அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டு
அல்லாஹ்வின் பாதுகாப்பு உண்டு
<=><=><=><=><=><=><=><=><=><=><=><=>
மாதம்: 13
தொடர்: 84
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><><><><>
|•
|•
|•
|•
|•
அபூ மூஸா அத்துர்கீ (ரஹ்) அவர்கள் கலீஃபா அல் முதவக்கில் அவர்களுடைய படை தளபதிகளில் ஒருவராக இருந்தார்.
அவர் மிகப்பெரும் போர்களில் பலமுறை கலந்து கொண்டிருக்கிறார்; ஆனால் அவருக்கு ஒரு போதும் காயங்கள் ஏற்பட்டதே இல்லை; அதே நேரம் அவர் போர் செய்யும் பொழுது கவச உடைகள், பாதுகாப்பு அணிகலன்கள் எதையும் அணிவதும் இல்லை.
இந்நிலையில் அவரிடம் ஒருவர் இது குறித்து கேட்டார்; அதற்கு அவர், "நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; 'அல்லாஹ்வின் தூதரே! எனக்காக நீங்கள் அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்' என்று நான் கேட்டுக் கொண்டேன்.
அப்பொழுது அவர்கள், "உமக்கு எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் ஏற்படாது; ஏனென்றால் எனது வழித்தோன்றல்களில் ( - அஹ்ல பைத்) ஒருவரை காப்பாற்றி இருக்கிறீர்கள்;
கலீஃபா அல் முதவக்கில் அவர்கள் காட்டு மிருகங்களிடம் இவரை தூக்கி எறிந்து விடு என்று சொல்லியும் அவரை நீங்கள் காப்பாற்றியதால் நான் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குவேன்" என்று சொல்லி இருக்கிறார்கள்" எனக் கூறினார்.
நூல் : அந்நுஜுமுஸ் ஸாஹிரா
அப்பாஸியா கலீஃபா ஜஃபர் அல் முதவக்கில் அவர்கள் கி.பி. 847 - 861 ஹிஜ்ரி 232 - 247 காலகட்டத்தில் ஈராக் பாக்தாத் நகரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்.
இவருடைய படையில் தான் அபு மூஸா அத்துர்கீ (ரஹ்) அவர்கள் படைத்தளபதியாக செயல்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment