ஆது மகன் ஷத்தாது கட்டிய சொர்க்கம்:

ஆது மகன் 
ஷத்தாது கட்டிய சொர்க்கம்:
============================

ஆது சமுதாய மக்கள் அழிந்த பிறகு ஹூத் (அலை) அவர்கள் ஐம்பது வருடங்கள் வாழ்ந்தார்கள். 

அந்த காலகட்டத்தில் ஆது மக்களின் அரசனாக ஷத்தாத் என்பவன் இருந்தான். இவனும் சிலைகளை வணங்கி வந்தான். 

அப்பொழுது ஹூத் (அலை)  அவர்கள் அவனிடம்  ஏகத்துவத்தைப் போதித்தார்கள்.
 
"உங்களது உருவமற்ற இறைவனை வணங்கினால் எனக்கு என்னக் கிடைக்கும்?" எனக் கேட்டான்.

 ஹுத் (அலை) அவர்கள், "சொர்க்கம் கிடைக்கும்" என்று கூறினார்கள்.

அதற்கு அவன், "அந்த சொர்க்கம் எப்படி இருக்கும்?" எனக் கேட்டான்.
 
ஹூத் (அலை) அவர்கள், அது! தங்கத்தாலும், முத்துக்களாலும் , வைர வைடூரியங்களாலும், வெள்ளிகளாலும்  உருவாக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது" என்று கூறினார்கள்.

உடனே அவன் அவ்வளவு அழகான சொர்க்கத்தை நானே கட்டிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு
தனக்குக் கீழ் உள்ள சிற்றரசர்கள் அனைவரிடமும் ஓர் சுற்றறிக்கை அனுப்பினான். அதில் "தங்களிடம் உள்ள தங்கம், வைரம், வைடூரியங்கள், வெள்ளி ஆகிய விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் உடனே அனுப்பி வையுங்கள்" என்று இருந்தது. 

அவன் தன் 600 ஆவது வயதில்  சொர்க்கத்தைக் கட்டத் தொடங்கி 900 ஆவது  வயதில் கட்டி முடித்தான்.

அதற்கான திறப்பு விழா கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அன்றிருந்த உலக மக்கள் அனைவரையும் அதற்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். 

திரளான மக்களுக்கு நடுவில் மக்களை விலக்கிக் கொண்டு சொர்க்க வாசலை நோக்கி ஷத்தாத் வந்தான். 

அவன் கட்டிய சொர்க்கத்திற்கு வெளியே இருந்த பூங்காவில் பொன் நிற மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. 

ஏற்கனவே சொர்க்கத்திற்குள்  மயில்கள் , குயில்கள், அன்னப்பறவைகள் , முயல்கள் என பலவற்றை  கொண்டு சொர்க்கம்  அழகுப்படுத்தப்பட்டு இருந்தது. 

இந்த சொர்க்கத்தில் பொன் மான் மேய்ந்தால் இன்னும் அழகாக இருக்குமே என்று எண்ணி அதை பிடிக்க விரட்டிச் சென்றான். அவனுடன் சிப்பாய் வீரர்களும், பொதுமக்களும் உடன் சென்றார்கள்.  

வெகு தூரம் சென்ற பிறகு அந்தப் பொன் மான் தன் இறக்கைகளால்  பறக்கத் தொடங்கியது. அது பறந்துச் சென்று விட்டது. அதை விரட்டிச் சென்ற இவர்களால் பிடிக்க இயலவில்லை. 

அப்பொழுது அவர்கள் தன் உணர்வு பெற்று தான் எங்கே இருக்கின்றோம் என சுற்றி பார்த்தார்கள். அந்த இடத்தில் பயமுறுத்தும் தோற்றத்தில்  ஒருவர் நின்றிருந்தார்.

அவர், "பூமியில் சொர்க்கத்தைக் கட்டினால் மரணமே ஏற்படாதா?  இறைவனுடைய நினைவு உனக்கு உண்டாகாதா?" என்று கேட்டார்.

அதற்கு ஷத்தாது,  "நீ யார்?" என்று கேட்டான்.

"நான்தான் இஜ்ராயில்! உனது உயிரை பறிக்க வந்திருக்கின்றேன்" என்று சொல்லிவிட்டு ஒரு சப்தமிட்டார். அவ்வளவுதான் அங்கிருந்து அனைவரும் மரணித்தார்கள்.

நூல் : தஃப்ஸீர் குர்துபீ/ தஃப்ஸீர் இப்னு கஸீர் 

மேலும் விபரங்களுக்கு கீழுள்ள வெப்சைட்டை பாருங்கள். 

தொடரும்...........

https://search.app?link=https%3A%2F%2Fislamqa.info%2Far%2Fanswers%2F237688%2F%25D9%2582%25D8%25B5%25D8%25A9-%25D8%25B4%25D8%25AF%25D8%25A7%25D8%25AF-%25D8%25A8%25D9%2586-%25D8%25B9%25D8%25A7%25D8%25AF-%25D9%2588%25D8%25A8%25D9%258A%25D8%25A7%25D9%2586-%25D8%25A8%25D8%25B7%25D9%2584%25D8%25A7%25D9%2586%25D9%2587%25D8%25A7&utm_campaign=aga&utm_source=agsadl1%2Csh%2Fx%2Fgs%2Fm2%2F4

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்