பவுலின் ஆவியின் பிரமாணம் நூல் வெளியீட்டு விழா
பவுலின் ஆவியின் பிரமாணம்
நூல் வெளியீட்டு விழா
இந்நூலாசிரியர் இந்த நூலில் கூறுகிறார்;
இறைவனுக்கு பல பெயர்கள் இருக்கின்றன; அந்த பெயர்களை விளக்கிச் சொல்கிறேன் என்கிற போர்வையில் தன் சுயநலத்திற்காக சொந்த கருத்துகளால் இறைவன் குறித்து தவறாகப் போதித்ததால், மனிதர்களிடையே பிரிவினைகளும், மதங்களும் அதிகமாக உருவாகி இருக்கின்றது.
(இஸ்லாத்தில் இறைவன் குறித்து யாரும் சுயமாகச் சொன்னால், அரபு நாடுகளில் தலை வெட்டப்படுவார். அதனால்தான் இஸ்லாத்திற்குள் இன்று வரை யாரும் குழப்பத்தை ஏற்படுத்த இயலவில்லை.)
கிறிஸ்தவ மதத்தில்
1. கத்தோலிக்கம் (Roman Catholic )
2. ஆர்த்தடாக்ஸ் (Eastern Orthodox / Oriental Orthodox)
3. பிரொட்டஸ்டண்ட் (Protestant)
4, பெந்தகோஸ்தே
என முக்கியமான பிரிவுகள் இருக்கின்றன.
இவை ஒவ்வொன்றுக்குள்ளும் என மொத்தத்தில் 40000/ நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பிரிவுகள் (Denominations) இருக்கின்றன.
பைபிள் என்பது பல நூல்களின் தொகுப்பு. அதில் பலவகையான பைபிள்கள் இருக்கின்றன.
சிரியாக் ஆர்த்தடாக்ஸ் எனும் பைபிளில் 61 நூல்கள் (அத்தியாயங்கள்) இருக்கின்றன; இவ்வாறே புராட்டஸ்டன்ட் பைபிள் 66,
ரோமன் கத்தோலிக்க பைபிள் 73,
காப்டிக் பைபிள் 75,
கிரிஸ்மாட்டிக் பைபிள் 76,
கிரீக் ஆர்த்தடாக்ஸ் பைபிள் 78,
எத்தியோப்பிக் பைபிள் 81 அத்தியாயங்கள் என பல வித்தியாசங்களோடு இருக்கின்றன.
இதில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் 66 புத்தகங்கள் கொண்ட புராட்டஸ்டன்ட் பைபிளைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஒவ்வொரு கிறிஸ்தவ பிரிவினரும் தாங்கள் பயன்படுத்தும் பைபிள்தான் சரியானது என்று கூறுகிறார்கள்; நம்புகிறார்கள்.
இவ்வாறு பைபிள்களில் சில புத்தகங்கள் குறைவாகவும், கூடுதலாகவும் இருப்பதால் பல மனிதர்களின் தயாரிப்பு நூல்தான் புதிய ஏற்பாடு என அறிய முடிகிறது.
இறைவனால் இவைகள் எழுதப்படவில்லை என்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
இறைவேதத்தில் இவ்வளவு முரண்பாடுகள் இருக்கலாமா? இருக்குமா?
பல அத்தியாயங்கள் இறை வேதத்தில் குறைவதும், கூடுதலாக இருப்பதும் முறையா?
யூதர்களின் வேதமான தனாக் எனும் நூலை பழைய ஏற்பாடு எனச் சொல்லி கிறிஸ்தவர்கள் புதிய ஏற்பாட்டோடு இணைத்துக் கொண்டார்கள்.
யூதர்களின் தனாக் வேதம் எப்படி கிறிஸ்தவர்களின் வேதமாக ஆகும்?
அதற்கு பழைய ஏற்பாடு என பெயரை மாற்றி வைத்துக் கொண்டு எந்த அடிப்படையில் கிறிஸ்தவர்களின் வேதம் என்று கிறிஸ்தவர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள்?
கிறிஸ்தவர்களில் சிலர் யூதர்களின் பழைய வேதம் தனாக் தேவை இல்லை என்கிறார்கள்; ஏன் இந்த குழப்பம்? ஏன் இந்த கருத்து வேறுபாடு?
இப்படி இந்த நூலில் பல்லாயிரக்கணக்கான கேள்விகளைக் கேட்டு கிறிஸ்தவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில், எளிய நடையில், அழகு சொற்களில், ரசிக்கும்படியாகவும், தொடர்ந்து வாசிக்கத் தூண்டும் வகையிலும் எழுதப்பட்டுள்ளது.
அவரின் இறுதி வேண்டுகோள்:
கிறிஸ்தவர்கள் பரலோக ராஜ்யத்தை இழந்து விடக்கூடாது - மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பையும், ஈஸா (அலை) அவர்களின் சந்திப்பையும், சொர்க்கத்தையும் இழந்து விடக்கூடாது என்பதற்காக கிறிஸ்தவர்களுக்கு இந்த நூலின் மூலம் ஒரு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறார்.
அதிலிருந்து தீப்பொறியை எடுத்துக் கொள்ள விரும்புவோர் இந்த நூலை வாசித்து பயனடையட்டும்.
இந்த நூலை வாங்கவும், இதன் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவும் உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.
அனைவரும் வருக!
அறிவமுதம் பெறுக!!
Comments
Post a Comment