நிம்மதி வேண்டுமா?
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
மாதம் : 8
தொடர் : 70
நிம்மதி வேண்டுமா?
=======================
ஷைகு அபூ இஸ்ஹாக் அஷ்ஷீராஜி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நான் பக்தாதில் உறங்கிக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டேன்; அவர்களோடு அபூ பக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் குறைவான அறிவிப்பாளர்கள் வழியாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள பல ஹதீஸ்களை அறிவித்துத் தாருங்கள்;
அவற்றை உங்களிடம் இருந்து நேரடியாக எனக்கு கிடைத்த நற்செய்தியாக நான் கருதுவேன்; உலகில் அதை கொண்டு நான் கண்ணியப்படுத்தப்படுவேன்; மேலும் அதுவே எனக்கு மறுமையில் பாதுகாப்பாகவும் இருக்கும்" என்று கூறினேன்.
நபி (ஸல்) அவர்கள், "யா ஷைகு" என என்னை அழைத்தார்கள்; எனக்கு 'ஷைகு' என பெயர் வைத்து என்னோடு பேசினார்கள்; அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
பிறகு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்; "யார் நிம்மதியை தேடுகிறாரோ அவர், மற்றவர்களுக்கு நிம்மதியை தருகிற விஷயத்தில் கவனமாக இருக்கட்டும்" என்று கூறினார்கள்.
நூல் : ஸியரு அஃலாமு நுபலா
இந்த வரலாற்றில் கண்டவாறு அபூ இஸ்ஹாக் அஷ்ஷீராஜி (ரஹ்) அவர்களுடைய பெயரோடு ஷைகு - பெரியவரே ! எனும் சொல் ஒட்டிக்கொண்டது.
அந்த சொல்லே அவருக்கு அடையாளமாகவும், பெயரையும் புகழையும் கூட கொடுத்து விட்டது.
இவர் கேட்டுக் கொண்டது போல் அரிதான ஹதீஸ்களை கேட்டு அறிவித்து அதன் வழியாக கண்ணியம் கிடைப்பதை விட வேறு வழிகளில் அவருக்கு கண்ணியம் கிடைத்துவிட்டது.
அதைவிட எது கிடைத்தால் தனக்கு நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தாரோ அதைவிட பிறர் நிம்மதியாக இருந்தாலே நமக்கும் நிம்மதியும், சந்தோஷமும் பெருகும் என்பதையும் இந்த வரலாறு உணர்த்துகிறது.
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611
http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ
Comments
Post a Comment