ஸஹீஹ் - தரமான நபிமொழி

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 68.  

ஸஹீஹ் -  தரமான நபிமொழி 
==============================

ஹதீஸ் கலை வல்லுநர் இமாம் தப்ரானி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்களிடம் ஒரு ஹதீஸின் தரம் குறித்து கேட்டேன்; அது இந்த ஹதீஸ் தான்! 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். 

(உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.

இந்த ஹதீஸின் தரம் குறித்து நான் கேட்டதற்கு ஸஹீஹ் - தரமான நபி மொழி தான் என மூன்று முறை கூறினார்கள். 

நூல் : அல் முஸ்தத்ரஃப் 

பொதுவாகவே ஒவ்வொருவரும் நெருக்கடிகளில் உழலும் போது தான் நல்ல கனவுகள் தோன்றும். அதில் தீர்வுகள் கிடைக்கும். அவ்வாறுதான் இமாம் தப்ரானி ரஹ் அவர்களின் சந்தேகத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்