மழையைப் போன்றவர் மாநபி ( ஸல் )
மழையைப் போன்றவர் மாநபி ( ஸல் )
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது ; சாதி மத வேறுபாடு இல்லாமல், உலகில் உள்ள அனைவருக்கும் அருட்கொடையாகவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளப்பட்டுள்ளார்கள்.
இறை நம்பிக்கையாளர்களுக்கு இவர்களைக் கொண்டு ஹிதாயத் - நேர்வழி கிடைத்திருக்கிறது. மேலும் இவர்களைக் கொண்டு இறை நம்பிக்கை கொள்ளும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. இறை நம்பிக்கையாளர் செய்கிற நல்லறங்களால் இறைவன் அவருக்கு சொர்க்கத்தை வழங்குகிறான்.
இறைமறுப்பாளர்கள் மற்றும் ஓரிறை கோட்பாட்டை ஏற்காதவர்களுக்கு உடனடியாக சோதனைகள் ஏற்படுவதை நபிகள் நாயகம் அவர்கள் தடுக்கிறார்கள்.
ஆனால் முன்னாள் வாழ்ந்த சமுதாயத்தினர் நபிமார்களை ஏற்காத போது, இறைவன் உடனே தண்டித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நூல் : தஃப்ஸீர் தப்ரீ
"வானிலிருந்து பொழியும் மழை மரங்கள், செடி கொடிகள், மனிதர்கள், கால்நடைகள், ஜின்கள் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் எப்படி பயன் மிக்கதாக இருக்கின்றதோ அவ்வாறுதான் நபி (ஸல்) அவர்களின் வருகை !
மேலும் இஸ்லாத்தில் நிலையாக இருப்பவருக்கு நபிகள் நாயகம் அவர்களின் காரணமாக நிரந்தரமாக முழுமையான பாக்கியங்கள் கிடைக்கின்றது.
யார் இஸ்லாத்தில் இணையவில்லையோ அவருக்கு அருள்வலம் அளவிட்டு வழங்கப்படுகிறது" என பின் பாஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
சில அறிஞர்கள், "நபி (ஸல்) அவர்களை யார் ஏற்றுக் கொண்டு உண்மை படுத்தி, அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்களுக்கு தான் நபிகள் நாயகம் அவர்கள் அருட்கொடையாக இருக்கிறார்கள்" என கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் மீண்டும் அறிமுகப்படுத்திய இஸ்லாம் மார்க்கத்தை எதிர்க்கக் கூடியவர்கள் பலர் இருந்தும், பல யுத்தங்கள் நடந்தும் அவர்களில் எவரையும் நபிகள் நாயகம் அவர்கள் தம் கரங்களால் கொலை செய்யவில்லை. அதனால் அவர் அருள்மிக்கவர்.
Comments
Post a Comment