நபிமார்களின் அடக்கத்தலங்கள் எங்கே இருக்கிறது?
1. ஆதம் அலைஹிஸ் ஸலாம்:
மக்கா - மினாவில் உள்ள மஸ்ஜிதுல் கைஃப் பள்ளியில் நபி (ஸல்) அவர்கள் தொழ வைத்த இன்றைய மிஹ்ராபில் இருக்கிறது.
மேலும் பைத்துல் முகத்தஸிலும், இலங்கையில் ஆதம் மாலையிலும், மக்காவில் அபி குபைஸ் மலையிலும், ஜம்ஜம் கிணறு அருகிலும், பைத்துல் முகத்தஸ் வளாகத்திற்குள்ளும் இருப்பதாக பல்வேறு கருத்துக்கள் நிலவுகிறது.
2. நூஹ் அலைஹிஸ் ஸலாம்:
ஜோர்டான் கார்க் - Kerak நகரத்திலும், ஜெருசலத்தின் குதுஸ் பகுதியில் உள்ள ஒரு குகையிலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.
3. யஅகூப் / இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரின் அடக்கத்தளம் இஸ்ரேல் மாவட்டத்தில் இஸ்ரேல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அஸ்கலான் ஏரியாவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இந்த இருவருடைய அடக்கத்தலமும் அமைந்துள்ளது.
மேலும் ஃபாலஸ்தீனில் ஜிப்ரான் நகரில் யாகூப் / இஸ்ஹாக் / இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் அவர்களின் மனைவி ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் ஆகியவர்களுடைய அடக்கத்தளங்கள் ஒரே இடத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்றிருந்தபோது நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அடக்கத்தளத்தை ஜிப்ரயீல் (அலை) அவர்கள் காட்டிக் கொடுத்ததாகவும், அந்த இடத்தில் நபிகளார் இரண்டு ரக்கஅத்துகள் தொழுததாகவும் ஹதீஸ்களில் காணப்படுகிறது.
4. யூசுஃப் அலைஹிஸ் ஸலாம்:
நாப்லஸ் - Nablus ஃபாலஸ்தீன் காசா மேற்கு கரையில் அமைந்துள்ள ஓரு பள்ளிவாசலில் நபி யூசுஃப் (அலை) அவர்களின் அடக்கத்தளம் உள்ளது. இந்த அடக்கத்தளத்திற்கு அருகில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கி இருந்த கிணறு இருக்கிறது.
5. இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்:
ஃபாலஸ்தீன் ஜெருசலம் நகரில் அல்கலீல் எனும் ஜிப்ரான் நகரில் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்க தளம் அமையப்பெற்றுள்ளது. இங்குதான் யாகூப் / இஸ்ஹாக் (அலை) அவர்களின் அடக்கத்தளம் கூட அமையப் பெற்றுள்ளது.
6. யூஷவு பின் நூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அடக்கத்தளம் ஓமன் நாட்டில் அல் உதைன் மாவட்டத்தில் சிர்ஃபா எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.
7. மூஸா அலைஹிஸ்ஸலாம்:
ஃபாலஸ்தீன் அல் குத்ஸ் பகுதியில் அரீஹா எனும் கிராமத்தில் சிவப்பு மண் மேட்டில் மூஸா (அலை) அவர்களின் அடக்கத்தளம் உள்ளது. நபி (ஸல்) அவர்கள் மிஅராஜ் சென்றிருந்தபோது இங்கே தொழுது விட்டுச் சென்றார்கள்.
மேலும் சிரியா - டமாஸ்கஸ் நகரில் அவர்களின் அடக்கத்தளம் உள்ளதாக அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
8. தாவூத் / சுலைமான் அலைஹிஸ்ஸலாம்:
ஃபாலஸ்தீன் பெத்லேகம் அருகில் இருவரின் அடக்கத்தளமும் அமையப்பெற்றுள்ளது என்றும், வடக்கு இஸ்ரேலிய மாவட்டத்தில் ஜிப்ரான் கிழக்கு பகுதியில் டைப்ரீஸ் Tiberias தென்மேற்கு கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.
9. ஜகரிய்யா/ யஹ்யா அலைஹிஸ்ஸலாம்.:
ஃபாலஸ்தீன் - நாப்லஸ் நகரில் செபஸ்டியா என்னும் இடத்தில் உள்ள ஒரு பள்ளிவாசலின் அடித்தளத்தில் இந்த இருவருடைய அடக்கத்தளமும் அமையப்பெற்றுள்ளது.
10. இல்யாஸ் அலைஹிஸ்ஸலாம் :
இன்று இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமாக திகழ்வது ஹைஃபா - Haifa. இது ஒரு மலை நகரம். இங்கு ஒரு குகையில் இவர்களின் அடக்கத்தளம் அமையப்பெற்றுள்ளது.
மேலும் டமாஸ்கஸில் உள்ள பஅலபக் என்னும் இடத்திலும், இதே டமாஸ்கஸில் ஹிம்ஸ் என்னும் இடத்திலும் அமைய பெற்றுள்ளதாகவும் ஓர் தகவல் உண்டு.
மேலும் லெபனான் நாட்டின் பெக்கா எனும் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ளதாகவும் ஒரு கூற்று உண்டு.
11. ஷுஐப் அலைஹிஸ்ஸலாம்:
ஜோர்டானில் அர்ஸூஃப் கைசார்யா கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள ஹுத்தைன் எனும் இடத்தில் இவர்களின் அடக்கத்தளம் அமையப்பட்டுள்ளது.
மேலும் ஜோர்டானில் தப்ரிய்யா மற்றும் அக்கா நகரங்களுக்கு நடுவிலும், தப்ரிய்யா நகரத்திற்கு அருகில் உள்ள கியரா எனும் கிராமத்திலும் இருப்பதாகவும் ஒரு கூற்று உள்ளது.
12. ஹூத் அலைஹிஸ்ஸலாம். சிரியா -டமாஸ்கஸில் உள்ள ஜாமிஆ மஸ்ஜிதின் கிப்லா புர சுவர் ஓரத்தில் இவர்களின் அடக்கத்தளம் அமையப்பெற்றுள்ளது.
மேலும் ஹளரமவ்த், ஈராக்கில் வாதி ஷலாம் எனும் இடத்திலும், மதினாவில் ஓர் வடை உச்சியிலும், மக்காவில் ஜம்ஜம் அருகிலும் இருப்பதாக பல கூற்றுகள் உள்ளது.
13. நபி ஸல் அவர்களின் அடக்கத்தளம் மதீனாவில் மஸ்ஜித் நபவி பள்ளிவாசலில் ஆயிஷா (ரலி) அவர்கள் தங்கி இருந்த இடத்தில் இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் அடக்கத்தளத்தைத் தவிர வேறு எந்த நபியின் அடக்கத் தளமும் இங்குதான் இருக்கிறது என்று உறுதியாக சொல்வதற்கு எந்த ஆதாரமும் அடையாளங்களும் இல்லை.
ஒவ்வொரு பகுதியிலும் வாழ்ந்த பூர்வீகக் குடிமக்கள் சொன்ன கருத்துகளின் அடிப்படையில் தான் இன்றுள்ள நபிமார்களின் அடக்கத் தளங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த மக்களின் சொற்களையே ஆதாரமாகக் கொண்டுதான் இன்று நபிமார்களின் அடக்கத் தளங்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.
எனவே அவர்களின் அடக்கத் தளங்களை நாம் ஸியாரத்து செய்யலாம்.
2021 இல் கொரோனாவிற்கு முன்பு நானும் 13 ஆலிம்களும் ஃபாலஸ்தீன், மக்கா, மதீனா உட்பட ஒரே நேரத்தில் மூன்று ஹரம்களையும், பல நபிமார்கள், ஸஹாபாக்கள், வலிமார்கள் ஆகியவர்களின் அடக்கத் தளங்களையும் ஜியாரத் செய்துவிட்டு வந்தோம். அந்த புகைப்படங்களில் சில கீழே ....
அன்புடன்
BMK
Comments
Post a Comment