உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம் 8

உலகின் முதல் 
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தொடர்ச்சி : 8
=============|->

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 

அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான். 

(அல்குர்ஆன் 33:21)


*நாம் நபியை எவ்வளவு பின்பற்றி இருக்கின்றோம்? :*
===========================

நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபியுல் அவ்வல் மாதம் ஒவ்வொரு வருடமும் நம்மை வந்தடைகிறது. 

நபி (ஸல்) அவர்களை நபி தோழர்கள் 23 ஆண்டு காலங்களாக கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றியது போன்று நாமும் கூட நபி (ஸல்) அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக பின்பற்றி வர வேண்டும். 

அந்த வகையில் நாம் இப்பொழுது இந்த ஆண்டு நபி (ஸல்) அவர்களை எந்த அளவிற்கு பின்பற்றி இருக்கிறோம் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். 

நபித் தோழர்கள் 23 ஆண்டுகளில்  பின்பற்றியதை நாம் 70 ஆண்டுகளிலோ, 80 ஆண்டுகளிலோ நபிகளாரை முழுமையாக பின்பற்றிட வேண்டும் என்பதை நினைவூட்டவே ஒவ்வொரு வருடமும் ரபியுல் அவ்வல் நம்மை வந்தடைகிறது. 

இப்பொழுது உங்களுக்கு வயது என்ன? நீங்கள் நபி (ஸல்) அவர்களை எவ்வளவு தூரம் பின்பற்றி இருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள்.

அல் ஹகீமுத் திர்மிதீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; நான் நிலத்தில் விழுந்த பெருமழை. 

மழை நீர் செடி கொடிகளைச் செழித்து வளர வைக்கிறது. 

நீரற்ற பூமி வறண்டு விடுகிறது. 

தூதை ஏற்பது மழை பெறும் பூமியை போன்றது. 

தூதை மறுப்பது மழையற்ற வறண்ட பூமியை போன்றது. 

அழகிய தூதரில் உஸ்வத் (அழகிய முன் மாதிரி) இருக்கிறது என்பது  நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதும் அவர்களின் வழிகாட்டலில் இருந்து மாறாதிருப்பதும் என்பதே பொருள். 

எனவே மழையை ஏற்றுக்கொள்ளும் பூமியை போன்று நபியை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உடையவராக நாம் ஆகிவிட வேண்டும்.

மழை நீரை பருகிய மண் மகசூலை தருகிறது. 

மா நபியை உள்வாங்கிக் கொண்டவர், தானும் இன்புற்று பிறவையும் இன்புறச் செய்வார்.

இன்றைய உலகில் தவறான வழிகளில் சென்று பல தோல்விகளையும், மீள முடியாத பிரச்சனைகளையும் அனுபவித்த பிறகு தான் சிலர் தமக்கு ஒரு ரோல் மாடல் -  முன்மாதிரிமிக்க ஒரு மனிதரின் அனுபவங்கள், அவர் வெற்றி பெற்ற ரகசியங்கள் தேவை என தேடுகிறார்கள்.

"எவருடைய பேச்சையும் நான் கேட்க மாட்டேன், எவருடைய Advice -  அறிவுரையும் எனக்கு தேவையில்லை, எனக்கென யாரும் Role Model- முன்மாதிரி இல்லை, நானே பெரிய அறிவாளி தான், எனக்கும் சொந்த புத்தி இருக்கிறது" என்று சொன்ன பலர் நெருக்கடியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். 

அவர்களில் சிலர் அன்றாட பொலப்பு ஓட்டுவதற்கும் சிரமப்படுகிறார்கள். நோய் நொடிகளுக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி புகைப்பழக்கம், போதைப் பழக்கம் போன்ற தவறான பழக்கங்களுக்கு ஆளாகி தன்னையும் சிரமத்தில் ஆழ்த்தி, பிறரையும் சிரமத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

தீய பழக்க வழக்கங்கள், தீய பேச்சுகள், தீய சிந்தனைகள், தீய பார்வைகள், தீய நடத்தைகள் உள்ளவர்களை Role Model - முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு செயல்பட்ட  அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்க விரும்பினால்  சிறைச்சாலைக்குச் சென்று பார்க்கலாம். 

படித்து உயர் பதவியில் இருப்பவர்கள், பொருளாதாரத்தில்  முன்னேறி இருப்பவர்கள், மக்களால் புகழப்படும் மாமனிதர்கள் போன்ற அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு Role Model -  முன்மாதிரிமிக்க ஒரு மனிதர் இருந்திருப்பார். 

அந்த ரோல் மாடலையும், அவரைப் பார்த்து வாழ்வில் வெற்றி பெற்றவர்களையும் நாம் நம் அன்றாட வாழ்வில் ஆங்காங்கே ஏசி அறைகளில் காணலாம்.

ஒரு நல்ல அரசியல்வாதி, ஒரு நல்ல அரசு உயர் அதிகாரி போல் ஆக வேண்டும் என நினைக்கும் ஒருவர் அதற்கான வழிகளை பின்பற்றத் தொடங்கினால் அவர் அந்த  அதிகாரியாகவோ, அரசியல்வாதியாகவோ ஆகும் வரை தன் முயற்சியில் பின்வாங்க கூடாது. 

பின்வாங்கும் மனநிலை உடையவர்களாக இருந்தால் அந்த காரியத்தில் இறங்கவே கூடாது.

அல்லது தன் திறமைக்கு எது செய்தால் சாத்தியமாகும் என தீர்க்கமாக ஆலோசித்து , அதில் ஒரு துறையை தேர்ந்தெடுத்து, அந்தத் துறை சார்ந்தவர்களில் யார் ரோல் மாடல் - முன்மாதிரி மிக்கவராக இருக்கிறாரோ அவரை பின்துயர்ந்து வாழ்வில் வெற்றி பெறுவது அவசியம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்