ஆங்கிலேயர் மீது முதல் தாக்குதல் 23 ஜூன் 1757 பிளாசிசிப் போர்

இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள் 
====================================

தொடர் : .....6

ஆங்கிலேயர் மீது முதல் தாக்குதல் 
23 ஜூன் 1757 பிளாசிசிப் போர் 
====================================

பங்களாதேஷ், பீகார், ஒரிசா, கல்கத்தா ஆகிய இன்றைய நகரங்களை உள்ளடக்கிய மாபெரும் நிலப்பரப்புக்கு பெயர் பெங்கால் என்று அன்று சொல்லுவார்கள்; 

இந்த நிலப்பரப்பின் ஆட்சியாளராக நவாப் சிராஜுத் தவ்லா அவர்கள் இருந்தார்கள்.

இந்த நிலப்பரப்பு மிகவும் வளமான, வருவாய்கள் நிறைந்த ஒரு பகுதி;  மக்கள் செழிப்பாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கொண்டிருந்த நிலப்பரப்பும் கூட.

மிர்ஸா முஹம்மது ஹைதர் ஜாங், ஆமினா பேகம் தம்பதியருக்கு மகனாக மிர்ஸா முஹம்மது சிராஜ் தவ்லா அவர்கள் 1733 ஆம் ஆண்டு பிறந்தார்கள். 

பிறந்தது முதலே தனது தாயின் தந்தையான /  தாத்தா /  நவாப் அலி வர்தி கான் அவர்களிடம் வளர்ந்தார்கள். 1756 ஆம் ஆண்டு தாத்தா அலி வர்தி கான் அவர்கள் இறந்ததும் பேரன் சிராஜுத் தவ்லா அவர்கள் அந்த நிலப்பரப்பின் அரசராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில் அரண்மனைக்குள் சதித்திட்டங்கள், ஈஸ்ட் இந்தியா கம்பெனி மற்றும் பிரஞ்சு வணிகர்களால் ஏற்பட்ட வணிகப் போட்டிகள், ஆளும் அரசிடம் அனுமதி பெறாமல் ஆங்கிலேயர்கள் கோட்டைகள் கட்டுவது, வசூலித்த வரியை கொண்டு வந்து கொடுக்காமல் இருப்பது போன்ற பல்வேறு குழப்பங்களுக்கு இடையே சிராஜ் தவ்லா பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராபர்ட் கிளைவ் :
================

இங்கிலாந்தின் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ராபர்ட் கிளைவ் வீட்டுக்கு அடங்காமலும், ஊருக்குள்ளும், பள்ளி, கல்லூரிகளிலும் ரவுடித்தனம் செய்து கொண்டும் சுற்றிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் இவரின் தந்தை 1744 களில் கிழக்கு இந்திய கம்பெனியில் வேலைக்கு சேர்த்து விட்டார். 

அவர்கள்  clerk - கிளர்க் / எழுத்தராக நியமித்து  சென்னைக்கு அழைப்பினார்கள். 

1746 களில் ராணுவத்தில் சிப்பாயாக சேர்க்கப்பட்டார். இப்பொழுது இவருடைய ரவுடித்தனமும் அடாவடித்தனமும் இவருக்கு கை கொடுத்தது. 

1751 ஆம் ஆண்டு ஆற்காடு நவாப்களோடு சிறிய யுத்தம் ஒன்று நிகழ்ந்தது; அதற்கு தளபதியாக இவர் சென்று அவர்களை வென்று வந்தார்.

1756 களில் கல்கத்தாவை சிராஜுத் தவ்லா அவர்களிடமிருந்து ராபர்ட் கிளைவ் மீட்டெடுத்தார். அதனால் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் மிகப்பெரும் பொறுப்புக்கு வந்தார்.

சிராஜுத் தவ்லா அவர்களிடம் எழுபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர்கள் இருந்தார்கள்; அதில் குதிரை படை (Cavalry) முப்பதாயிரம் பேரும், காலாட் படை  (Infantry) 40000/ பேரும் பீரங்கிகள்  (Artillery) 1000/ என அனைத்தும் அடங்கும்.

ராபர்ட் கிளைவிடம் ஐரோப்பிய வீரர்கள் 800 பேரும், இந்திய சிப்பாய்கள் 2200 பேரும், பத்து பீரங்கிகளும் மட்டுமே இருந்தன.

இந்நிலையில் ராபர்ட் கிளைவ் அவர்கள் சிராஜுத் தவ்லா அவர்களுடைய படையின் தளபதி மீர் ஜாபர் அவர்களை சந்தித்து, "நானும் உனது அரசனும் சண்டையிட்டுக் கொள்கிறோம்; நீ படைகளை அனுப்பாமல் பார்த்துக் கொள்! நான் ஒரே நாளில் அவரின் கதையை முடித்து விடுகிறேன்; அதற்கு பிறகு நீ தான் இந்த நிலப்பரப்புக்கு அரசன்" என்று ஆசைக் காட்டினான். 

அதில் மயங்கிய மீர் ஜாபர் ஒப்புக்கொண்டது போலவே தனது படையை அனுப்பவில்லை; அதனால் சிராஜுத் தவ்லா அவர்கள் நம்பிக்கைகுரிய 5000 படை வீரர்களுடன் சென்று போரிட்டும் பயனில்லாமல் தப்பி ஓடி விட்டார்; யுத்தம் ஒரே நாளில் முடிவுக்கு வந்தது 

ராபர்ட் கிளைவ் அவர்கள் சொன்னது போலவே மீர் ஜாபர் அவர்களை பொறுப்பில் அமர்த்தி விட்டு தமக்கு தேவையான செல்வங்களை அள்ளிச் சென்றார்.

முர்ஷிதாபாத்திற்கு தப்பி ஓடிய சிராஜுத் தவ்லா அவர்கள் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள்; 

அவரைத் தேடி கண்டுபிடித்த மீர் ஜாபர் அவர்களுடைய மகன் மீரான் அவர்கள் பிடித்து வந்து 2/ ஜூலை 1757-இல் கொலை செய்து விட்டார்கள்.

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் இந்த யுத்தத்திற்கு பிறகுதான் மிகவும் பலமாக கால் ஊன்றினார்கள். 

ஆங்கிலேயருக்கும் இந்தியர்க ளுக்கும் நடந்த முதல் போர் இதுதான். ஆங்கிலேயரை இந்தியாவில் கால் பதிக்க விடாமல் தடுத்த முதல் சுதந்திரப் போராட்ட முன்னோடி சிராஜுத் தவ்லா அவர்களே!

ராபர்ட் கிளைவிற்கு இந்த யுத்தத்தில் 2,34000/ பணம் கிடைத்தது. இந்தத் தொகையின் இன்றைய மதிப்பு சுமார் 400 கோடி ரூபாய் ஆகும். 

இந்தப் பணத்தோடும் சிராஜுத் தவ்லா அவர்களின் அரண்மனையில் இருந்த ஆடம்பர பொருட்களை வேண்டிய அளவிற்கு, மனைவியும் கிளைவும் ஆசைப்பட்ட அனைத்தையும்  அள்ளிக் கொண்டும்  இங்கிலாந்து சென்று விட்டார். 

லண்டனில் தற்காலிகமாக ஒரு மாளிகையை வாடகைக்கு எடுத்து குடியேறினார்; அதே நேரம் ஆடம்பரமான ஒரு பங்களாவை கட்டுவதற்கு ஊரின் நடுவே இடம் வாங்கி அதற்கான பணிகளையும் செய்து கொண்டே இருந்தார். 

இதற்கிடையே லண்டன் அரசியலில் தவிர்க்க முடியாத அடையாளமாகவும் சக்தியாகவும் ஆனார்.  

அதேநேரம் பெங்கால் நகரத்தின் ஆளுநராகவும் ஆறு வருட பதவி வகித்தார். வருடத்திற்கு 90000/ பணம் என பத்து வருடங்கள் பெற்றார். இதன் மூலம் சுமார் இன்றைய மதிப்பிற்கு 800 கோடிகளை பெற்றிருப்பார்.

இறுதியில் மன அழுத்தம் ஏற்பட்டு மனநிலை பாதிக்கப்பட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஷத்தாத் பின் ஆத் கட்டிய சொர்க்கத்தைப் போன்று ராபர்ட் கிளைவ் லண்டனில் மிகப்பெரிய பங்களாவையும், அதில் கார்டனையும் பார்த்து பார்த்து பல வருடங்களாகக் கட்டிக் கொண்டிருந்தார்; ஆனால் அவரால் அந்த மாளிகையில் குடியேற இயலவில்லை. 

அவர்  இந்தியாவிலிருந்து அள்ளிச் சென்ற அழகு பொருட்களை ஆங்காங்கே வைத்து அழகு பார்த்து அனுபவிப்பதற்கு முன் அவரின் உடலை மண் தின்று விட்டது.

அதைப் போல் மீர் ஜாபர் அவர்கள் முதல் மூன்று வருடங்கள் அரசராக இருந்தார்; பின்னர் மூன்று வருடங்கள் கழித்து அடுத்த மூன்று வருடங்கள் அரசராக இருந்தார்; அந்த காலகட்டத்தில் இருந்தே அவருக்கு வாத நோய் ஏற்பட்டு படுக்கையில் நீண்ட நாட்கள் இருந்து 70 வது வயதில் காலமானார்.

இந்திய சுதந்திரம் சும்மா கிடைத்துவிடவில்லை ; இந்தியாவில் விளைந்த செல்வங்களையும், உயிர்களையும் அளவின்றி அள்ளிக் கொடுத்தது தான் பெற்றிருக்கிறோம்.   

அதில் முஸ்லிம்கள் இழந்த இழப்பிற்கு ஈடு, இதுவரை கிடைக்கவில்லை. இனி கிடைத்தும் பயனில்லை. 

இழப்புகளை சந்தித்த சந்ததிகள் அதனைப் பெற்றிருந்தால் ஓரளவு நிகராக இருக்கும்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்