முப்பெரும் விழாவும் நன்றியும்....

https://www.facebook.com/share/p/RnFcrYmrktFuPVZV/


முப்பெரும் விழாவும் நன்றியும்....
================================

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ 

அல்ஹம்துலில்லாஹ்! 

நேற்றைய தினம் பெரிய வடகரையில் முப்பெரும் விழா மிகவும் சிறப்பாக  நடைபெற்றது. 

அந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருந்த அனைத்து சிறப்பு விருந்தினரும் வருகைத் தந்திருந்தார்கள். 

பெரிய வடகரை பள்ளிவாசலில் லுஹர் தொழுகைக்கான ஜமாஅத் இரண்டு முறை நடைபெற்றது. இரண்டு முறையும்  பள்ளிவாசல் நிரம்ப ஆண்கள் தொழுதார்கள். 

பெரிய வடகரையில் பள்ளிவாசலை மிகப்பெரியதாக கட்டப்பட்டு விட்டதோ என நான்  நினைத்ததுண்டு! 

ஆனால் நேற்றுதான் பள்ளிவாசல் மிகச்சிறியது எனத் தெரிந்து கொண்டேன்.

வெளி ஊர்களில் இருந்து வருகைத் தந்திருந்த M.Y. ஷாகுல் ஹமீது மன்பயீ ஹள்ரத், இ. தாஹிர் பாஷா, ஜெயபால் இரத்தினம் போன்ற அறிஞர் பெருமக்கள் அனைவரும் வலியுறுத்திச் சொன்ன ஒரு கருத்து. 

"பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வடகரை கிராமம் முஸ்லிம் கிராமங்களுக்கான தாய் கிராமம். 

பெரம்பலூரைச் சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களில் இருப்பவர்கள், "வடகரை,  ஆலிம்கள் நிறைந்த ஊர், முன்னுதாரணமிக்க ஊர், வடகரையில் அப்படி செய்தார்கள், இப்படி செய்தார்கள்" என சிறப்பாகப் பேசி கொள்வார்கள். 

அந்த வகையில் இன்றைய முப்பெரும் விழா நிகழ்ச்சி மூலம்  ஒவ்வொரு  கிராமத்தினரும் பேசிக் கொள்ளும் அளவிற்கு செய்து விட்டீர்கள்.

பெரிய வடகரை கிராமத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஜமாஅத்தினர், வெளிநாடுகளில் வாழும் பெரிய வடகரை வாழ் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, பெரும் முயற்சி எடுத்து இந்த வரலாற்று நூலைத் தொகுத்து, அதற்காக முக்கால் லட்சத்தை செலவு செய்து, ஒற்றுமையாக இந்த நூலை வெளியிட்டு இருப்பது வரலாற்று சிறப்புமிக்கச் செயல்! 

ஒரு கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக தமது ஊர் வரலாற்றை உலகத்திற்கு எடுத்துச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது. 

தமது கிராமத்தின் வரலாற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை யாரும் பதிவு செய்ததில்லை. 

முதன்முதலாக பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வடகரை கிராமத்து மக்கள் மட்டுமே தமது ஊரின் பாரம்பரிய வரலாற்றைப் பதிவு செய்து இருக்கிறார்கள். 

இந்தச் செய்தியை கேள்விப்படுகிற ஒவ்வொரு முஸ்லிம் கிராமத்து மக்களும் தமது ஊரின் வரலாற்றை பதிவு செய்ய வேண்டும். 

எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான், நாம் செய்ததை ஏன் வெளிப்படுத்த வேண்டும்? அல்லாஹ் நமக்கான நன்மையைத் தருவான்? இதை ஏன் ஊரறிய செய்ய வேண்டும்? நான் செய்தது பெருமைக்குரிய காரியமாக ஆகிவிட்டால் அல்லாஹ்விடத்தில் நற்கூலி கிடைக்காதே என்றெல்லாம் நீங்கள் நினைக்காமல் உங்களுடைய ஊரின் வரலாறுகளை, உங்களுடைய தனிப்பட்ட  வரலாறுகளைப் பதிவு செய்துப் பழகுங்கள். 

திருக்குர்ஆனுடைய வசனங்களும், நபிகள் நாயகத்தின் உடைய நபி மொழிகளும் இன்று நம்மிடையே வந்து சேர்ந்ததற்குக் காரணம் ஸஹாபாக்களும் அவர்களைத் தொடர்ந்து வாழ்ந்தவர்களும் பதிவு செய்ததுதான் என்பதை நீங்கள் மனதில் பதிவு செய்து கொள்ளுங்கள் .

சிலர்,  முஸ்லிம்களாகிய நமக்கு வரலாறு இல்லை என்று சொல்லுகிறார்கள். பெரிய வடகரை தனக்கான  வரலாற்றைப் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது"
வந்திருந்த அறிஞர் பெருமக்கள் இவ்வாறு பேசினார்கள்.

இந்த நூல் சிறப்பாக வெளிவருவதற்குத் துணைச் செய்த பெரிய வடகரை ஜமாஅத்தார்கள், வெளிநாடுகளில் வாழும் நமது ஊர் இளைஞர்கள், நாஸிருல் மில்லத் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் என்னுடைய அழைப்பையும் , என்னுடைய ஊர் ஜமாஅத்தினர் அழைத்த அழைப்பையும் ஏற்று வருகை தந்திருந்த பேச்சாளர் பெருமக்கள் அனைவருக்கும், மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து விழாவை சிறப்பிக்க வந்திருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் உரித்தாக்குகின்றேன்.

பெரம்பலூர் மாவட்ட இதழ்களில், தினசரிகளில் வெளிவந்த முப்பெரும் விழா குறித்த செய்திகள்.

வேப்பந்தட்டை: பெரியவடகரையில் பள்ளிவாசலில் கந்தூரி, மிலாது, நூல் வெளியீடு ஆகிய முப்பெரும் விழா  நடந்தது 

https://public.app/video/sp_ww6oz0cvl1n5c?utm_medium=android&utm_source=share

https://online.fliphtml5.com/fieir/boep/

https://www.facebook.com/share/p/wsJDXJDbHaJCdwWo/

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்