ஓதுவோர் உம்மைக் கண்டு பெருமைப் படுகின்றனர்

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 59

ஓதுவோர் உம்மைக் கண்டு பெருமைப் படுகின்றனர்:
==============================

அஹ்மத் பின் ஸஹல் அத்தமீமீ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது;

அலீ பின் ஹம்ஸா அல் கஸாயீ (ரஹ்) அவர்கள் சொல்ல நான் கேள்வி பட்டுள்ளேன். மக்களிடையே குர்ஆன் ஷரீஃபை நான் ஓதி முடித்த அந்த இரவில் கனவில் நபி (ஸல்) அவர்களைக் கண்டேன். 

நபி ஸல் : நீங்கள் தான் கஸாயியா? 

நான் : ஆமாம்! அல்லாஹ்வின் தூதரே....

நபி ஸல் : அலீ பின் ஹம்ஸாவும் நீர்தானோ?....

நான் : ஆமாம்! அல்லாஹ்வின் தூதரே....!

நபி ஸல் : எனது உம்மத்தினரிடம் நேற்று குர்ஆன் ஓதியது நீங்கள் தானே.....?

நான் : ஆமாம்! அல்லாஹ்வின்  தூதரே....!

நபி ஸல் : என்னிடமும் கொஞ்சம் ஓதி காட்டுங்கள்....

நான் :

 وَالصَّافَّاتِ صَفًّا (1) فَالزَّاجِرَاتِ زَجْرًا (2) فَالتَّالِيَاتِ ذِكْرًا (3) إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ (4) رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ (5) 

எனும் இந்த அத்தியாயத்தை தவிர வேறு எதையும் என்னால் ஓத இயலவில்லை; இந்த அத்தியாயத்தை நான் ஓதினேன்.

நபி ஸல் : நன்றாக ஓதினீர் ; இன்னும் கொஞ்சம் ஓதுங்கள்....

நான் : 
 فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ (94) 
எனும் வசனம் வரை  ஓதினேன். 

நபி ஸல் : மிக நன்றாக ஓதினீர்கள்.... எழுந்து நில்லுங்கள்; உங்களைக் கொண்டு நான் பெருமைப்படுகிறேன்; 

மேலும் காரிகள் ( அழகு துணியில் குர்ஆன் ஓதுவோர்)  அல்லது வானவர்கள் உங்களைக் கண்டு பெருமைப்படுகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : தாரிக் பக்தாத்

அழகிய குரலில் குர்ஆன் ஷரீஃபை ஓதுவது, பிறருக்கு ஓதி கொடுப்பது கூட நபி (ஸல்) அவர்களின் கவனத்திற்கு செல்லும் என்பதை இந்த நிகழ்வு நினைவுறுத்துகிறது.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்