இந்தியாவின் முதல் பிரதமர் ஒரு முஸ்லிம் & மவ்லவீ

இந்திய சுதந்திரப் போரில் மறைக்கப்பட்ட முஸ்லிம்களின் தியாகங்கள் :
==================================

தொடர்  :.......4

இந்தியாவின் முதல் பிரதமர் 
ஒரு முஸ்லிம்  & மவ்லவீ
========================

1915 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இந்தியாவின் புரட்சியாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆயுதம் தாங்கிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு அரசை நிறுவினார்கள்; அதன் பெயர் Provisional Government of India (நாடுகடந்த இந்திய அரசு - government-in-exile) 

அதன் முதல் பிரதமராக மௌலானா பரக்கத்துல்லாஹ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். கட்சித் தலைவராக ராஜா மகேந்திர பிரதாப் சிங் என்பவரும், உள்துறை அமைச்சராக உபைதுல்லாஹ் சிந்தி என்பவரும், வெளியுறவுத்துறை அமைச்சராக சைபுதீன் கிச்சலுவ் என்பவரும் தேர்வு செய்யப்பட்டு இயக்கம் சிறப்பாக நடைபெற்றது. 

பிரிட்டிஷ் அரசு இந்த அரசையும் அமைப்பையும்  “அபாயகரமான சதி” என்று கருதி உளவுத்துறையை அனுப்பி அடக்க முயற்சி செய்தது. ஆனாலும் அதன் அமைப்பாளர்கள் வீரியமாக செயல்பட்டர்கள்.

மௌலானா பரக்கத்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் மத்திய பிரதேசம் போபாலில் 1854 இல் பிறந்து, அரபி, உருது, ஆங்கிலம், ஃபார்சி போன்ற பல்வேறு மொழிகளில் மார்க்கம் பயின்று முறையாக மௌலவி ஆனார்கள்.

1880 களுக்குப் பிறகு ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்கள். 

ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவர்கள் அமெரிக்கா, லண்டன், ஜப்பான் போன்ற பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு சுதந்திர தாகத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள்.

20 செப்டம்பர் 1927 அன்று அமெரிக்கா
சான் பிரான்சிஸ்கோவில் 
தங்கி இருந்தபோது உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார்கள்.

நாடு கடந்த ஒரு அரசை நிறுவி சுதந்திரத்திற்காக முன்னெடுத்த பங்கை முன்மாதிரியாக வைத்து பிற்காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் 1943 ஆம் ஆண்டு "ஆசாத் ஹிந்து அரசு" எனும் பெயரில் சிங்கப்பூரில் ஒரு அரசை நிறுவி செயல்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

இவர்களின் முழுமையான பெயர் மௌலானா அப்துல் ஹஃபீஸ் முஹம்மது பர்கத்துல்லாஹ் என்பதாகும் ஆனால் வரலாற்றில் "பர்கத்துல்லா போபாலி" என்ற மரியாதைக்குரிய அடைமொழியில் அழைக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் நடத்திய பத்திரிகைகள் :
===========================

The Hindustani எனும் பெயரில் ஒரு பத்திரிக்கையை 
 1913–14 காலத்தில் அமெரிக்காவில் வெளியிட்டார். இந்திய சுதந்திர சிந்தனைகளை வெளிநாட்டு இந்தியர்களிடையே பரப்பினார்.

Elkhalifath (அரபு: الخلافة)
கிலாஃபத் - எனும் பெயரில் அரபு மொழியில் மட்டும், கிலாஃபத் இயக்கத்திற்கும் இந்திய சுதந்திரத்திற்கும் ஆதரவாக வெளி வந்த ஒரு பத்திரிகை.

Islamic Fraternity எனும் பெயரில் ஒரு பத்திரிக்கையை நடத்தினார்; அது
முஸ்லிம் சகோதரத்துவத்தையும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான ஒற்றுமையையும் வலியுறுத்தியது.

அவர்கள் எழுதிய நூல்கள் :
===========================

"The British Rule in India" –
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் சுரண்டல், பொருளாதார சிதைவுகள் குறித்து இந்த நூல் அமைய பெற்றுள்ளது.

"The Tragedy of Afghanistan" –
ஆப்கானிஸ்தானின் அரசியல் நிலை மற்றும் பிரிட்டிஷ் - ரஷ்ய தாக்கம் பற்றி  இந்த நூலில் எழுதி இருக்கிறார்.

"Islam and Socialism" –
இஸ்லாமிய சமுதாயக் கோட்பாடுகள் மற்றும் சமூகவாதத்தின் ஒற்றுமைகள் குறித்து இந்த நூல் அமைந்துள்ளது.

பல்வேறு அரசியல் கட்டுரைகள் – "The Islamic Review", "Comrade" போன்ற பத்திரிகைகளில் அதிகமதிகம் எழுதி இருக்கிறார்கள்.

மேலும் இவர்கள் குறித்து அறிய......

பர்கத்துல்லா போபாலி ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமையின் சாம்பியனாகவும் அடையாளமாகவும் இருந்தார்: ம.பி. ஆளுநர் – TwoCircles.net https://share.google/rM6xnlKjc3WpLFT2F

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்