திருமண உரை

திருமணம்
=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°=°

14 - عن أبي هند قال:

حمل تميم الداري معه من الشام إلى المدينة قناديل وزيتا ومقطا، فلما انتهى إلى المدينة وافق ذلك يوم الجمعة فأمر غلاما له يقال له أبو البراد فقام فشد المقط وهو الحبل وعلق القناديل وصب فيها الماء والزيت وجعل فيها الفتل، فلما غربت الشمس أسرجها، فخرج رسول الله صلى الله عليه وآله وسلم إلى المسجد فإذا هو يزهر، فقال: من فعل هذا؟

قالوا تميم يا رسول الله

قال: نورت الإسلام نور الله عليك في الدنيا والآخرة، أما إنه لو كانت لي ابنة لزوجتكها.

فقال نوفل بن الحرث بن عبد المطلب: لي ابنة يا رسول الله تسمى أم المغيرة بنت نوفل، فافعل فيها ما أردت، فأنكحه إياها على المكان

الراوي: أبو هند الداري المحدث: ابن حجر العسقلاني - المصدر: الإصابة - الصفحة أو الرقم: 4/ 18

தமீமுத்தாரி (ரலி) அவர்கள் சிரியாவில் இருந்து மதீனாவிற்கு வந்தபோது, விளக்குகளையும் ஜைத்தூன் எண்ணெயையும் கொண்டு வந்திருந்தார்கள். அன்று  வெள்ளிக்கிழமை இரவாக இருந்தது. 

தமீமுத்தாரி (ரலி) அவர்கள் அபுல்பரா என்ற தம் அடிமையிடம் விளக்குகளை கொடுத்து, "ஜைத்தூன் எண்ணையை அந்த விளக்குகளில் நிரம்ப ஊற்றிக் கொண்டு, இவற்றை மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் தொங்கவிட்டுவிட்டு வாருங்கள்" என்று சொல்லி அனுப்பினார்கள். 

அன்றைய நாளின் சூரியன் மறைந்ததும் விளக்குகளை எடுத்துக்கொண்டு சென்ற  அபுல்பரா  அவர்கள் அவற்றை எரிய வைத்தார்கள். பள்ளிவாசல் முழுவதும் பிரகாசமாக காணப்பட்டது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு வந்தபோது, பள்ளிவாசல் ஜொலித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து சந்தோசம் அடைந்து, "இவ்வாறு செய்தவர் யார்" என விசாரித்தார்கள்.  தமீமுத்தாரி (ரலி) அவர்கள் என சொல்லப்பட்டது. 

உடனே அவர்களை அழைத்து வரச் செய்து,

نورت الاسلام نورك الله فى الدنيا والآخرة
 لو كانت لي ابنة لزوجتكها

"நீங்கள் இஸ்லாத்தையே ஒளிர செய்து விட்டீர்கள்.  அல்லாஹ் இவ்வுலகிலும், மறுமையிலும் உங்களை பிரகாசமாக ஆக்குவானாக! எனக்கு மட்டும் திருமணமாகாத மற்றொரு மகள் இருந்திருந்தால் உங்களுக்கு நான் திருமணம் செய்து வைத்திருப்பேன்" என  மனதார கூறினார்கள் .

இதைக் கேட்டுக் கொண்டு அருகில் நின்றிருந்த நௌஃபல் இப்னு ஹாரிஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் பெயர் 'உம்முல் முகீரா' அவளை தமீமுத்தாரிக்கு நீங்கள் விரும்பியபடி திருமணம் செய்து வைத்து, உங்கள் ஆசையை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்" என்று கூறினார்.

அந்த இடத்திலேயே தமீமுத்தாரி (ரலி) அவர்களுக்கும் உம்முல் முகீரா என்ற பெண்ணுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்து வைத்தார்கள்.

மஸ்ஜிதுந் நபவி -  பெருமானார் (ஸல்) அவர்களின் பொற்கரங்களால் கட்டப்பட்ட பள்ளிவாசலை ஒளிமயமாக்கியவரின் வாழ்க்கை நபிகள் நாயகத்தின் துஆ - பிரார்த்தனையின் பொருட்டால் இரு உலகிலும் ஒளிமயமானது.

நூல் : உஸ்துல் காஃபா , 
தப்ஸீர் குர்துபி

வெளிநாட்டிற்கு வியாபாரம் செய்ய சென்றிருந்த இடத்தில், தாம் கண்ட விளக்குகளை பள்ளிவாசலில் ஒளிர விட்டால் நன்றாக இருக்குமே என நினைத்து அதை வாங்கி வந்ததும், அதே நாளின் இரவில் தொங்கவிட்டு அழகு பார்த்திருக்கிறார் அந்த அண்ணல் நபியின் தோழர். 
இதுவே நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. 

அதேபோல் அவர்களுக்கு இஸ்லாத்தின் மீதும் பள்ளிவாசலின் மீதும் இருந்த பற்றுதலை வெளிப்படுத்திய பாங்கு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்துகிறது.

அதே நேரம் நௌஃபல் இப்னு ஹாரிஸ் ( ரலி) அவர்கள் அந்த தருணத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட நிலைப்பாடு, மேலும் மேலும் நம்மை உணர்ச்சிகரமான நிலையின் உச்சத்திற்கு இழுத்துச் செல்கிறது.

"அனைத்து முஸ்லிம்களும் சகோதரர்கள்" என்று முழங்கிய முஹம்மது நபி (ஸல்) அவர்கள், தம் தோழர் நௌஃபல் அவர்களுடைய மகளை தம் மகளாக நினைத்து, அதே இடத்தில் திருமணமும் செய்து வைத்திருக்கும் பாங்கு நம்மை நெகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

மேலும் அந்த மணமக்களுக்கு நபிகள் நாயகத்தின் பரிபூரண வாழ்த்தும் பிரார்த்தனையும் கிடைக்கப் பெற்றுள்ளது.

எல்லாம் வல்ல இறைவன் நம்மையும் இந்த நிகழ்வில் உள்ள மூவரைப் போல் வாழச் செய்வானாக!

அன்புடன்
மவ்லவி பி. எம். கலீலுர் ரஹ்மான் மன்பயீ
19/1/2023

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்