நூல் வெளியீட்டு விழா அறிவமுதம் பருக! அனைவரும் வருக!!

நூல் வெளியீட்டு விழா 
அறிவமுதம் பருக! அனைவரும் வருக!! 
====================================

பைபிள் கூறும் 
தேற்றவாளன்-  (முஹம்மது) யார்?
================================

யோவான் 14:16 . நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனே கூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

17, உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.

இந்த இரண்டு வசனத்திலும் உள்ள 'தேற்றவாளன்' எனும் சொல் முஹம்மது நபி  (ஸல்) அவர்களைக் குறிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இயேசு தம் மக்களுக்கு முஹம்மது நபி அவர்கள் குறித்து இந்த இரண்டு வசனங்களில் "தேற்றவாளன்" எனச் சொல்லி முன்னறிவிப்பு செய்திருக்கிறார்.

"தேற்றவாளன்" எனும் சொல்லை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம்.

தேற்றம் / வாளன் : தேற்றம் என்றால் நம்பிக்கை, உறுதி, ஆறுதல், மன உற்சாகம் எனப் பொருள்.

வாளன் என்றால் உடையவன், கொண்டவன், பெற்றவன் என்று பொருள்.

அதாவது, மனதில் உறுதியும் நம்பிக்கையும் கொண்டவன் என்றும், நல்ல பண்புடைய ஒருவரைப் புகழ்ந்து சொல்ல தேற்றவாளன் எனும் சொல்லை பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 

பைபிளில் 'தேற்றவாளன்' எனும் சொல்லுக்கு பரிசுத்த ஆவி ( கர்த்தருடைய ஆன்மா) எனும் பொருளைப் பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

'ஆனால் பரிசுத்த ஆவி' எனும் பொருள் பல இடங்களில் பொருந்தவில்லை; ஏனென்றால் சில இடங்களில் மனிதனை குறிப்பிடுவது  போன்று சில வசனங்கள் அமையப் பெற்றுள்ளது. 

சில வசனங்கள் கர்த்தர் / இறைவனை குறிப்பிடுவது போன்று அமையப் பெற்றுள்ளது.

கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு வரை கிரேக்க மொழியில் நீமா ( Pneuma) (தேவதூதன்) என சொல்லி வந்தவர்கள், நபிகள் நாயகம் அவர்கள் 6 ஆம் நூற்றாண்டில்  பிறந்த பிறகு பாராகிளிட் (Paraclete) "சத்திய ஆவியாகிய" என்று மாற்றிக் கொண்டார்கள்.

யோவான் 14: 16, 17, வது வசனத்தில் தேற்றவாளனைக்  கர்த்தர் ( அல்லாஹ்) அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது 16: 7- 13 வரை உள்ள வசனத்தில் இயேசு ( ஈஸா) அனுப்புவார் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பல முரண்பாடுகள் உள்ளது.

மேலும் கிறிஸ்தவர்கள் இந்த தேற்றவாளரை திரித்துவ நிலையில் பரிசுத்த ஆவியானவராக ஆக்கிவிட்டார்கள்.

யோவான் 16: 13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ் சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 

இந்த வசனத்தில் சத்திய ஆவியாகியவர் 'எதையும் சுயமாக பேசாமல், தான் கேள்விப்பட்டதை பேசுவார்' என்று இருக்கின்றது.

பரிசுத்த ஆவி என்பவர் கடவுள் என கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; அப்படி என்றால் கடவுளாக நம்பப்படுகிற இவரால் சொந்தமாக பேச முடியாதா? இவர் யாரிடத்தில் இருந்து கேள்விப்பட்டதை சொல்கிறார்? என்ற கேள்வி எழுகின்றது. 

இந்த வசனத்தில் உள்ள பரிசுத்த ஆவி எனும் சொல் கடவுளை குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டால் இந்த வசனம் தவறாக மாறுகிறது. 

பரிசுத்த ஆவி எனும் சொல்லுக்கு பகரமாக 'தேற்றவாளர்' என்று இருந்தால் அது சரியாக பொருந்தி போகும்; அது நபிகள் நாயகம் அவர்களை குறிப்பதாகவும் ஆகும்.

யோவான் 16:13 வசனம் கூறுவது போலவே திருக்குர்ஆனில் ஒரு வசனம் உள்ளது.

وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ (4)

தன் மனம் விரும்பியவாறு அவர் பேசவில்லை; (அவர் பேசும் பேச்சுகள் அனைத்தும் இறைவனால்) அறிவிக்கப்படும் வஹியே (வார்த்தையே) தவிர வேறு எதுவும் இல்லை. 53: 3,4.

பைபிளின் வசனத்தை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துவது போல் அமைந்துள்ளது. எனவே பைபிள் வலியுறுத்தியுள்ள தேற்றவாளரை தேடி கிறிஸ்தவர்கள் அனைவரும் இஸ்லாம் எனும் மந்தைக்குள் வர வேண்டும். 

இந்தக் கருத்துகளை வலியுறுத்தும் வகையில் "பவுலின் ஆவியின் பிரமாணம்" எனும் நூல் இன்று மதீனா பள்ளிவாசலில் வெளியிடப்பட இருக்கிறது. அனைவரும் பங்கு கொண்டு பயன்பெறுங்கள்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்