O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை ========================== இன்று தென்காசி குற்றாலத்தில் O.M. ஹள்ரத் அவர்களின் பேரனும், மௌலவி தமீமுல் அன்சாரி மிஸ்பாஹி ஹள்ரத் அவர்களின் மகனும்மான முஹம்மது அனஸ் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணத்தில் எனது ஆன்மீக ஆசான் O.M. ஹள்ரத் கிப்லா அவர்கள் ஆற்றிய உரை : மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலில் ஒரு திருமணம் நடைபெற்றது; திருமணத்தின் முடிவில் பாதாம், அக்ரூட் ,காய்ந்த பேரித்தம் பழங்கள், கற்கண்டு ஆகியன விசிறி எறியப்பட்டது. அந்தத் திருமணத்தை நடத்தி வைத்த நபிகள் நாயகம் அவர்கள், அருகில் அமர்ந்திருந்த அபூபக்கர் (ரலி) அவர்களை தள்ளி விட்டுவிட்டு கீழே கிடந்த காய்ந்த பேரித்தம் பழத்தையும், பாதாம் கொட்டையையும் பொறுக்கி எடுத்து சாப்பிட்டார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள், "நாயகமே! இந்த கொட்டைக்காக என்னை தள்ளி விடுவதா! நீங்கள் சொல்லியிருந்தால் நானே எடுத்துக் கொடுத்திருப்பேனே?" என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் அவர்கள், "அபூபக்கரே! இன்று திருமணம் ந...
அதிரை ஆசான் மௌலானா முஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள் =================÷÷÷÷÷÷÷÷========= ஒவ்வொரு மாணவரும் துறை சார்ந்த ஒவ்வொரு கல்வியையும் ஒரு ஆசிரியரிடம் கற்றுக் கொண்டதாகச் சொல்லுவார்கள். அறிவியலை இன்ன ஆசிரியரிடமும், கணக்கை இன்னா ஆசிரியரிடமும் ஆங்கிலத்தை இந்த ஆசிரியரிடமும் கற்றுக் கொண்டதாக சொல்லுவார்கள். எனக்கு ஒழுக்கத்தை கற்பித்தவர் இந்த ஆலிம் தான்! இவர் மக்தூம் முஹம்மது லப்பை / கதீஜா பிவி தம்பதியருக்கு மகனாக தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் அதிராம்பட்டினம் ஸலாஹிய்யா அரபுக் கல்லூரியில் சில வருடங்களும் நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா அரபுக் கல்லூரியில் சில வருடங்கள் என நான்கு ஜும்ராக்களை படித்தார். பின்னர் குடும்ப கஷ்டங்களின் காரணமாக சென்னை, பெங்களூர், ஸ்ரீரங்கப்பட்டினம் என பல்வேறு நகரங்களில் உணவகங்களில் பணி செய்தார். 1974 களில் ஒரு நாள் சினிமா பார்த்துவிட்டு வந்து பள்ளிவாசலில் தொழுத பிறகு "இறைவா! இனி நான் சினிமா பார்க்க மாட்டேன...
Comments
Post a Comment