தொழுகைக்குப் பிறகு துஆ கேட்கலாமா?

தொழுகைக்குப் பிறகு 
துஆ கேட்கலாமா?
=====================

உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களின் கணவர் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் நோயுற்று நினைவில்லாமல் இருந்தார்கள். அவர்கள் இறந்துவிட்டார்கள் என்றே அனைவரும் எண்ணினார்கள். 

இந்நிலையில் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள் எழுந்துச் சென்று தொழுது தன் கணவருக்காக துஆ செய்தார்கள். 

அதே நேரம் ஹள்ரத் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களுக்கு மயக்கம் தெளிந்து நினைவுத் திரும்பியது.

"என்ன! நான் மரணமடைந்தது போல் இருந்தேனா?" என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார்கள். "ஆம்!" என்று அவர்கள் கூறினார்கள். 

அப்பொழுது அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் "இரண்டு மலக்குகள் என்னிடம் வந்து 'புறப்படுவீராக! மாபெரும் நீதியாளனான அல்லாஹ்வின் சமுகத்தில் உம்மைப் பற்றித் தீர்ப்புச் செய்யப்பட வேண்டியதிருக்கிறது' எனக் கூறி என்னை அழைத்துச் சென்றார்கள். 

அப்பொழுது மூன்றாவதொரு மலக்கானவர் வந்து அவ்விருவரையும் நோக்கி, 'நீங்கள் சென்று விடுங்கள், தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே நற்பாக்கியசாலி என்று எழுதப்பட்டவர்களில் இவரும் ஒருவர்; இவருடைய மக்கள் இவர் மூலம் இன்னும் பயனடைய வேண்டிய திருக்கிறது' என்று கூறினார். அவ்விருவரும் என்னை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள்” எனக் கூறினார்கள். 

இந்நிகழ்ச்சிக்குப் பின் ஒரு மாதம் வரை அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் உயிருடன் இருந்தார்கள். பிறகு இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள்.

நூல்: துர்ருல் மன்சூர்

ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் உங்களின் தேவைகளை அல்லாஹ்விடத்தில் முறையிட்டு தேவைகளைப் பெறுங்கள்.

அல்லாஹ்வை நெருங்குவதற்கான மிக மிக அற்புதமான வாகனம் துஆ 

https://binbaz.org.sa/fatwas/7585/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%AF%D8%B9%D8%A7%D8%A1-%D9%88%D8%B1%D9%81%D8%B9-%D8%A7%D9%84%D8%A7%D9%8A%D8%AF%D9%8A-%D8%A8%D8%B9%D8%AF-%D8%A7%D9%84%D8%B5%D9%84%D9%88%D8%A7%D8%AA-%D8%A7%D9%84%D9%85%D9%83%D8%AA%D9%88%D8%A8%D8%A9#:~:text=%D8%A7%D9%84%D8%AC%D9%88%D8%A7%D8%A8%3A%20%D8%A7%D9%84%D8%AF%D8%B9%D8%A7%D8%A1%20%D8%A8%D8%B9%D8%AF%20%D8%A7%D9%84%D8%B5%D9%84%D8%A7%D8%A9%20%D9%84%D8%A7,%D9%81%D9%84%D8%A7%20%D8%A8%D8%A3%D8%B3%20%D8%A8%D9%8A%D9%86%D9%87%20%D9%88%D8%A8%D9%8A%D9%86%20%D8%B1%D8%A8%D9%87

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்