லைலத்துல் கதர் இரவு 27 வது இரவா?
லைலத்துல் கதர் இரவு
27 வது இரவா?
========================
உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது;
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மகத்துவமிக்க இரவு (லைலத்துல் கத்ர்)
என்பது, (ரமளான் மாதத்தின்) இருபத்தேழாம் இரவாகும்" என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம், திர்மிதீ
ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உபை பின் கஅப் (ரலி) அவர்களிடம், “அபுல் முன்திர் அவர்களே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் 'வருடம் முழுவதும் (இரவில்) நின்று வழிபடுபவர் 'மகத்துவமிக்க இரவை' (லைலத்துல் கத்ரை ) அடைந்துகொள்வார்' என்று கூறுகிறாரே?" என்று கேட்டேன்.
அதற்கு உபை (ரலி) அவர்கள், "இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு அல்லாஹ் கருணை செய்வானாக! நிச்சயமாக 'மகத்துவமிக்க இரவு' (லைலத்துல் கத்ர்) ரமளான் மாதத்தில்தான் உள்ளது; அது (ரமளான் மாதத்தின்) இருபத்தேழாவது இரவுதான் என்பதை அன்னார் அறிந்தே இருந்தார்கள்” என்று பதிலளித்துவிட்டு, பின்னர் (அது தொடர்பாகச்) சத்தியம் செய்தார்கள்.
நான், "அதை (அந்த இரவை) நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்வீர்கள்?" என்று கேட் டேன்.
அதற்கு உபை (ரலி) அவர்கள், "அந்த நாளில் (காலையில்) சூரியன், ஒளிக்கதிர்கள் ஏதுமின்றி உதிக்கும் என்று (நபியவர்களால்) எங்களுக்கு அறிவிக்கப்பட்ட அடையாளம், அல்லது அறிகுறியைக் கொண்டு நான் அறிந்து கொள்வேன்" என்று பதிலளித்தார்கள்.
நூல் : முஸ்லிம், முஸ்னது அஹ்மது.
இமாம் அபூ ஹனீஃபா ரஹ் அவர்களும், இமாம் அஹமது பின் ஹம்பல் ரஹ் அவர்களும் இதே கருத்தை முன்மொழிந்து வலியுறுத்துகிறார்கள்.
97வது அல் கத்ர் அத்தியாயத்தின் 27 ஆவது வார்த்தையாக هي எனும் சொல் இடம் பெற்றுள்ளது.
இந்தச் சொல் அது ( லைலத்துல் கதர்) 27-வது இரவில் தான் இருக்கிறது என்பதை குறிப்பிடுவதாக பல அறிஞர்கள் கூறுகிறார்கள்.
நூல் : தஃப்ஸீர் இப்னு கஸீர்
லைலத்துல் கதர்
وقال ابن أبي حاتم : أخبرنا يونس ، أخبرنا ابن وهب ، حدثني مسلمة بن علي ، عن علي بن عروة قال : ذكر رسول الله صلى الله عليه وسلم يوما أربعة من بني إسرائيل ، عبدوا الله ثمانين عاما ، لم يعصوه طرفة عين : فذكر أيوب وزكريا وحزقيل بن العجوز ويوشع بن نون - قال : فعجب أصحاب رسول الله صلى الله عليه وسلم من ذلك ، فأتاه جبريل فقال : يا محمد عجبت أمتك من عبادة هؤلاء النفر ثمانين سنة ، لم يعصوه طرفة عين ; فقد أنزل الله خيرا من ذلك . فقرأ عليه : ( إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ) هذا أفضل مما عجبت أنت وأمتك . قال : فسر بذلك رسول الله صلى الله عليه وسلم والناس معه .
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறும் போது ‘பனூ இஸ்ரவேலர்களைச் சார்ந்த அய்யூப் (அலை), ஸகரிய்யா (அலை), ஹிஸ்கீல் (அலை), யூஷஃபின்நூன் (அலை) ஆகிய நால்வரும், 80 வருடங்கள் கண்ணிமைக்கும் நேரம் கூட இறைவனுக்கு மாறு செய்யாத வண்ணம் இறைவணக்கம் புரிந்து வந்தார்கள்’ என்று தெரிவித்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நபித்தோழர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள். உடனே வானவர் ஜிப்ரீல் (அலை) நபிகளாரிடம் இறங்கிவந்து ‘உங்களது சமுதாயம் இந்த நால்வரைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். எனவே இதைவிட சிறந்த ஒரு பாக்கியத்தை இறைவன் இறக்கி அருள்பாலித்திருக்கிறான்’ என்று கூறி பின்வரும் லைலத்துல்கத்ர் சம்பந்தமான அத்தியாயத்தை கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலி பின் உர்வா (ரஹ்)
நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்
Comments
Post a Comment