ஆசைகளை துறப்பதற்கு தான் ஹஜ்



ஆசைகளை 
துறப்பதற்கு தான் 
ஹஜ் பயணம் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

உமர் (ரலி) அவர்களின் அடிமை அஸ்லம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். 

ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்கு வந்திருந்த போது fresh - புதிய மீன் சாப்பிட ஆசைப்பட்டார்கள். இதனை அறிந்த நான் ஓர் ஒட்டகத்தின் மீதேறி fresh - புதிய மீன் விற்கப்படும் பிரத்தியேகமான கடைக்குச் சென்று வாங்கினேன். 

பின்னர் ஒட்டகத்தை வேகமாக ஓட்டி வந்தேன். அதன் காரணமாக ஒட்டகத்திற்கு அதிகமாக வேர்த்துக் கொட்டியது. 

ஒட்டகத்திற்கு வேர்த்தது தெரியக்கூடாது என்பதற்காக, நான் திரும்பி வந்ததும் ஒட்டகத்தை நன்றாகக் கழுவி அதன் வியர்வை தெரியாத வகையில் செய்து விட்டேன் . 

உமர் (ரலி) அவர்களிடம் fresh - நல்ல மீன் வாங்கி வரப்பட்டு இருக்கிறது என சொன்னேன். அதன் காரணமாக அவர்கள் சந்தோஷப்படுவார்கள் என எண்ணினேன். 

ஆனால் உமர் (ரலி) அவர்கள் "நடங்கள் உங்களுடைய  ஒட்டகத்தைப் பார்ப்போம்!" என்று சொல்லிக்கொண்டே ஒட்டகத்தை நோக்கி நடந்துச் சென்றார்கள்.  

ஓட்டகத்தினுடைய காதுக்கு பின்னால் தடவிப் பார்த்தார்கள். அங்கு வியர்வை கழுவப்படாமல் இருந்தது. 

அதைக் கண்டதும் "இதைக் கழுவ மறந்து விட்டீரா? (அதாவது ஒட்டகத்தின் வியர்வை அனைத்தையும் கழுவி விட்டதாக எண்ணிக் கொண்டீரா?") என்று கேட்டார்கள் .

பின்னர் "ஒரு மனிதனுடைய ஆசைக்காக, ஓர் உயிரை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி விட்டீரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக உமர் இந்த மீனை ஒருக்காலும் உண்ணமாட்டார்" என்று கூறிவிட்டார்கள்.

நூல்: தர்கீப் வ தர்ஹீப் 

இப்னு ஹாஜருல் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். உமர் (ரலி) அவர்கள் தாம் எதார்த்தமான பேச்சின் இடையில் நல்ல மீன் சாப்பிட வேண்டும் என சொல்லி இருக்கிறார்கள். 

இதனை அருகில் இருந்து கேட்ட அவரின் அடிமை எஜமானரின் விருப்பத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். இதில் அவருடைய தவறு எதுவும் இல்லை. 

இது போன்ற ஆசைகள் ஏற்படுவதும் அது குறித்து பேசுவதும் வளமை தான். ஆனால் அதை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். 

ஆனால் உமர் (ரலி) அவர்கள், "இது போன்ற ஆசைகளை துறப்பதற்கு தான் ஹஜ்ஜுக்கு வந்திருக்கிறோம் இந்த இடத்திலும் நம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதா?" என வெட்கப்பட்டு அதை சாப்பிட மாட்டேன் என சத்தியம் செய்தார்கள். 

எனவே இது போல் ஹஜ்ஜுடைய சந்தர்ப்பத்திலும், தமது சொந்த ஊர்களுக்கு திரும்பிய பின்னரும் நமது ஆசைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது முழுமையாக அகற்றி விட வேண்டும்.

ஆசைகளை நீக்கி 
ஆன்மாவை ஓர் முகப்படுத்தி 
வாழும் வாழ்வே உயர்வானது.

Comments

  1. جزاك الله خيرا كثيرا وخير الجزاء

    உங்களின் மாஷா அல்லாஹ்வே முதல் கமெண்ட் மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்