நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண்பவர், இவர்தான் நபிகள் நாயகம் என எப்படி தெரிந்துக் கொள்வார்? :
நபி {ஸல்} அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
========================
3.
======================÷÷÷÷÷÷÷÷÷÷÷
தன் கனவில் நபி (ஸல்) அவர்களைப் பார்த்தவர், தான் பார்த்தது நபி (ஸல்) அவர்களையா? அல்லது வேறு யாரையும் பார்த்து இருக்கின்றோமா என்பதை மூன்று வழிமுறைகளில் அறிந்து கொள்ள முடியும் என அறிஞர்கள் கூறுகிறார்கள்.
1. கனவில் யாரைப் பார்த்தாரோ அவரே தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். உதாரணமாக; நான் தான் அல்லாஹ்வின் தூதர், அல்லது நான் முஹம்மது பின் அப்துல்லாஹ், அல்லது நான் உனது நபி, அல்லது இது போன்ற பொருளைத் தரும் ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி நபி (ஸல்) அவர்களே தம்மை குறித்து சொல்லிக் கொள்வார்கள்.
2. கனவு காண்பவரின் உள்ளத்தில் அது யார் என்கிற எண்ணம் தானாகவே தோன்றும்.
மேலும் கனவு கண்டவரின் ஆழ் மனதில் அவர் நபி (ஸல்) அவர்கள்தாம் என உறுதியான எண்ணம் உருவாகும்.
கனவில் காட்சியளித்தவர் யார் என்று அவருக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.
3. கனவில் பார்க்கப்பட்டவரை குறித்து வேறு ஒரு மனிதர் வந்து சொல்லுவார்.
நீ பார்த்தாயே அவர் யார் தெரியுமா? என்றோ, அல்லது உன்னிடத்தில் பேசினாரே அவர் யார் தெரியுமா என்றோ, அல்லது உன்னைப் பார்த்தாரே அவர் யாரென்று உமக்குத் தெரியுமா என்றோ, அல்லது இப்பொழுது உன்னிடத்தில் பேசப்போகிறவர் யார் தெரியுமா என்றோ, அல்லது இப்பொழுது உங்களிடத்தில் வரப்போகிறவர் யார் தெரியுமா என்றோ, அல்லது விரைவில் உங்கள் இடத்தில் ஒருவர் வரப் போகிறார் அவர் யார் தெரியுமா என்றோ கேட்டுவிட்டு அவர்தான் நபிகள் நாயகம் என்று அவரே அறிவிப்பார்.
நபிகள் நாயகத்தை அறிமுகப்படுத்தும் நபரை சில சமயம் பார்க்க முடியும். சில சமயம் அவரின் குரல் மட்டுமே கேட்க முடியும்.
இந்த மூன்று வழிமுறைகளில் அல்லது வேறு வழிமுறைகளில் நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர்கள் கண்டிப்பாக நபி (ஸல்) அவர்களையே பார்த்திருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களைக் கனவில் கண்டவர் குழப்பம் இல்லாமல் திருப்தியான நிலையிலும் அமைதியான மன நிலையிலும் காணப்படுவார்.
Comments
Post a Comment