நீங்கள் உயர்தரமான கல்வியாளர்

நபி {ஸல்} அவர்களை 
நான் கனவில் பார்த்தேன்
<><><><><><><><><><><><><><>

மாதம் : 8

தொடர் : 58

நீங்கள் உயர்தரமான கல்வியாளர் 
================================

இப்னு முஜாஹித் அல் மிஸ்ரி (ரஹ்) அவர்கள் கூறுவதாவது; அரபு மொழி இலக்கண இலக்கிய ஆய்வாளர் ஸஃலப் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; 

குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹு சார்ந்த ஆய்வாளர்கள் அனைவரும்  زيد ، عمرو ஜைது,  அம்ரு எனும் சொல்லை பயன்படுத்தி வருகிறார்கள்; இதை நான்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினேன்; அதனால் எனது ஈடுபாடுகள் எதுவும் மறுமைக்கு பயனளிக்காமல் போய்விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

இந்நிலையில் ஒரு நாள் இப்னு முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்; நபி (ஸல்) அவர்களை நான் கனவில் கண்டேன்; அப்பொழுது அவர்கள் என்னிடத்தில், "அபுல் அப்பாஸ் ஸஃலப் (ரஹ்) அவர்களுக்கு எனது ஸலாத்தினை சொல்லுங்கள்; மேலும் அவருக்கு " நீங்கள் உயர்தரமான, காலம் கடந்த கல்வியாளர்" என்றும் சொல்லுங்கள்" எனக் கூறினார்கள்.

அபூ அப்துல்லாஹ் அர் ரவ்தபாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்; நபி ஸல் அவர்கள்  العلم المستطيل 
கல்வி உயர்தரமானது எனும் சொல்லைக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் சொல்ல வருவது இதைத்தான்! 

(இலக்கண இலக்கிய முறைப்படி) ஒரு வார்த்தை முழுமை பெற்றுள்ளது! ஒரு சொல் அழகு பெற்றுள்ளது; அனைத்து வகை கல்வியும் இங்கு சிந்தனைக்கு உரியதாக ஆகிறது " என்பதைத் தான் நபி (ஸல்) அவர்கள் இரண்டு வார்த்தைகளில் சொல்லி இருக்கிறார்கள்.

நூல்: வஃபயாதுல் அஃயான்

சூஃபியாகவோ, மார்க்கப் பிரசங்கியாகவோ, குர்ஆன், ஹதீஸை போதிக்கும் ஆசிரியராகவோ தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. 

மார்க்கம் சார்ந்த விஷயத்தில் இலக்கிய, இலக்கண ஆர்வலராக இருந்தாலும் அவரும் இஸ்லாமிய மார்க்கப் போராளி தான் என்பதை நிரூபிக்கும் விதமாக நபிகள் நாயகம் அவர்கள் கனவில் காட்சி அளித்திருக்கிறார்கள் என்பதாக இந்த வரலாற்றை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
எனது அனைத்து 
ஆக்கங்களையும் பார்க்க.......
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
https://www.blogger.com/blog/pages/7086443299022251611

http://youtube.com/post/UgkxavcQOKlUDSVZfI00AI3zPvkTkatafLe4?si=nmzqPhtxN2G5YGIJ

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்