நோன்பாளிகளுக்கு கண்கள் வறண்டு போகுமா?
நோன்பாளிகளுக்கு
கண்கள் வறண்டு போகுமா?
=============================
2024 ஆம் ஆண்டு ரமலான் நோன்பு நோற்ற 13 ஆண்கள் மற்றும் 27 பெண்களிடம் ஒரு ஆய்வு செய்யப்பட்டது.
சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சராசரி ஆண்களின் வயது 38.17 பெண்கள் சராசரி வயது 38. 07.
12 மணி நேரங்களில் இருந்து 13 அரை மணி நேரம் வரை உண்ணாமல் பருகாமல் நோன்பு நோற்கும் பொழுது அவர்களுடைய கண்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதிப்புக்கு உள்ளாகுமா? கண்கள் வறண்டு போகுமா? நீர் சத்து குறைவதால் ஏதேனும் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்பது குறித்து ஷுடான் வாங் , ஸ்கெபன்ஸ் கண் ஆராய்ச்சி நிறுவனம்
மற்றும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி, அமெரிக்கா ரோவாய்டா அலீல்டின் , ஷெஃபீல்ட் டீச்சிங் ஹாஸ்பிடல்ஸ் NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட், யுனைடெட் கிங்டம்
அலி லாமின் , மான்செஸ்டர் பல்கலைக்கழக NHS ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (MFT), யுனைடெட் கிங்டம் ஆகிய மருத்துவ ஆய்வு கழகத்தின் உயர்நிலை மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையை 08 ஜனவரி 2025 அன்று Takayoshi Masuoka , கனசாவா மருத்துவ பல்கலைக்கழகம், ஜப்பான்
மதிப்பாய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுவதாவது.
ரமலான் மாதத்தில் தொடர்ந்து 12 நாட்கள் நோன்பு நோற்ற 40 பேரிடம் கண் வறட்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ரமலான் நோன்பு முடிந்து ஒரு வார காலம் நோன்பு நோற்காமல் இருந்த பிறகு ஒரு வாரம் மீண்டும் கண் பரிசோதனைகள் செய்வது என்கிற அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டது.
அவர்கள் நோன்பு நோற்று இருக்கும் போது கண் சிறிதளவு வறண்டு இருந்தாலும் அதை 0.001 என்று சொல்லப்படுகிற அளவிற்குகூட சிறிதளவு வறட்சியும் வெளியில் தெரியவில்லை.
அதே நேரம் கண் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் சொட்டு மருந்துகள் கண்களுக்கு விடாமலே 0.05 என்கிற அளவில் அவர்களின் நோயின் அளவு குறைந்து இருந்தது.
நீண்ட நேரம் திரவ உணவுகள் உட்கொள்ளாததால் குறிப்பிடும்படியான எந்த மாற்றமும் கண்களுக்கு ஏற்படவில்லை என தெரியவந்தது.
அதே நேரம் ரமலான் மாதத்தில் அதிகாலையில் எழுந்து விடுவதாலும், இரவு நீண்ட நேரம் கழித்து உறங்குவதாலும் மொத்தத்தில் ரமலான் மாதத்தில் தூக்கம் குறைவதால் கண் சுரப்பிகளில் சில மாற்றமும், கண் சவ்வு படலம் பரவுதல் போன்ற சில மாற்றங்கள் ஏற்படுகின்றது. இவை நோன்பு நோற்பதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அல்ல!
இந்த ஆய்வின்போது காண்டாக்ட் லென்ஸ் அணிந்தவர்கள், கண் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கண் பார்வை குறைவுக்காக கண்ணாடி அணிந்து இருப்பவர்கள், கண்ணில் எந்த குறைபாடும் இல்லாமல் இருப்பவர்கள் என பலதரப்பட்ட மனிதர்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார்கள்.
நோன்பாளிகளில் சிலருக்கு கண் வறட்சி சற்று இருந்தாலும் நோன்பு காலங்களுக்குப் பிறகு அவர்களுக்கு சமநிலைக்கு வந்துவிடுகிறது.
குறைந்த அளவு உள்ள கண் வறட்சியினால் மிகப் பெரும் பாதிப்பு எதுவும் இல்லை; அது போலவே இப்பொழுது ஏற்பட்ட வறட்சியினால் நீண்ட காலத்துக்குப் பிறகு அவை பாதிப்பை ஏற்படுத்தாது.
முதல் வாரத்தை விட மூன்றாவது வாரத்தில் கண்ணீர் சுரப்பிகளில் இருந்து நீர் சுரப்பது 0.0001 % சதவீதம் குறைந்து காணப்பட்டது.
கண்ணை பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்யும் போது ஒரு சில நிலைகளில் ஒரு சில மாற்றங்கள் இருந்தாலும் மொத்தத்தில் எந்த குறையும் இல்லை என்றே ஆய்வு முடிவுகள் தெரியவந்துள்ளது.
மேலும் விபரமாக அறிய...
https://www.frontiersin.org/journals/medicine/articles/10.3389/fmed.2025.1488765/full
Comments
Post a Comment