கண்ணில் உயிர் உள்ளவரை கண்மணி நபிகள் நாயகத்தை காத்திடுங்கள் :

கண்ணில் உயிர் உள்ளவரை 
கண்மணி நபிகள் நாயகத்தை 
காத்திடுங்கள் :
=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷=÷

عن مخرمة بن بكير عن أبيه قال : بعثني رسول الله صلى الله عليه و سلم يوم أحد لطلب سعد بن الربيع و قال لي : إن رأيته فاقرئه مني السلام و قل له : يقول لك رسول الله صلى الله عليه و سلم : كيف تجدك ؟ قال : فجعلت أطوف بين القتلى فأصبته وفي آخر رمق و به سبعون ضربة ما بين طعنة برمح و ضربة بسيف و رمية بسهم فقلت له : يا سعد إن رسول الله صلى الله عليه و سلم يقرأ عليك السلام و يقول لك : خبرني كيف تجدك ؟ قال على رسول الله السلام و عليك السلام قل له : يا رسول الله أجدني أجد ريح الجنة و قل لقومي الأنصار لا عذر لكم عند الله أن يخلص إلى رسول الله صلى الله عليه و سلم و فيكم شفر يطرف قال : و فاضت نفسه رحمه الله [ مستدرك الحاكم   وفي رواية يقول سعد : جزاك الله عنا و عن جميع الأمة خيرا 

மக்ரிமா பின் பகீர் (ரலி) அவர்கள் தன் தந்தையிடமிருந்து அறிவிப்பதாவது; 

(ஸஅத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரியமான அன்சாரீ  தோழர் ஆவார். நபி (ஸல்) அவர்களை மதீனாவுக்கு வரும்படியும், அங்கு எல்லா விதமான ஒத்துழைப்பும் தருகிறோம் என்றும் கூறி அகபாவில் ஒப்பந்தம் செய்தவர்களில்  ஒருவராகவும் இருந்தார். )

உஹதுப் போர் முடிந்த போது நபி (ஸல்) அவர்கள்  ஸஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களைத் தேடி வரும்படியும் (எந்த இடத்தில் குற்றுயிராக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து  வரும்படியும்) அவர் இறுதியாக என்ன சொல்கிறார் என்பதை கேட்டு வரும்படியும் என்னை அனுப்பினார்கள். 

"மேலும் ஸஅத் பின் ரபீஉ (ரலி) அவர்களைப் பார்த்ததும் எனது ஸலாமை சொல்லுங்கள்" என்றும் சொல்லி அனுப்பினார்கள்.

போர்க்களத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு இடையே ஸஅத் பின் ரபீஆ (ரலி) அவர்களை நான் தேடிச் சென்று பார்த்தபோது  அவர்கள் எழுபது வெட்டுக் காயங்களுடன் குற்றுயிராக மயக்கமுற்றுக் கிடந்தார்கள். 

ஈட்டி, அம்பு, வாள் போன்ற ஆயுதங்களால்  எழுபது இடங்களில் வெட்டப்பட்டு கிடந்தார்கள்.

(அந்த வெட்டுகளில் 12 மட்டுமே ஸஅத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் விழிப்பு நிலையில் இருந்தபோது எதிரிகள் வெட்டியதாகும். மற்ற வெட்டு காயங்கள் அனைத்தும் அன்னார் மயக்கமுற்ற பிறகு வெட்டப்பட்டதாகும். )

மயக்கம் தெளிந்த நிலையிலிருந்த ஸஅத் (ரலி) அவர்களை நோக்கி, "ஸஅதே! நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஸலாம் சொன்னார்கள்; மேலும் உங்களின் நிலையை உங்களின் வாயிலாக அறிந்து வரும்படியும் சொன்னார்கள்" என்று கூறினேன். 

அதற்கு அவர், "நான் இன்னும் சற்றுநேரத்தில் இறந்து விடுவேன்; சொர்க்கத்தின் நறுமணத்தை நான் நுகருகிறேன்; என் பாசமுள்ள நபிக்கு என் ஸலாமைக் கூறுங்கள். 

மேலும் ஷஹாதத் எனும் மாபெரும் பாக்கியத்தை எங்களுக்குப் பெற்றுத் தந்ததற்காக என் சார்பில் நன்றியும் கூறுங்கள்; என் நண்பர்கள் அனைவருக்கும் என் ஸலாமைக் கூறுங்கள்; 

மேலும் எனது நண்பர்களிடம், "நம் தோழர்களில் எவரேனும் உயிருடன் இருக்கும் நிலையில் நமது உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களை எதிரிகளில் ஒருவன் நெருங்கினால் அந்த தோழரின் கண்களில் மட்டுமே உயிர் ஒட்டியிருந்தாலும் சரி, அந்த நிலையில் அவர் நமது நபியைப் பாதுகாக்கத் தவறினால் அவரை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்" என்று கூறுங்கள் என்றார். 

இந்த வார்த்தையைக் கூறிய சற்று நேரத்தில் அவரின் உயிர் பிரிந்தது. 

நூல் : ஜாதுல் மஆத், ஹாகிம்

மரண தருவாயில் இருக்கும் ஸஅத் (ரலி) அவர்கள் தன் மனைவி, மக்கள், உடன் பிறப்புகள், தாய் தந்தையர் குறித்தெல்லாம் கூட பேசாமல் கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து பேசி இருக்கிறார்கள் என்றால் அதுதான் உண்மையான நபி நேசம் ஆகும். 

மரண தருவாயில் இருந்த இந்த நபித்தோழர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் உண்மைதான்! ஏனெனில் இவர் உண்மையாகவே தன் உறவினர்கள் அனைவரையும் விட நபிகள் நாயகத்தை அதிகமாக நேசித்திருந்ததால் மட்டுமே இப்படி பேசினார்கள் என்பதே உண்மை.

யாரை அதிகமாக நேசித்தார்களோ அவர்கள் குறித்து தான் மரண தருவாயில் ஒவ்வொருவரும் பேசுவார்கள். 

பொதுவாகவே ஒரு மனிதன் இறந்த பிறகு அவனுடைய உடல் உறுப்புகளில் கடைசியாக மரணிப்பது கண்கள் தாம். அதாவது மனிதன் இறந்த பிறகு நீண்ட நேரம் உயிரோடு இருப்பது கண்கள் தாம். 

அந்தக் கண்ணில் உயிர் இருக்கும் வரை நபிகள் நாயகத்தை பாதுகாத்திடுங்கள் என ஸஅத் ரலி அவர்கள் உபதேசித்த உபதேசம் நபிகள் நாயகத்தின் மீது இருந்த உண்மையான அன்பை  வெளிப்படுத்துகிறது.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்