நாளைமீலாதுந் நபியை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் :

நாளை
மீலாதுந் நபியை முன்னிட்டு 
இலவச கண் பரிசோதனை முகாம் : 
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=

أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ
மனிதா! 
( பார்க்கக்கூடிய) இரு கண்களை 
நாம் வழங்க வில்லையா? (90:8)

ثُمَّ سَوَّاهُ وَنَفَخَ فِيهِ مِن رُّوحِهِ ۖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ ۚ قَلِيلًا مَّا تَشْكُرُونَ

உங்களுக்குக் 
காதுகள், 
கண்கள், 
உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே (கருவறையில்) அமைக்கிறான். 

இவ்வாறு வழங்கியும் உங்களில் சிலரே நன்றி செலுத்துகிறீர்கள்!  (32:9)

"உங்கள் கண்தான் உடலுக்கு விளக்கு. 

உங்கள் கண் நன்றாக இருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெறும்; 

அது கெட்டுப்போனால் உங்கள் உடல் இருளாக ஆகி விடும்; 

எனவே கண்களை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள்" என இமாம் கஸ்ஸாலீ (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள்.

நாளைய தினம் மஸ்ஜித் தக்வா மதரஸா பிலால் பள்ளிவாசலும் பாத்திமா கண் மருத்துவமனை நிர்வாகமும் இணைந்து டும்மிங் குப்பம் தக்வா பள்ளிவாசலில் இலவச கண் பரிசோதனை முகாம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது. 

சிலருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை, சிலருக்கு இலவச கண் கண்ணாடி, கண் நோயாளிகளுக்கு இலவசமாக கண் மருந்துகள் வழங்க இருக்கிறது.

எனவே தேவை உடையோர் வந்து  பயன்படுத்தி பயன்பெறுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்