மத்ஹபுகள் உண்மையானது....

மத்ஹபுகள் உண்மையானது....
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13

தொடர்: 80

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•

இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“ஒரு நாள் இரவு, ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்களில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்.

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அலி (அபுல் ஹஸன்)! என்னிடமிருந்து பாரம்பரியமாக வந்த மத்ஹப்களுக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; அவைதான் உண்மையானது" என்று கூறினார்கள்.

( இமாம் அபுல் ஹஸன் அஷ்அரி (ரஹ்) அவர்கள் மிகப்பெரும் சிந்தனையாளர்; மார்க்க விஷயங்களை நன்கு அறிந்தவர்; நான்கு மத்ஹப்களுக்குள் கட்டுப்பட்டு இல்லாமல் புதுமையாக சிந்தித்து செயல்பட்டுக் கொண்டிருந்தவர் (முஜ்தஹித்); அந்த சந்தர்ப்பத்தில் தான் இந்த கனவு தோன்றியது.)

நான் கண் விழித்தபின்  எனக்குள் பல சிந்தனைகள் உண்டானது; நான் இதற்கு முன் அந்த மத்ஹப்களுக்கு மாற்றமாக உள்ள ஆதாரங்களை மக்களிடையே விளக்கி பேசி கொண்டிருந்தேன் என்பதால், மிகுந்த மனக்குழப்பத்துடன் இருந்தேன்.

பின்னர் ரமழானின் நடுப்பத்து நாட்களில் மீண்டும் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டேன்;
அவர்கள், "நான் உமக்கு உத்தரவிட்டதைப் பற்றி என்ன செய்தீர்? ” என்று கேட்டார்கள்.

இமாம் அபுல் ஹஸன் அல் அஷ்அரீ (ரஹ்) ஆகிய நான், "அல்லாஹ்வின் தூதரே! நான் என்ன செய்ய முடியும்? உங்கள் கருத்துக்கள் மூலம் வெளிவந்துள்ள மத்ஹபுகளுக்கு (வேறு பல) பொருத்தமான கருத்துக்களை நான் விளக்கமாக அறிவித்திருக்கிறேன் ; 

மேலும் அல்லாஹ்வைப் பற்றி பேசும் போது ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுவான ஆதாரப்பூர்வமான கருத்துக்களையே நான் பின்பற்றி என் கருத்துகளை மக்களிடம் சொல்லி வந்திருக்கிறேன்" என்று கூறினேன். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் சொற்களில் இருந்து உருவான  மத்ஹப்களே உண்மையானவை;  அவற்றுக்கு ஒத்துழைப்பாக இருங்கள்” என்று கூறினார்கள். 

உடனே தூக்கத்திலிருந்து கண் விழித்தேன்; எனக்குள் பெரும் மனக் கவலையும், துயரமும் ஏற்பட்டது. 

இனி தத்துவ பேச்சுகளையும், விவாதங்களையும் விட்டுவிட்டு குர்ஆன் ஓதுவதிலும் ஹதீஸ்களை வாசித்து அதன்படி அமல் செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்தேன்.

பின்னர் ரமலான் மாதத்தின் 27 ஆம் நாள் இரவு வந்தது; பஸரா நகரின் அன்றைய வழக்கப்படி அந்த இரவில் குர்ஆன் கத்தம் செய்யும் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டேன். 

அந்த நிகழ்ச்சிக்கு குர்ஆன் ஓதுவோர், குர்ஆன் விரிவுரையாளர்கள், மற்றும் அறிஞர்கள், அந்த நகரத்தின் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் ஒன்று கூடுவார்கள். நானும் அவர்களோடு இருந்தேன். 

இந்நிலையில் திடீரென எனக்கு தூக்கம் மேலிட்டது; அதை கட்டுப்படுத்த முடியாமல் வீட்டுக்குச் சென்று உறங்கினேன். 

அந்த இரவில் குர்ஆன் கத்தம் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாததை எண்ணி மிகவும் வருந்தினேன். 

அப்பொழுது நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அவர்கள் என்னிடம், "நான் உமக்கு உத்தரவிட்டதை பற்றி என்ன செய்தீர்?" என்று கேட்டார்கள். 

அப்பொழுது நான், "விவாதம் செய்வதை விட்டுவிட்டு, அல்லாஹ்வின் வேதத்தையும், உங்களின் சுன்னத் -  வழிமுறைகளையும் நான் பற்றிப் பிடித்துக் கொண்டேன்" என்று கூறினேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "விவாதம் செய்வதை விட்டு விடு என நான் உமக்கு உத்தரவிட்டிருக்கிறேன்; மேலும் 'என் சொற்களில் இருந்து உருவான  மத்ஹப்களே உண்மையானவை;  அவற்றுக்கு ஒத்துழைப்பாக இருங்கள்' என்று சொல்லி இருக்கின்றேன்; அவற்றை முழுமையாகப் பின்பற்றுங்கள்" என்று கூறினார்கள். 

அப்பொழுது நான், "அல்லாஹ்வின் தூதரே! முப்பது வருடங்களாக ஆதாரப்பூர்வமாக ஆய்வு செய்து வந்த மத்ஹபுகளில் உள்ள குறைபாடுகளையும் அதன் ஆதாரங்களையும் ஒரே ஒரு கனவின் காரணமாக நான் விட்டுவிட முடியுமா?" என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தன் புறத்திலிருந்து உமக்கு தாராளமாக உதவிகளை செய்ய இருக்கின்றான் என்பதை நான் அறிந்திருக்கவில்லை என்றால் உம்மிடமிருந்து நான் இப்பொழுது செல்ல மாட்டேன். 

நீங்கள் நான்கு மத்ஹபுகளை ஆதரிப்பதன் காரணமாக உங்களுக்கு முழு உண்மைகளையும் ( மத்ஹபுகளில் குறைபாடுகள் இருக்கின்றது என்று சொன்ன உங்கள் கருத்தை) நான் விளக்குகிறேன்; இதை ஒரு கனவு என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

எனக்கு வஹீ வரும் காலத்தில் நான் ஜிப்ரயீல் (அலை) அவர்களை கனவின் மூலம் கண்ட காட்சிகள் அனைத்தும் கனவாக இருந்ததா? பின்னர் நான் நபியாக அறிவிக்கப்படவில்லையா ? 

( ஒரு கனவுதான் என்னை நபியாக ஆக்கியது; அது போலவே இந்த கனவு தான் உங்களை மாபெரும் அறிஞராக ஆக்கும்)

இனி மத்ஹபுகள் சம்பந்தமான விஷயத்தில் என்னை நீங்கள் கனவில் பார்க்க மாட்டீர்; 

திருக்குர்ஆனை ஓதுவதிலும் நபி வழியை முழுமையாக பின்பற்றுவதிலும் தீவிரமாக ஈடுபடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு தன் புறத்திலிருந்து முழுமையான உதவிகளை தாராளமாக செய்வான்" என்று கூறி மறைந்தார்கள்.

பின்னர் நான் உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டேன்;  ஏற்கனவே உள்ள மத்ஹபுகளுக்குப் பின்னால் செல்வது தவறு இல்லையே என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். 

கனவில் அல்லாஹ்வை காணுதல், அல்லாஹ்வை மறுமையில் நேரில் காணுதல், ஷஃபாஅத் - நபிகளாரின் பரிந்துரையின் மூலம் பிரச்சனைகளை நீக்குதல், இன்னும் இது போன்ற விஷயங்களை ஆதரிக்கும் ஹதீஸ்களை  உண்மைப்படுத்த முனைந்தேன். 

இதன் பின்னர் சில விஷயங்களை நான் உணரவும், விளங்கவும் தொடங்கினேன்; ஆனால் அவற்றை எந்த அறிஞர்களும் எனக்கு சொல்லித் தரவில்லை; எந்த புத்தகத்திலும் நான் படித்ததில்லை. 

இது போன்ற அல்லாஹ்வின் உதவிகள் யாவும் நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஏற்கனவே முன்னறிவிப்பு செய்திருந்த சுபச் செய்திதான் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நூல்: தப்யீனு கித்புல் முஃப்தரா அலா அபுல் ஹஸன் அல் அஷ்அரீ

மத்ஹப் சார்ந்த மார்க்கச் சட்டங்களில் உள்ள சின்ன சின்ன குறைகளை முப்பது ஆண்டுகளை செலவழித்து கண்டுபிடித்த பிறகு நபிகள் நாயகத்தின் ஒரே ஒரு உத்தரவை ஏற்று அப்படியே அந்த ஆய்வுகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்ததைப் போன்று நாமும் இஸ்லாத்தை பின்பற்ற வேண்டும்.

நபி (ஸல்) அவர்களின் உத்தரவுக்குப் பிறகு இமாம் அஷ்அரி (ரஹ்) அவர்கள் ஷாஃபியீ மத்ஹபை பின் தொடர்ந்து வாழ்ந்தார்கள்.

ஹிஜ்ரி 260 - 324 / கி.பி. 873 -936 காலகட்டத்தில்  அப்பாஸியா ஆட்சி காலத்தில் வாழ்ந்த மாபெரும் அறிஞர். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை முழுமையாக வடிவமைத்ததில் இவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்