அரசியல் ஆளுமை:
1500 வது மீலாது விழா ஜும்ஆ உரை
தாஹா நபியின்
தலைமைத்துவ பண்புகள்
==================================
முழுமையான கட்டுரையைக் காண...
அரசியல் ஆளுமை:
====================
நபிகள் நாயகம் அவர்களுடைய அணியில் பெரும்பாலும் ஏழைகளே இருந்தார்கள்; பொருளாதாரத்தில் வலிமை குன்றியவர்களாகவே இருந்தார்கள்; ஆனாலும் வழியென திணிக்கப்பட்ட அனைத்து போர்களிலும் வெற்றி வாகைச் சூடினார்கள்.
ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு மக்கா வெற்றிக்குப் பின்னர் மக்காவிலிருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் ஜிஃரானா எனும் இடத்தில் வாழ்ந்து வந்த 'பனீ ஹவாஜீன்' கோத்திரத்தார் நபிகளாரை எதிர்த்து போரிட்டுத் தோல்வியடைந்தார்கள்.
இந்தப் போரில் 24,000 ஒட்டகங்கள், 40,000 ஆடுகள், 4000 அவுன்ஸ் வெள்ளி, 6000 கைதிகள் ஆகியவை முஸ்லிம்களுக்குக் கிடைத்தன.
இஸ்லாமியச் சட்டப்படி போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பகுதி அரசுக்கு சென்று விடும். மற்றவை போரில் ஈடுபட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் (போர் வீரர்களுக்கு ஊதியம் கொடுப்பது என்ற நடைமுறை அன்று கிடையாது)
எனவே, முஸ்லிம் வீரர்கள் தமக்குக் கிடைக்க இருக்கும் பெரும் போர்ப் பரிசுகளுக்காகக் காத்திருந்தனர்.
ஆனால், நபிகளாரின் சிந்தனையோ வேறு விதமாக இருந்தது. ஹவாஜீன்களின் எதிர்ப்பை மழுங்கச் செய்து அவர்களை இஸ்லாத்தில் சேர்த்து விடவேண்டும் என்பதே நபிகளாரின் நோக்கமாக இருந்தது.
கைப்பற்றப்பட்ட பொருட்களைத் திருப்பித்தரவும், கைதிகளை விடுவிக்கவும் நபிகளார் விரும்பினார்கள். அரசுக்கு வரவேண்டிய ஐந்தில் ஒரு பகுதி செல்வத்தைப் பற்றி முடிவு எடுக்கும் அதிகாரம் நபிகளார் கையில் இருந்தது.
ஆனால், முஸ்லிம் வீரர்களுக்குச் சேர வேண்டிய பொருட்களைத் திருப்பித் தருவது குறித்து அவ்வீரர்கள் தாம் முடிவு எடுக்க வேண்டும்.
இத்தகைய சூழலில் தோல்வியுற்ற ஹவாஜீன்கள் பெருமானாரிடம் தம் மீது கருணை காட்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
போரில் கிடைத்த பொருட்களில் பெரும் பகுதி வீரர்களுக்கே போய்ச் சேரும் என்பதாக நபிகளார் எடுத்துக் கூறினார்கள்.
அத்தோடு, அவர்களை இஸ்லாத்தில் இணைந்து விடுமாறும் கூறினார்கள். அதனை ஹவாஜீன்கள் ஏற்றுக் கொண்டு, தமது பொருட்களைத் திருப்பித்தருமாறு மீண்டும் வேண்டினார்கள்.
முதலில் நபிகள் நாயகம் அவர்கள் தமது பங்கையும் அவர்களது ஹாஷிம் கோத்திரத்தாருக்கு உரிய பங்கையும் திருப்பித்தர முன்வந்தார்கள்.
நபிகளாரின் முன் மாதிரியைப் பின்பற்றி ஒரு சிறு பிரிவினரைத் தவிர பெருவாரியான மக்கத்து முஹாஜிர்களும், அன்சாரிகளும் தமது பங்குகளை ஹவாஜீன்களுக்குத் திருப்பித் தருவதற்கு முன்வந்தனர்.
போர்ப் பொருள்களையும், கைதிகளையும் திருப்பித் தர மறுத்தவர்களுக்கு பெருமானார் ஸல் அவர்கள் கணிசமான ஈட்டுத்தொகை கொடுத்து அவர்களையும் சம்மதிக்க வைத்தனர். இவ்வாறு அனைத்து ஹவாஜீன்களும் விடுவிக்கப்பட்டனர்.
அதேநேரம் அனைத்து ஹவாஜீன்களும் இஸ்லாத்திற்கு இணைந்து இன்பமாக வாழ்ந்தார்கள். நிலங்களை வெற்றி கொள்வதை விட உள்ளங்களை வெற்றி கொள்வதே பெருமானாரின் இலக்காக இருந்தது.
நபிகள் நாயகம் அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளுமுறை, இதுவரை எவரும் கையாண்டிறாத முறையாக இருந்தது.
இந்த நிகழ்வுக்கு பிறகு தான் அல்லாஹ்
وما أرسلناك إلا رحمة للعالمين} (الأنبياء:107)
நபியே உம்மை நாம் அகிலத்தாருக்கு அருளாகவே அன்றி அனுப்பி வைக்கவில்லை 21: 107 என்ற வசனத்தை அல்லாஹ் அருளினான்.
புகாரி, முஸ்லிம், நஸாயீ, அபூதாவூத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களின் தொகுப்பு தான் மேலுள்ள கருத்து.
தாஹா நபியின் தலைமைத்துவ பண்புகள் எனும் தலைப்பில் இந்த கட்டுரை முழுமையாக இடம் பெற்றுள்ளது.
இன்று ஜும்ஆ பயானுக்காக தயார் செய்யப்பட்டுள்ள கட்டுரை.
வேண்டுவோர் கீழ்காணும் தளத்தில் வாசியுங்கள்.
மேலிருந்து மூன்றாவது கட்டுரையாக இது இடம் பெற்றுள்ளது. அது இடம்பெற்றுள்ள இடத்தில் ஒரு பூ அடையாளம் இடப்பட்டுள்ளது.
https://bmkmanbayee.blogspot.com/p/blog-page_12.html
http://bmkmanbayee.blogspot.com/2025/08/blog-post_27.html
http://youtube.com/post/Ugkxy-vEBQzKsND5xP-XFdiO_DQaMW4RfTRb?si=nnCl-LKTaYB5mUZy
Comments
Post a Comment