பெரிய வடகரை குறித்து ஒரு வரலாற்று ஆய்வாளரின் கருத்து!
பெரிய வடகரை குறித்து ஒரு
===============================
வரலாற்று ஒளியில் பெரிய வடகரை எனும் இந்நூல் இன்றைய பெரம்பலூர் மாவட்டத்தில், வேப்பந்தட்டை வட்டத்தில் அமைந்துள்ள பெரியவடகரை கிராமத்தின் வரலாறு மற்றும் அவ்வூரில் வாழ்ந்து வரும் முஸ்லிம் இன மக்களின் வரலாறு பற்றிப் பேசுகிறது.
பொதுவாக ஒரு நாட்டின் வரலாற்று வரைவினை, வரலாற்றுப் பேராசிரியர்கள் அடங்கிய ஒரு குழுவோ, அல்லது தனிப்பட்ட வரலாற்றுப் பேராசிரியரோதான் தொகுக்க முடியும்.
ஆனால், ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் பொது வரலாற்றை, அந்தக் குறிப்பிட்ட வட்டாரப் பகுதியில் வாழ்பவர்களால் மட்டுமே செய்ய முடியும். ஏனெனில் அவர்களால் மட்டுமே தங்களது வட்டாரம் சார்ந்த தரவுகளையும், நிகழ்வுகளையும் முறையாக சரிபார்க்க இயலும்.
இதுவே ஒரு தனிப்பட்ட ஊரின் வரலாறு என்றால் அந்தத் தனிப்பட்ட ஊரில் வாழ்பவர்களால் மட்டுமே தொகுக்க முடியும். அந்த வகையில் பெரியவடகரை கிராமத்தின் வரலாற்றையும், அவ்வூரில் வாழும் முஸ்லிம்களின் வரலாற்றையும் தொகுத்து இந்நூலில்
வழங்கப்பட்டுள்ளது.
உச்சிமலைக் குன்றுகளில் உருவாகும் அருவிகள் மற்றும் சிற்றோடைகள் ஒன்றிணைந்து பல்கிப் பெருகி கல்லாறு என்ற பெயரில் நீர் வரவுக்கேற்றார்ப் போல் தவழ்ந்தும், உகள்ந்தும் சீறிப்பாய்ந்தும், செல்லும் ஒரு சிற்றாற்றின் வடக்குக் கரையில் அமைந்திருக்கிறது பெரியவடகரை என்னும் இந்தத் தொல்மூதூர்.
பெரம்லூர் வட்டாரத்தின் பல ஊர்களில் கற்காலம் முதலே மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது ஆய்வாளர்களது கூற்று. அவ்வாறான பழமையான ஊர்களில் இந்த ஊரும் ஒன்று!
வரலாற்று ஆய்வாளர்
ஜெயபால் ரத்தினம் அவர்கள்
நூலாசிரியர் : தமிழக வரலாற்றில் பெரம்பலூர்
இவர்கள் வழங்கிய
அணிந்துரையில் இருந்து ஒரு துளி....
Comments
Post a Comment