கனவின் காட்சி எதார்த்த சாட்சி
கனவின் காட்சி எதார்த்த சாட்சி
===============================
இந்தத் தொடர் இன்றுடன் முடிந்தது.
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13
தொடர்: 87
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•
முஹம்மது பின் ஸஈத் அல் பூஷ்ரி (ரஹ்) அவர்கள் கி.பி. 1211 - 1294 ஹிஜ்ரி 608 காலகட்டத்தில் எகிப்து பெனி ஸுவெய்ஃப் நகரத்திற்கு அருகிலுள்ள பூஷ்ரி Busiri எனும் கிராமத்தில் பிறந்து எகிப்து போன்ற நகர்ப்புறங்களில் வளர்ந்தார்கள்.
இவர்கள் சூஃபி மரபு கவிஞர் ஆவார்; இவர்கள்
الهمزية في مدح خير البرية
ஹம்ஸிய்யா
المضرية
முழரிய்யா
الدالية
தாலிய்யா
متفرقة للبوصيري
பல சிறிய கவிதைகள் என பல கவிதை நூல்களை இயற்றி இருக்கிறார்கள்.
83 வயதுவரை வாழ்ந்த இமாம் பூஷ்ரி (ரஹ்) அவர்கள் தம் இறுதி காலங்களில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு மிகப்பெரும் சிரமத்தை சந்தித்து வந்தார்கள்.
இடதுபுறம் செயல் இழந்து போனாலும் வலது புறம் சரியாக இருந்ததால் தம் வலது கையினால் நபிகள் நாயகம் அவர்கள் மீது இதுவரை எழுதிடாத வகையில் ஆழமான கருத்துக்களைக் கொண்ட கஸீததுல் புர்தா - கவிதைகளைப் படைத்தார்.
அந்தக் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட நபிகள் நாயகம் அவர்கள் இமாம் பூஷ்ரி (ரஹ்) அவர்களின் கனவில் தோன்றி சிறந்த கவிதைகளை வடித்ததற்காக பாராட்டுகளை தெரிவித்ததோடு உடல் நலம் பெற தம் மேனியின் மீதிருந்த பச்சை வண்ண புர்தா சால்வையை அணிவித்தார்கள்.
பின்னர் இமாம் பூஷ்ரி (ரஹ்) அவர்கள் கனவில் இருந்து விழித்துப் பார்த்தபோது போர்த்தப்பட்டிருந்த போர்வை அவரின் மீது இருந்தது; அதே நேரம் வாத நோயும் குணமாகி இருந்தது.
இமாம் பூஷ்ரி (ரஹ்) அவர்கள் வாழ்ந்த காலத்திற்குப் பிறகு மிக நெருக்கமான எட்டாம் நூற்றாண்டு ( ஹிஜ்ரி 764 கி.பி. 1363) காலத்தில் எழுதப்பட்ட நூல் ஃபவாதுல் வஃபாயாத் என்பதாகும். இந்த நூலில் தான் இதன் ஆசிரியர் இப்னு ஷாகிர் குதுபி (ரஹ்) அவர்கள் மேற்கண்ட வரலாற்றை பதிவு செய்திருக்கிறார்கள்.
இமாம் பூஷ்ரி (ரஹ்) அவர்கள் பல நூல்களை எழுதி இருந்தாலும் கஸீததுல் புர்தா நூலை எழுதியதன் காரணமாக நபிகள் நாயகம் அவர்களை கனவில் கண்டதால் புர்தா ஷரீஃப் உலகப் பிரசித்தி பெற்ற நூலாக ஆகிவிட்டது.
ஹிஜ்ரி 694 கி.பி. 1294 காலகட்டத்தில் எகிப்தில் காலமானார்கள்; அலெக்ஸாண்ட்ரியா எனும் இடத்தில் இறந்ததால் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.
மம்லூக்கிய அரசர்களில் ஐந்து அரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் ஷாதிலிய்யா தரீக்கா மரபில் இமாம் பூஷ்ரி (ரஹ்) அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மாலிக் மத்ஹபை பின்பற்றி சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.
கனவுகள் இரண்டு வகை உண்டு. கனவில் காணும் காட்சிகள் எதிர்காலத்தில் நாம் அறிந்தோ அறியாமலோ நனவாகும்; நடக்கும்.
மற்றொன்று நாம் கனவில் கண்ட காட்சிகள், விழித்த உடனேயே அதன் சாட்சிகள் இருக்கும். அந்த வகையில் இமாம் புஷ்ரி (ரஹ்) அவர்கள், தம் கனவில் நபிகள் நாயகம் அவர்கள் போர்த்திய போர்வையை விழித்ததும் கண்கூடாகக் கண்டார்கள்; மற்றவர்களும் அதனைப் பார்த்தார்கள்.
நபிகள் நாயகம் அவர்களை கனவில் காணும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் அருள்வானாக! ஆமீன்!!
இந்தத் தொடர்
இன்றுடன்
இத்துடன் முடிந்தது
அனைவரும் படித்து
பயன் பெறுங்கள்.
Comments
Post a Comment