நேற்றைய தினத்தந்தியில் முப்பெரும் விழா குறித்த செய்தி :

நேற்றைய தினத்தந்தியில் 
முப்பெரும் விழா குறித்த செய்தி :================================

பெரிய வடகரை பள்ளிவாசலில் முப்பெரும் விழா

வேப்பந்தட்டை, அக்.14- பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரிய வடகரை பள்ளிவாசலில் கந்தூரி விழா, மீலாது விழா மற்றும் நூல் வெளியீடு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. 

ஜமாத்துல் உலமா சபையின் மாவட்ட தலைவர் முஹம்மது முனீர் தலைமை தாங்கினார். பன்னூல் ஆசிரியர் ஷாஹூல் ஹமீது முன்னிலை வகித்தார். ஜமாத்துல் உலமா சபையின் மாநில துணைத்தலைவர் முகமது மீரான் மீலாது விழா சிறப்புரையாற்றினார். 

வரலாற்று ஒளியில் பெரிய வட கரை எனும் நூலை முகமது முனீர் வெளியிட முக்கிய பிரமு கர்கள் பெற்றுக்கொண்டனர். 

சமூக நீதி படைப்பாளர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தாஹிர் பாட்சாநூல் திறனாய்வு உரையாற்றினார். 

நிறைவாக நூல் ஆசிரியர் கலீல் ரஹ்மான் ஏற்புரையாற்றினார். 

மீலாது விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக அப்துல் ஜமீல் வரவேற்றார். முடிவில் மன்சூர் அஹமது நன்றி கூறினார்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்