இந்தியாவின் அணைகளில் ஒன்றான கிருஷ்ண ராஜ சாகர் அணையை கட்டியது திப்புசுல்தான் ?

இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான கிருஷ்ண ராஜ சாகர் அணையை கட்டியது திப்புசுல்தான் ? 
====================================

1794 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் அவர்கள் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை கட்டினார்.

இந்த அணையை கட்டுவதன் மூலம் மாண்டியா மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல மாவட்டங்களுக்கும் பயனாக இருக்கும் என திட்டமிட்டு அதனை கட்டுவதற்கு ஏற்பாடு செய்து அடித்தளமிட்டார்; ஆனால் போர்கள், ஆங்கிலேயரின் அத்துமீறல்கள் குறுக்கிட்டு கொண்டே இருந்ததால் அந்த வேலையை செய்ய இயலவில்லை.

இந்த இடத்தில் இப்படி ஒரு அணையை கட்ட வேண்டும் என தீர்மானித்து பணிகளைத் தொடங்கி கல்வெட்டுகள் எல்லாம் வைத்து ஆரம்பித்திருந்தார்; 

ஆனால் காலப்போக்கில் பணிகள் நின்று விட்டது. அந்த அணைக்கு 'மொஹி'  - Mohyi Dam புத்துயிர் அளிக்கும்' என பாரசீக மொழியில் பெயர் சூட்டியிருந்தார். 

கிருஷ்ணராஜ உடையார் அவர்கள் பிறந்தது 1884 ஆம் ஆண்டு. 1875 ஆம் ஆண்டு மாண்டியாவில் ஏற்பட்ட பஞ்சத்தை விரட்ட கிருஷ்ணராஜ உடையார் திட்டமிட்டார் என வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. 

அது எப்படி சாத்தியம்? அவர் பிறந்ததே 1884 இல். பஞ்சம் உருவானது 1875 களில். இவர் பிறப்பதற்கு முன்னர் ஏற்பட்ட பஞ்சத்திற்கு  கிருஷ்ண ராஜ உடையார் எப்படி திட்டம் தீட்டி இருக்க முடியும்?

மைசூர் திவான் அனந்தராவ் அவர்கள் நிதி ஒதுக்கி 81 லட்சங்களை கொடுத்து, சர். மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்ற பொறியாளரின் மேற்பார்வையில் 1911 ஆம் ஆண்டு முதல் 1932 ஆம் ஆண்டு வரை இந்த அணை கட்டி முடிக்கப்பட்டு 'கிருஷ்ணராஜ' என்ற அரசரின் பெயரில் இந்த அணை திறக்கப்பட்டது என்பதே உண்மை.

அதுமட்டுமின்றி.

1. மடகல்லி அணை (Madhugiri அருகில், தும்பட்ரா பகுதியில்)

2. ஹோலேநரசிப்புரம் அணை (Hole Narasipura, ஹசன் மாவட்டம், கர்நாடகா)

3. தலக்காடு – கபினி நதி பகுதியில்
பல சிறிய அணைகள் மற்றும் “anicuts” அமைக்கப்பட்டன.

4. ஸ்ரீரங்கபட்டினம் அருகே காவிரி ஆற்றில் சிறிய “anicut”   (கட்டைப்பாலம் / அணி) அமைக்கப்பட்டதாக பதிவுகள் உள்ளன.

5. நந்திடுர்க், சிக்கபள்ளபூர், கோலார் மாவட்டங்களில் சிறிய பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்கள் திப்பு காலத்தில் தோண்டப்பட்டன.

இவ்வாறு தன் ஆட்சியில் விவசாயத்தை முன்னேற்ற 300-க்கும் மேற்பட்ட சிறிய பெரிய குளங்கள் மற்றும் அணைகளை கட்டியிருக்கிறார்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்