இஸ்லாத்தை விட்டு விடாதே!

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 71

இஸ்லாத்தை விட்டு விடாதே!
==============================

அபூ அலீ அல் ஹஸன் அல்ஹிகாரீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நான் ஒரு வீட்டுக்குள் நுழைவது போன்று கனவு கண்டேன்; அங்கே நபி (ஸல்) அவர்கள் ஒருக்கழித்து படுத்திருந்த நிலையில் நான் பார்த்தேன்.

கிப்லா திசையில் அவர்களுடைய சட்டை கழட்டி வைக்கப்பட்டிருந்தது;
நான் சென்று இடது தோள் புஜத்திற்கு நேராக அமர்ந்தேன்; நபி ஸல் அவர்கள் என் பக்கம் திரும்பி, "நீ இஸ்லாம் மார்க்கத்தை விட்டு விடாதே!" என்று கூறினார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்விற்கு மிகவும் அச்சப்படுகிறவன்; நான் எப்படி தீனுல் இஸ்லாத்தை விடுவேன்?; நான் எனது வலது கரத்தால் இடது கரத்தின் விரல்களோடு விரலாக கோர்த்து பிடித்துக் கொண்டு நான் இஸ்லாத்தை பற்றிப் பிடித்துக் கொள்வேன் -  அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்னக ரசூலுல்லாஹ் " என்று சொன்னேன். 

நூல் : ஹுல்யதுல் அவ்லியா 

நல்ல மனிதர்களாக இருப்பவர்களை மேலும் அவர்கள் நல்லவர்களாகவே தொடர்ந்து நீடிக்க நபி (ஸல்) அவர்கள் கனவுகளில் காட்சி அளித்து அறிவுரை பகர்வது வழக்கம்! அது போன்ற ஒரு அறிவுரை தான் இது!

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்