எனக்கும் நபிகளாருக்கும் இடையே ஏன் நேரம் ஒதுக்கவில்லை

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 59

எனக்கும் நபிகளாருக்கும் 
இடையே ஏன் நேரம் ஒதுக்கவில்லை 
======================================================================

அபூ உபைதுல்லாஹ் அல் காசிம் பின் ஸலாம் (ரஹ்) அவர்கள் தமது ஹஜ்ஜை முடித்துக் கொண்டு இராக்கிற்கு திரும்ப வாடகைக்கு வாகனத்தைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

பொருத்தமான வாடகைக்கு மதினாவில் இருந்து வாகனம் அமையாததால் நாட்கள் சென்று கொண்டிருந்தன; பின்னர் ஒரு நாள் ஒரு வாகனத்தை பேசி முடிவு செய்து விட்டார்கள். இந்நிலையில் ஊருக்கு புறப்பட வேண்டிய நாளின்  இரவில் கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஒரு வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த வீட்டின் வாசலில் ஒரு கூட்டத்தினர் மக்கள் செல்வதைத் தடுத்து நிறுத்தி, சிறுக சிறுக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

மக்கள் உள்ளே சென்று நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லுகிறார்கள்; முஸாஃபஹா செய்கிறார்கள்.

இந்நிலையில் நான் உள்ளே செல்ல முயற்சிக்கும்போதெல்லாம் நான் நுழைந்து விடாமல் தடுக்கப்பட்டு கொண்டே இருந்தேன்.

"நானும் நபிகள் நாயகம் அவர்களும் சந்திப்பதற்கு ஏன் நேரம் ஒதுக்கவில்லை" என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீர் அங்கே செல்லக்கூடாது; அவர்களுக்கு ஸலாம் சொல்லக்கூடாது; ஏனென்றால் நீங்கள் தான் நாளை காலை மதீனாவில் இருந்து வெளியேறி இராக்கிற்கு செல்கிறீர்களே!" என்று சொன்னார்கள்.

"நிச்சயமாக நான் இப்பொழுது மதீனாவை விட்டும் வெளியே செல்ல மாட்டேன்" என்று சொன்னேன்; உடனே அவர்கள் என்னிடத்தில் ஓர் உறுதி மொழியைப் பெற்றுக் கொண்ட பிறகு நான் நபிகளாரை சந்திக்க நேரம் ஒதுக்கினார்கள். 

நான் உள்ளே சென்று நபிகளாருக்கு ஸலாம் சொன்னேன்; முஸாஃபஹா செய்தேன்.

பின்னர் எனது ஊருக்கு செல்லும் பயண ஏற்பாட்டை நிறுத்தி விட்டேன்; நிரந்தரமாக மதீனாவிலேயே தங்கி விட்டேன்.

இவரோடு வந்திருந்த இராக்வாசிகள் மதீனாவை விட்டும் சென்ற மூன்று நாட்களுக்கு பிறகு அங்கேயே இவர்கள் மரணித்து விட்டார்கள்.

நூல் : வஃபயாதுல் அஃயான் வ அன்பாவு  அஹ்லுஸ் ஸமான் 

உலகில் நபிகள் நாயகம் அவர்களைக் கனவில் காண்பது உலகிலேயே சொர்க்கத்தில் இருப்பதற்கு சமமானது. 

எனவே சொர்க்கம் போன்ற பூமியில் இருப்பதை விட உண்மையான சொர்க்கத்திற்கு செல்வதே சிறந்தது என்று இறைநேசர்கள் எண்ணும் போது இறைவன் தன் பால் அவர்களை அழைத்துக் கொள்கிறான். 

அப்படி இறைவனின் அழைப்பை ஏற்று சென்றவர்கள் தாம்
அபூ உபைதுல்லாஹ் அல் காசிம் பின் ஸலாம் (ரஹ்) அவர்கள்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்