உலகின் முதல் முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்

உலகின் முதல் 
முன்மாதிரி மனிதர் நபிகள் நாயகம்
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا 

அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது; ( யாருக்கு என்றால் ) அல்லாஹ்வையும், மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்வோருக்கு தான். 

(அல்குர்ஆன் 33:21)

உஸ்வத் - முன்மாதிரி என்றால், "ஒருவரது செயல்களையும், நடவடிக்கைகளையும் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பது" என்று பொருள்.

33:21 வது வசனம் "அதீஉல்லாஹ வ அதிஉ ரஸூல - அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள்" ( 3 : 32) எனும் வசனத்தின் மறு பிரதிபலிப்புதான் என்று சொன்னால் மிகையல்ல! 

ஏனென்றால் அல்லாஹ்வின் தூதர் இடத்தில், நீங்கள் பின்பற்றி நடக்க வேண்டிய பல அழகிய முன்மாதிரிமிக்க நற் செயல்கள் இருக்கின்றது நீங்கள் பின்பற்றுங்கள்" என்பதுதான் 33:21 வது வசனத்தின் பொருள்.

உஸ்வதுன் ஹஸனா என்பதின் பொருள், "நீர் மகத்தான நற் நற்குணத்தில் இருக்கின்றீர் ;68:4" என்பதைத் தான் குறிப்பிடுகிறது என அநேக விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

மனித இனத்தில் எவருக்கும் வாய்க்கப்படாத நற்குணம் நபி (ஸல்) அவர்களிடத்தில் இருந்தது; அந்த குணம் குடிகொண்டிருந்த கோமான் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துதான் அல்லாஹ் "உஸ்வதுன் ஹஸனா " என சொல்கிறான்.

நபி (ஸல்) அவர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதும், அவர்களுக்கு எந்த வகையிலும் மாற்றம் செய்யாமல் இருப்பதுமே இதன் பொருள் என திர்மிதீ  (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

தொடரும்.....

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்