என்னிடம் காட்டிய மரியாதைக்காக...
என்னிடம் காட்டிய மரியாதைக்காக...
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13
தொடர்: 81
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•
ஸலாஹுத்தீன் அய்யூபீ (ரஹ்) அவர்களின் தந்தை அவர்கள் ஹஜ் முடித்துவிட்டு மதீனாவிற்கு ஸியாரத் செய்ய வந்திருந்தார்கள்.
அப்பொழுது மதீனாவின் ஆளுநர் அவர்கள் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்று சிறப்பாக கவனித்துக் கொண்டார்கள்.
ஆளுநர் கூறினார்; "உங்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய புனித அறையை திறந்து காட்ட விரும்புகிறேன்; நீங்கள் மட்டும் தனிப்பட்ட முறையில் நபிகளாரை ஸியாரத்து செய்யுங்கள்; இந்த பாக்கியம் உங்களைத் தவிர வேறு யாருக்கும் கிடைக்கவில்லை"
மன்னர் அவர்கள், "அல்லாஹ்விடம் இருந்து பாதுகாப்பு வேண்டுகிறேன்; பள்ளிவாசலின் ஒரு ஓரத்தில் நின்று நான் ஸியாரத்து செய்து கொள்கிறேன்; நபிகளாருக்கு அருகில் நின்று அவர்களை சந்திக்கும் தைரியமும் துணிச்சலும் எனக்கு இல்லை;
நான் ஒழுக்கம் இல்லாதவன் என எண்ணுகிறேன்; என் உண்மையான நிலை என்ன என்று எனக்கு நன்கு தெரியும்; எனவே நான் இங்கு செல்வது சரியானது அல்ல! கண்ணியமான இடத்தை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக வேண்டி நான் அங்கு செல்லாமல் இருப்பது தான் நல்லது" என்று கூறினார்கள்.
அன்று இரவு மதீனாவை சேர்ந்த ஒருவர் நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டார்; நபி (ஸல்) அவர்கள் அவரிடம், "அல் இஸ்ஸுதீன் அவர்களுடைய ஹஜ்ஜும் ஜியாரத்தும் அல்லாஹ்வினால் ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது என்றும், அவருக்கும் இப்ராஹீமுடைய தாயாருக்கும் மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது என்றும் சொல்லுங்கள்;
ஏனென்றால் அவர் என்னிடம் மிகுந்த மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடந்து கொண்டார் என்று சொல்லிவிடுங்கள்" என சொன்னார்கள்.
நூல்: தைலு மர்அதுஸ் ஸமான்
பாலஸ்தீன் நகரை வென்றெடுத்த ஸலாஹுத்தின் அய்யூபி (ரஹ்) அவர்களின் தந்தை பெயர் நஜ்முதீன் அய்யூபி என்பதாகும்.
ஹிஜ்ரி 569 / கி.பி. 1173 ஆண்டு மரணித்தார். ஹிஜ்ரி 550 களுக்குப் பிறகு இவர்கள் ஹஜ் செய்ததாக வரலாற்று குறிப்புகள் இருக்கின்றன.
Comments
Post a Comment