கொலைகார இஸ்ரேலே! அமெரிக்காவே! காசா மீதான போரை நிறுத்து
கொலைகார இஸ்ரேலே!
அமெரிக்காவே!
காசா மீதான போரை நிறுத்து
==================================
பாலஸ்தீன் காசா மீது 712 வது நாளாக இன்று வரை யுத்தம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த யுத்தத்தில் இதுவரை 65000/ ஆயிரம் பேருக்கும் மேலாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் 15 வயது முதல் 65 வயது வரையிலான ஆண்கள் சுமார் 25,211 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என Palestinian Ministry of Health - பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.
18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில்
18,592 பேர் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
10,328 பெண்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதாக Washington Institute — May 19, 2025 அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.
972 Magazine மற்றும் The Guardian, Local Call ஆகிய ஊடகங்களின் கூற்றுப்படியும், இஸ்ரேலின் உள்நாட்டு உளவுத் தரவுப் பட்டியலின் அடிப்படையிலும் Hamas மற்றும் PIJ போராளிகள் 8,900 பேர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்று தரவுகள் கூறுகிறது.
732 பேர் பட்டினியால் இறந்து இருக்கிறார்கள்; இது அல்லாமல் பட்டினியால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 432 என்று Gaza Health Ministry ஆய்வு தகவல் கூறுகிறது.
Ministry of Health - காசா சுகாதார அமைச்சகம் மேற்கண்ட விபரங்கள் அனைத்தையும் ஊடகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறது.
இன்னும் இந்த மரணங்களின் விபரங்களை இப்படி விவரித்துக் சொல்கிறது.
இறந்த ஒவ்வொருவருடைய பெயர், பெற்றோருடைய பெயர், வயது, இறந்த நேரம், இறந்ததற்கான காரணம், அவர்கள் வசித்த ஊர் போன்ற அனைத்து விபரங்களையும் அவர்களின் பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் மரணித்தபோது உள்ள புகைப்படங்களோடு பதிவு செய்து வைத்திருக்கிறது.
மேலும் 211000 பேருக்கும் மேலாக காயம் அடைந்திருக்கிறார்கள்.
72% வீடுகள் கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு விட்டன. சுமார் 3.50 லட்சம் வீடுகள் இடிந்து இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
ஐ.நா. சபை பிரித்துக் கொடுத்திருக்கின்ற பாலஸ்தீன நாடு சுமார் 6000 சதுர கிலோமீட்டர் கொண்டதுதான். அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் பாதி என உள்ளடக்கிய நிலப்பரப்பு மட்டும் தான் பாலஸ்தீன் நாட்டின் அளவு.
அதில் காசா நகரம் 426 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு ஆகும். அதாவது இன்றைய சென்னை அளவு.
இப்பொழுது 22 லட்சம் மக்கள் தொகையினர் மட்டுமே வசிகின்றனர். நமது தமிழ்நாட்டில் உள்ள நான்கு மாவட்டங்களின் அளவிலான ஒரு நாட்டை பிடிப்பதற்கு வல்லரசு நாடான, அணு ஆயுத பலம் கொண்ட இஸ்ரேலுக்கு 712 நாட்களா?
ஹமாஸ் போராளிகள் தொடர்ந்து பலமாக தாக்கிக் கொண்டே இருப்பதால் தான் இஸ்ரேல் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
712 நாட்களாக ஏன் யுத்தம் செய்ய வேண்டும்? அப்படி என்றால் கசாவிலிருந்து பலமான எதிர்த்தாக்குதல் நடத்தப்படுகிறது என்று தானே பொருள்?
காசாவில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராக உலகம் முழுவதும் 46000/ ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன.
ஒரு சில நாடுகளில் ஒரு சில கூட்டங்களில் 50,00000/ லட்சத்திற்கும் மேலாக மக்கள் கூடி எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் வாழும் மக்களின் மனங்களை பாலஸ்தீன மக்கள் தம் உயிர்களைக் கொடுத்து வென்று இருக்கிறார்கள்.
உலக மக்களின் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
உலகத்தில் இந்த வெற்றி முற்றிலும் வித்தியாசமானது.
அந்த வகையிலான ஒரு கூட்டம் இன்று மாலை 3 மணி அளவில் லாங்க்ஸ் கார்டன் சாலை புதுப்பேட்டை சென்னையில் நடைபெற உள்ளது.
Comments
Post a Comment