இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்கள் ஏன் அதிகம் ஈடுபட்டார்கள்?

இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகம் 
====================================

தொடர் :......3

இந்திய சுதந்திரப் போரில் 
முஸ்லிம்கள் ஏன் அதிகம் ஈடுபட்டார்கள்?
====================================

'வீக்லி ஆஃப் இந்தியா' எனும் பத்திரிக்கையில் குஷ்வந்த் சிங் என்பவர், "முஸ்லிம்கள் தமது சதவிகிதத்தை விட அதிகமாக இந்திய சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள்" என்று கூறுகிறார்.

முஸ்லிம்கள் இந்திய சுதந்திரத்திற்காக அதிகம் தம்மை அர்ப்பணித்துக் கொண்டது ஏன் தெரியுமா? இதற்கு மூன்று காரணங்கள் உண்டு. 

ஒன்று : 

وَمَا لَكُمْ لَا تُقَٰتِلُونَ فِى سَبِيلِ ٱللَّهِ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلرِّجَالِ وَٱلنِّسَآءِ وَٱلْوِلْدَٰنِ ٱلَّذِينَ يَقُولُونَ رَبَّنَآ أَخْرِجْنَا مِنْ هَٰذِهِ ٱلْقَرْيَةِ ٱلظَّالِمِ أَهْلُهَا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ وَلِيًّا وَٱجْعَل لَّنَا مِن لَّدُنكَ نَصِيرًا

பலவீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் (எதிரிகளிடம் சிக்கி இருக்கிறார்கள்;) 

அவர்களோ "எங்களைப் படைத்தாள்பவனே! அநியாயக்காரர்கள் நிறைந்த இந்த ஊரிலிருந்து எங்களை வெளியாக்குவாயாக! 

எங்கள் காரியத்திற்குப் பொறுப்பேற்பவரை உன் சந்நிதானத்திலிருந்து ஏற்படுத்துவாயாக! உன் சந்நிதானத்திலிருந்து எங்களுக்கு உதவி யாளரை ஏற்படுத்துவாயாக!" என்று பிரார்த்தனை செய்கிறார்கள்; 

இத்தகையவர்களை எதிரிகளிடமிருந்து விடுவிப்பதற்காக அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் ஏன் யுத்தம் செய்யாமல் இருக்கிறீர்கள்? 4: 75 
(காண்க 9:13)

عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ، و وَمَنْ قُتِلَ دُونَ دَمِهِ فَهُوَ شَهِيدٌ، وَمَنْ قُتِلَ دُونَ أَهْلِهِ فَهُوَ شَهِيدٌ»

நபிகள் நாயகம் அவர்கள் கூறுகிறார்கள்;

யார் தன் நிலத்தை (நாட்டை) பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவர் ஷஹீத் -  தியாகி ஆவார்.

யார் தன்னை பாதுகாத்து கொள்வதில்  போரிட்டு கொல்லப்படுகிறோரோ அவரும் ஷஹீத் - தியாகி ஆவார்.

யார் தனது குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீத் - தியாகி ஆவார்.

நூல் : திர்மிதீ 1421

حب الوطن من نصف الايمان 
" தாய் நாட்டை நேசிப்பது இறை நம்பிக்கையில் சரி  பாதிக்கு நிகரானது" என்றொரு பழமொழி அரபு மொழியில் உண்டு.

"அநீதிக்கு எதிராக போர் செய்" என திருக்குர்ஆன் கட்டளை இடுவதாலும், 

நபிகள் நாயகம் அவர்கள், "தன்னையும், தன் குடும்பத்தினரையும், தான் வசிக்கும் நாட்டையும் பாதுகாக்கும் போது இறந்து விட்டால் அவர் தியாகி -  சொர்க்கவாதி "  என்று சொல்லி உற்சாகப்படுத்தி இருப்பதாலும் முஸ்லிம்கள் சுதந்திர போரில் வீறு கொண்டு எழுந்து செயல்பட்டார்கள்.

இரண்டு : 

800 வருடம் இந்தியாவை இஸ்லாமியர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்; இஸ்லாமியரிடமிருந்து ஆட்சி பறிக்கப்பட்டதால் அதை மீட்க முதலில் களமிறங்கியவர்கள் முஸ்லிம்கள். 

மூன்று : 

ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களின் தலைமையகமாக துருக்கி இருந்தது;  உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரு தலைவர் கலீஃபா -  ஆட்சியாளர் இருந்து வந்தார்.  அதை இந்த ஆங்கிலேயர்கள் தகர்த்தார்கள். 

ஒற்றை தலைமையை தகர்த்த வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்பதற்காகவும் சுதந்திரப் போரில் முஸ்லிம்கள் அதிகமாக பங்கு கொண்டார்கள்.

தியாகங்கள் தொடரும்.......

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்