மீலாதுந் நபி விழாவை முன்னிட்டு
மீலாதுந் நபி விழாவை முன்னிட்டு 


கண் பரிசோதனை முகாம்
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷
மயிலாப்பூர் டுமிங்குப்பம் பகுதியில் மீலாது நபி விழாவை முன்னிட்டு தக்வா பள்ளிவாசல் மற்றும் பாத்திமா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் 17/09/2024 அன்று காலை 9 மணி முதல் 1மணி வரை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் இமாம் மவ்லவீ B.M.கலீலுர் ரஹ்மான் மன்பயீ ஹள்ரத் அவர்களின் துஆவுடன் தொடங்கப்பட்டது. அச்சமயம் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு மற்றும் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா ஆகிய இருவரும் தொடங்கி வைத்தார்கள்.
Dr. அதீக் ஷேக் அவர்கள் பொதுமக்களுக்கான கண் பரிசோதனை நிகழ்வினை தம் மருத்துவ குழுவினரோடு பணிகளை தொடங்கினார்கள்.
இந்நிகழ்வில் மயிலை தொகுதி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஜனாப் A. ஹுமாயுன் கபீர் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செயலாளரும், மஸ்ஜிதே தக்வா பள்ளிவாசலின் பொருளாருமான ஜனாப் K.M. இக்பால் அஹ்மது அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக
திமுக பகுதி செயலாளர் S. முரளி, பாத்திமா கண் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் Dr. ஷேக் ஹமீது, மார்னிங் டைம்ஸ் பத்திரிகையின் உதவி ஆசிரியர் A. காஜா மொய்தீன், திமுக 125 வார்டு மாமன்ற உறுப்பினர் அ. ரேவதி, 126 வார்டு மாமன்ற உறுப்பினர் அமிர்தவர்ஷினி, தமுமுக பகுதி தலைவர் M. முஹம்மது ஜஹீர், பகுதி துணை தலைவர் A.K. ஜரூக் அலி அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
இம்முகாமில் 163 நபர்கள் பயன் அடைந்தனர். இவர்களில் 13 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வாகி இருக்கிறார்கள். 25 நபர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட இருக்கின்றது. நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கண் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
மனிதர்களுக்கு தொண்டாற்றுவதன் மூலமாக மீலாதுந் நபி வித்தியாசமாகவும் விமர்சியாகவும் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்காக பொருளாதார உதவிகளையும் உடல் உழைப்பு சார்ந்த உதவிகளையும் வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment