புதிய பள்ளிவாசல் கட்டிடம் திறப்பு விழா
புதிய பள்ளிவாசல்
கட்டிடம் திறப்பு விழா
======================
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ، مَنْ بَنَى لِلَّهِ مَسْجِدًا وَلَوْ كَمِفْحَصِ قَطَاةٍ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ، (سنن ابن ماجه)
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;: நபி ஸல் அவர்கள் கூறினார்கள்; “யார் அல்லாஹ்வுக்காக ஒரு பள்ளிவாசல் கட்டுகிறாரோ — அது பறவையின் கூடு அளவாக இருந்தாலும் — அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுவான்.”
நூல் : இப்னுமாஜா
நபிகள் நாயகம் அவர்கள் மதீனாவில் குபா பகுதியில் முதன் முதலாக மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலை கட்டி முடித்த பிறகு தொழுதார்கள்.
பின்னர் வீட்டிலேயே உளூ செய்து கொண்டு இங்கு வந்து தொழுவோருக்கு ஒரு உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என அறிவித்தார்கள்.
அதாவது மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசலுக்கு வந்து தொழுவோருக்கு மட்டும் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்பதின் நோக்கம் புதிய பள்ளிவாசலில் ஆர்வமாக வந்து அனைவரும் தொழ வேண்டும் என்பதுதான் என மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
எனவே ஜமாஅத்துல் உலமா சபை கட்டியிருக்கும் பள்ளிவாசலுக்கு அனைவரும் வாருங்கள்! தொழுங்கள்! அதற்கான சிறப்பு நன்மையை பெறுங்கள்!!
இன்று இல்லை என்றாலும் என்றாகிலும் வந்துத் தொழுங்கள்!
Comments
Post a Comment