குர்ஆன் விஷயத்தில் நாம் என்ன சொல்வது?

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 57

குர்ஆன் விஷயத்தில் 
நாம் என்ன சொல்வது?
==============================

 

ஹிஜ்ரி 250 களுக்கு முன்பு பக்தாதில் வாழ்ந்த முஹம்மது பின் மன்சூர் அத்தவ்ஸி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல் ) அவர்களை நான் கனவில் கண்டேன்; அவர்களோடு இரண்டு மனிதர்கள் இருந்தார்கள்; அவர்கள் இருவருடைய முகத்தையும் நான் அறிவேன்.

நான் : அல்லாஹ்வின் தூதரே! குர்ஆன் விஷயத்தில் நான் என்ன சொல்வது?

"குர்ஆன் அல்லாஹ்வுடைய வேதம்; படைக்கப்படவில்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"அவ்விருவரிடமும் நீங்கள் இருவரும்தான் இதற்கு சாட்சி" என்று கூறினேன்; அப்பொழுது அவ்விருவரும் விழிப்பு நிலையில் இருப்பது போன்று நான் உணர்ந்தேன்.

நூல்: இஃதிகாத் அஹ்லுஸ் ஸுன்னா

ஹிஜ்ரி 250 காலகட்டத்தில் குர்ஆன் படைக்கப்பட்டதா? இறைவேதமா எனும் விவாதம் விண்ணை முட்டிக்கொண்டு இருந்தது. 

அந்த நேரத்தில் நபிகள் நாயகம் அவர்களின் இந்த தீர்ப்பு, முஹம்மது பின் மன்சூர் அத்தவ்ஸி (ரஹ்) அவர்களுக்கும், அவரை நம்புகிற கூட்டத்தினருக்கும் சிறந்த தீர்வாக வழிகாட்டியாக அமைந்தது.

61. ஜஸாகல்லாஹு கைரா 

ஸாலிஹுந் நாஜி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; நான் அல் ஹைஸம் அர்ராஜி (ரஹ்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்; 

நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள், "நீங்கள் தான் அழகிய தொனியில் குர்ஆன் ஓதும் அல் ஹைஸமா?" என்று கேட்டார்கள். 

அதற்கு நான், "ஆமாம்! அல்லாஹ்வின் தூதரே...!" என்று சொன்னேன். 

அதற்கு பதிலாக நபி (ஸல்) அவர்கள், "ஜஸாக்கல்லாஹ் கைரா - அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியை வழங்கட்டும்" என்று கூறினார்கள்.

நூல் : அல் மனாமாத்

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்