உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம் 4

உலகின் முதல் 
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தொடர்ச்சி : 4
=============|->

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 

அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான். 

(அல்குர்ஆன் 33:21)

•••

அருளப்பட்ட பின்னணி :
======°°°°°°°°°°==========

அஹ்ஸாப் - அகல் யுத்தம் நடைபெற்ற நேரத்தில் இந்த வசனம் அருளப்பட்டது.  பத்தாயிரத்திற்கும் அதிகமான எதிரிகள் மதீனாவைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோது முஸ்லிம்கள் கலக்கத்தோடும், நடுக்கத்தோடும், பதற்றத்தோடும் இருந்தார்கள். 

ஆனால் நபி (ஸல்) அவர்கள் பொறுமையாகவும், விழிப்புணர்வோடும், எதிரிகளைக் கண்காணித்த வண்ணமும் அமைதியாக இருந்தார்கள். 

பதட்டத்தோடும் பரிதவிப்போடும் இருந்த முஸ்லிம்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் அமைதியாக இருப்பது போன்று முஸ்லிம்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று விரும்பிய அல்லாஹ், " நபிகளாரின் வாழ்வில் அழகிய முன்மாதிரி இருக்கிறது அவரைப் போன்று நீங்களும் இருங்கள்" என்று  இந்த வசனத்தை அருளினான்.

உஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களின்  பல் உடைந்த போதும், தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்த போதும் மற்றும் சொல்ல முடியாத பல துன்பங்கள் நேர்ந்த போதும் நபி (ஸல்) அவர்கள் போர்க்களத்தில் இருந்து புறமுதுகு காட்டாமல் அதே இடத்தில் நின்று யுத்தத்தை எதிர் கொண்டார்கள். 

அதுபோலவே இப்பொழுது அல் அஹ்ஸாப் போரிலும் நபி (ஸல்) அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள். அவ்வாறே ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயமும் நபிகளாரை பின்பற்றி போரில் இருந்து பின் வாங்காமல் உறுதியாக நின்று நபிகள் நாயகத்தின் கைகளை வலுப்படுத்த வேண்டும் என அல்லாஹ் இந்த வசனத்தின் மூலம் ஸஹாபாக்களிடம் கூறுகிறான்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்