத்தீன் முஹம்மது அல் பக்ரீ (ரஹ்) அவர்களுக்கும் இடையே சில காரணங்களால் முரண்பாடு இருந்தது; அதனால் நான் அவரை விட்டும் விலகி வாழ்ந்து வந்தேன். 

இந்நிலையில் ஒரு நாள் நான் நபி ஸல் அவர்களை கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள், "ஷைகு நாஸிருத்தீன் முஹம்மது அல் பக்ரீ (ரஹ்) அவர்களோடு  சமாதானம் ஆகிவிடு" என்று கூறினார்கள். 

உடனே நான் கண் விழித்ததும் எனது ஊரில் இருந்து அவர் ஊருக்குச் சென்று அவர்களோடு சமாதானம் ஆனேன்.

நூல்: அத்துரருல் காமினா

ஷைகு ஷிஹாபுத்தீன் அப்துல் வாரிஸ் அல் மாலிகீ (ரஹ்) அவர்கள் மாபெரும் ஹதீஸ் துறை அறிஞராகவும், சூஃபி ஷைகுவாகவும் ஹிஜ்ரி எட்டாம் நூற்றாண்டில் 700 - 799 காலகட்டத்தில் எகிப்து பகுதியில் வாழ்ந்து வந்தார். 

அதுபோலவே ஷைகு நாஸிருதீன் முஹம்மது அல் பக்ரி (ரஹ்) அவர்களும் இதே காலகட்டத்தில் ஹதீஸ் துறை அறிஞராகவும், மிகப்பெரும் ஞானியாகவும் வாழ்ந்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே சிந்தனையும் கருத்தும் உடைய இருவர் தனித்தனியாக இருந்து சமூகத்திற்கு ஆற்றும் பணியை விட , சேர்ந்து இருந்து செய்யும் பணிகள் அதிகமாகவும், பயன் மிக்கதாகவும் இருக்கும் என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்