உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம் - 3

உலகின் முதல் 
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தொடர்ச்சி : 3
============|->

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 

அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான். 

(அல்குர்ஆன் 33:21)

•••

மேலும், "குர்ஆன் மட்டும் போதும் நபிகளாரின் வழிகாட்டுதல் தேவை இல்லை, நபி மொழிகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை" என்று சிலர் சொல்லுகிறார்கள். அவர்கள் 33 : 21 வது வசனத்தை கவனிக்க வேண்டும். 

"நபியிடத்தில் அழகிய முன்மாதிரிகள் இருக்கின்றது எனவே இவறை நீங்கள் பின்பற்றி நடங்கள்" என்று இந்த வசனம் சொல்வதால், குர்ஆனை மட்டும் பின்பற்றுவோர் இந்த வசனத்தை புறக்கணித்தவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்க தவறி விட்டார்கள்.

மேலும், மறுமை நாளை நம்புவோருக்கும் அல்லாஹ்வை நினைவு  கூருவோருக்கும் நபியின் வாழ்க்கையில் அழகிய முன்மாதிரி இருக்கிறது என்றும் இந்த வசனம் பேசுகிறது.

அப்படி என்றால் மறுமை நாளை நம்பாதவருக்கும், ஏக இறைவனான அல்லாஹ்வை நினைக்காதவர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரி இல்லையா? என்ற ஒரு கேள்வியை இந்த வசனம் உருவாக்கித் தருகிறது. 

ஆமாம்! உண்மைதான்!! அல்லாஹுவையும் நபி (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் தான் நபியின் வாழ்வை பின்பற்றுவார்கள். இஸ்லாத்தை ஏற்காதவர்கள், நபியை உளப்பூர்வமாக ஒப்புக் கொள்ளாதவர்கள் நபியின் வாழ்வை எப்படி உண்மைப்படுத்துவார்கள்?

அதைப்போல், ஒருவர் அல்லாஹ்வை அதிகமாக நினைக்கும் போது அவர் ரசூலின் பக்கம் தேவையாகுவார். 

ஏனென்றால் அல்லாஹ்வை எப்படி நினைவு கூருவது என்று ரசூல் தான் வழிகாட்டி இருக்கிறார். 

எனவே ரசூலின் வழிகாட்டுதலை பின்பற்றுவதற்காக ரசூல் குறித்து தொடர் ஆய்வில் ஈடுபடுவோர் தொடர்ந்து ரசூலின் வழியில் பயணிப்பார். ரசூலை நோக்கிய அவரது  பயணத்தின் முடிவு மிக மிகச் சிறந்ததாகவே இருக்கும்.

'குர்ஆன்' எழுத்து வடிவிலும், புத்தக வடிவிலும் நம்மிடையே இருக்கின்றது. இதே குர்ஆன் நடமாடும் மனித வடிவில் காண வேண்டுமானால் யாரைக் காண்பது என்பதற்கு பதிலாகத் தான் அல்லாஹுத்தஆலா இந்த வசனத்தை அருளி, நபிகள் நாயகத்தை நமக்கு  முன்னிலைப்படுத்தி இருக்கின்றான்.

நபி (ஸல்) அவர்களை நாம் எந்த அளவிற்கு பின்பற்றுகிறோமோ அந்த அளவிற்கு அல்லாஹ்வின் பொருத்தம் நம் மீது உண்டாகும்.

நபி (ஸல்) அவர்கள் அழகிய முன்மாதிரிமிக்க நபராக இருப்பது போல் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் ஒவ்வொரு இன மக்களும் அழகிய முன்மாதிரிமிக்க மனிதர்களாக வாழ வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் உண்மையான நோக்கம். 

இவ்வாறு ஒவ்வொரு பகுதியிலும் முன்மாதிரிமிக்க பலர் வாழும் போது அவர்களைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்பதற்கும் அவர்கள் அழகிய வாழ்வியலை தேர்ந்தெடுப்பதற்கும் இது காரணமாக அமையும். 

எனவே அத்தகைய முன்மாதிரிமிக்க மாமனிதரின் வாழ்வியலை வாழ்ந்து காட்ட வாருங்கள் என அல்லாஹ் வரவேற்கின்றான்

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்