ஆது மகன் ஷத்தாது கட்டிய சொர்க்கம் - 2
ஆது மகன் ஷத்தாது
கட்டிய சொர்க்கம் - 2
=====================
நேற்றைய தொடர்ச்சி...
நேற்று பதிவிட்ட செய்தியை ஒருமுறை வாசித்து விட்டு இதனை தொடர்ந்து வாசியுங்கள்; எளிதில் புரியும்.
மற்றொரு அறிவிப்பில் இப்படியும் காணப்படுகின்றது.
அவன் கட்டிய சொர்க்த்தைத் திறப்பு விழா செய்ய அதன் வாசலுக்கு வந்த ஷத்தாத், தன் வலது காலை சொர்க்க வாசல் நிலைக்கு நெருக்கத்தில் வைத்து இடது காலை தூக்கும் அந்த இடவெளி நேரத்தில் அவன் உயிர் வாங்கப்பட்டது.
அவன் சொர்க்கத்திற்குள் நுழையாமலே இறந்துவிட்டான்; அவன் உடல் சொர்க்கத்திற்கு வெளியே விழுந்தது. உயிர் இல்லாத உடல் கூட உள்ளே நுழையவில்லை.
பிற்காலத்தில் அப்துல்லாஹ் பின் குலாஃபா என்பவர், காணாமல் போன தன் ஒட்டகங்களைத் தேடிக்கொண்டு காட்டில் சுற்றியபோது இந்த நகரத்தை எதார்த்தமாகக் கண்டார்;
அதற்குள் சென்று அவர் பார்த்தார்; அந்தக் கட்டிடத்தின் தூண்கள் மாணிக்கம், மரகதம் போன்ற விலை உயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது!
தங்கம் மற்றும் வெள்ளிகளால் அதன் தரை அழகு படுத்தப்பட்டு இருந்தது; அவர் தன்னால் இயன்றதை அள்ளிக்கொண்டு தன் இல்லம் வந்தார்; பின்னர் இதை முஆவியா (ரலி) அவர்களிடம் அறிவித்ததாக ஒரு செய்தி இருக்கின்றது.
கஃபுல் அஹ்பார் (ரஹ்) அவர்கள், மேற்கண்ட செய்தியை அறிந்ததும் "அது! ஆது மகன் ஷத்தாது கட்டிய சொர்க்கமாக இருக்கலாம் ; திருக்குர்ஆன் கூறும் இரமதாத்தில் இமாத் ஆகக் கூட இருக்கலாம்" என கூறினார்கள்.
இப்னு கல்தூன் (ரஹ்), இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் போன்றவர்கள் இது முழுக்க முழுக்க மந்திரவாதிகளால் புனையப்பட்ட செய்தி என்று கூறுகிறார்கள்.
அதாவது முற்காலங்களில் புதையலைத் தேடி சுற்றும் ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். அவர்களைப் போல் சுற்றிய ஒரு குழுவினரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி தான் இது என கூறுகிறார்கள்.
மேலும் சிலர் தாம் அந்த கோட்டையை பார்த்ததாகச் சொன்னார்கள்; அவர்களே தம் ஊர் மக்களை அழைத்துக் கொண்டு மீண்டும் அந்த கோட்டையை தேடி வந்த போது எங்கும் தென்படவில்லை என்றொரு கருத்தும் நிலவுகிறது.
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ * إِرَمَ ذَاتِ الْعِمَادِ * الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ) الفجر/ 6 - 8
ஆத் சமுதாயத்தினரை உம்மைப் படைத்தாள்பவன் என்ன செய்தான் என்று (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா?
அவர்கள் 'இரம்' வாசிகள்; உயரமான தூண்களைக் கொண்ட (கட்டடங்களை எழுப்பியவர்கள்.)
ஊர் உலகங்களில் அவர்களைப் போன்று (உயரமாகவும், சக்தி மிக்கவர்களாகவும், அனைத்து வளங்களையும் வழங்கப்பட்ட வர்களாகவும் அதற்கு முன்னும் அதற்குப் பின்னும்) வேறு யாரும் படைக்கப்படவில்லை. 89: 6-8
இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்; "இரமதாத்தில் இமாத்" எனும் கட்டிடம் அன்று கட்டப்பட்டது உண்மை; இன்றும் கூட அவை அல்லாஹ்வின் அத்தாட்சியாக எங்கையேனும் இருக்கலாம். ஆனால் இன்று வரை உள்ள செய்தி கற்பனைகளும் கட்டுக்கதைகளுமே ஆகும்.
நூல்: تاريخ ابن خلدون" (1/ 18-19) .
மேலும் விபரங்களுக்கு இந்த வெப்சைட்டை பாருங்கள்.
https://search.app?link=https%3A%2F%2Fmawdoo3.com%2F%25D9%2582%25D8%25B5%25D8%25A9_%25D8%25B4%25D8%25AF%25D8%25A7%25D8%25AF_%25D8%25A8%25D9%2586_%25D8%25B9%25D8%25A7%25D8%25AF&utm_campaign=aga&utm_source=agsadl1%2Csh%2Fx%2Fgs%2Fm2%2F4
தொடரும்......
.
.
.
Comments
Post a Comment