யாரைத் திட்டுகிறீர் ?நபிகள் நாயகத்தையா ??
யாரைத் திட்டுகிறீர் ?
நபிகள் நாயகத்தையா ??
****************************
பிறந்தது முதல் இன்று வரை 1500 வருடங்களாக, அந்தந்த காலத்தின் ஒவ்வொரு நாளிலும் வாழும் மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் இவரை பின்பற்றி வருகிறார்களே! உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இல்லையா?
எத்தனையோ தலைவர்களின் கொள்கைகளும், கருத்துகளும், சித்தாந்தங்களும் கைவிடப்பட்டு வரும் நிலையில், இவரின் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் ஒரு கூட்டம் பெருகி வருகிறதே உங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இல்லையா?
கடந்த 1500 ஆண்டுகளில் பிறந்த கோடான கோடி மக்களில், ஒருவரேனும் இவரைப் போன்று பிறந்தாரா? வாழ்ந்தாரா? ( அப்படி யாரும் இல்லையே! ) இது உங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இல்லையா?
கடந்த 1500 ஆண்டுகளின் ஒவ்வொரு நாளிலும் வாழ்ந்த அறிஞர்கள், இவரை போற்றிப் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்களே, இது உங்களுக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இல்லையா?
இதுவரை பிறந்த, எதிர்காலத்தில் பிறக்க இருக்கின்ற மனிதர்களில், இவர் ஒருவர் மட்டுமே மனிதனில் இருக்க வேண்டிய அனைத்து நற்குணங்களோடு வாழ்ந்த முழுமையான மனிதர் என்பதாலே, கடந்தகால ஆட்சியாளர்கள், நிகழ் கால ஆட்சியாளர்கள் அனைவரும், இகழாமல் புகழ்கிறார்களே! இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இல்லையா?
1500 ஆண்டுகளில் வாழ்ந்த, பல ஆயிரம் கோடி மக்களில் அவரைப் பார்த்தும், படித்தும், கேட்டும் வியந்த, அந்த ஆச்சரியமான அதிசயமான மனிதப் புனிதரின் சுருக்கமான வாழ்வியல்....!
வாசியுங்கள் ! அவர் வழியில் வாழுங்கள் !!
இவர்கள் தான்
நபிகள் நாயகம் :-
*****************
1493 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டின் மலைகள் நிறைந்த மக்கா நகரில் 20.04.571 திங்கள்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் முஹம்மது நபி பிறந்தார்கள்.
எட்டு வயதிலிருந்து பனிரெண்டு வயது வரை ஆடு மேய்த்தார்கள். பனிரெண்டு வயதிலிருந்து வணிகம் செய்தார்கள். இருபத்தைந்தாம் வயதில் ஏற்கெனவே இருமுறை வாழ்விழந்த 40 வயது கதீஜாவை மணந்தார்கள்.
சிறுபிராயம் முதலே அல் அமீன் "உண்மையாளர்" என்று அடைமொழிப் பெற்ற அவர்கள் தன் நாற்பதாம் வயதில் இறைவனிடமிருந்து செய்தி வருவதாகக் கூறினார்கள். மக்கள் நம்பினார்கள்.
ஏற்கெனவே செல்வமும், செல்வாக்கும் மிக்கவராக அவர்கள் திகழ்ந்ததால் தாம் ஒரு இறைத்தூதர் என்று கூறுவதன் பின்னணியில் புகழும், பணமும் சேகரிக்கும் அற்ப நோக்கம் இல்லை எனப் புரிந்த மக்கள் அவரின் பின்னால் அணி அணியாய் திரண்டனர்.
அப்பொழுது மக்கா மாநகர முக்கியஸ்தர்கள், செல்வந்தர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, "மக்காவின் ஆட்சி பொறுப்பை அளிக்கிறோம், நீர் போதும் என்று சொல்லும் அளவிற்கு செல்வமளிக்கிறோம், உம் ஆணைக்குக் கட்டுப்படுகிறோம், ஆனால் உம், "ஓர் இறை கோட்பாடு பிரச்சாரத்தை நிறுத்த வேண்டும்" என்ற கோரிக்கையை முன் வைத்தனர். நபிகளார் ஏற்கவில்லை.
நபிகள் நாயகம் அவர்கள் பணத்துக்காக அல்லது பதவிக்காகத்தான் புதிய கலாச்சாரமான இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தார்கள் என்றிருந்திருந்தால் அப்பொழுதே அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் பணத்துக்காக பதவிக்காக அதனை செய்யவில்லை. ஓரிறை கோட்பாட்டை நிலை நாட்டவே அப்படிச் செய்தார்கள்.
முஹம்மது நபியின் செல்வாக்கும் வளர்ச்சியும் தமக்குச் சவாலாக இருப்பதாகக் கருதி அஞ்சிய மக்கா நகரின் பிரமுகர்கள், முஹம்மது நபியையும் அவரின் குடும்பத்தாரையும் ஊரை விட்டுத் தள்ளி வைத்து, "அவரோடு எவ்வித தொடர்பும் எவரும் வைத்துக் கொள்ளக் கூடாது" என தடை விதித்தனர்.
ஊரை விட்டு வெளியே மூன்றாண்டுகள் இவரின் ஆதரவாளர்களும் குடும்பத்தாரும் அடிப்படை தேவைகள் கூட இல்லாமல் வாழ்ந்தார்கள். இந்த சிரமங்களை அனைவரும் சகித்துக் கொண்டார்கள். இந்த இக்கட்டான நிலையிலும் எவரும் மனமோ மதமோ மாறவில்லை.
அவர் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ததால் அவரின் 48ஆம் வயதிலிருந்து 53ஆம் வயது வரை ஐந்தாண்டுகள் அவரை கொலை செய்திட எதிரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அப்பொழுதும் அவர் அவர்களுக்கு கட்டுப்படவோ, அஞ்சவோ இல்லை. அவர் பொய்யராக இருந்தால் பின்வாங்கி இருப்பார்கள்.
அவர்கள் வட்டி, மது, சூது, விபச்சாரம், ஆதிக்க உணர்வு, மனித ஏற்றத்தாழ்வுகள் ஆகிய சமூகத் தீமைகளுக்கு எதிராக போர் முகத்தோடு பிரச்சாரம் செய்தார்கள். இதனால் இந்தத் தீமைகளைச் செய்து சுகம் கண்டிருந்தவர்கள் அவரை வேகமாக எதிர்த்தார்கள்.
இந்நிலையில் 53ஆம் வயதில் 12.9.622 திங்கள் கிழமை அதிகாலை இரவு 3.30 மணியளவில் பிறந்த மக்காவை விட்டு, உறவினர்களை விட்டு, மனைவி மக்களை விட்டு, சம்பாதித்து வைத்திருந்த சொத்துக்களை விட்டு, நிலபுலங்கள் மற்றும் கால்நடைகளைவிட்டு, தான் நேசித்த இறை ஆலயம் - கஃபாவை
விட்டு நள்ளிரவில் எவருக்கும் தெரியாமல் மதினா நகர மக்களின் அழைப்பை ஏற்று வெளியேறினார்கள்.
உடுத்திய உடையோடு ஊரைவிட்டு வெளியேறிய இவரின் நல்லொழுக்கம், ஏகத்துவம் ஆகிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட மதீனா மக்கள் தம் நாட்டுக்கு வந்து, தம்மை வழிநடத்தும்படியும், ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்படியும் வலியுறுத்தி அழைத்த
அழைப்பை ஏற்று, மதீனா வந்தார்கள்.
அங்கே அவரின் கண்ணசைவையும் கட்டளையாகக் கருதி பின் தொடர பெரும் கூட்டம் தயார் நிலையில் இருந்தது. மதீனாவின் ஆட்சி பொறுப்பு இவர் வசம் வந்தது. அப்பொழுதும் அவர்கள் வளமாக வாழ விரும்பவில்லை. எளிமையையே விரும்பினார்கள். எளிமையாகவே வாழ்ந்தார்கள்.
அவர்கள் தனக்காக செல்வம் சேமிக்கவில்லை,
அவர்கள் அரண்மனையில் வசிக்கவில்லை, குடிசையில் இறுதி வரை வாழ்ந்தார்கள். அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிரார உண்டதில்லை. அவர்கள் வீட்டில் சில சமயம் மூன்று மாத காலம் அடுப்பு எரிந்ததில்லை.
இலை தழைகளை உண்டார்கள், வறுமையில் வாடினார்கள், இருப்பினும் கொள்கையிலிருந்து பின் வாங்கவில்லை. முன்பை விட வேகமாக பிரச்சாரம் தொடர்ந்தது.
அவர்கள் வீட்டில் பல இரவுகளில் விளக்கு இல்லை. இரு போர்வைகளை மேலும் கீழும் அணிந்திருந்தார்கள். விஷேச நாட்களில் மட்டும் தைக்கப்பட்ட ஆடையை சிலரிடம் கடன் வாங்கி அணிந்திருந்தார்கள், பெருநாள்
அன்றும் அவர்களின் பேரப்பிள்ளைகள் புத்தாடை அணிந்ததில்லை.
மரணிக்கும் போது தம் பிள்ளைகளுக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை. அவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தையும் குடியிருந்த வீட்டையும் பொது நிதியத்தில் சேர்த்தார்கள்.
மதீனாவின் முதல் குடிமகனாக எதிர்ப்புகளே இல்லாத தலைவராக, அனைவரின் அன்புக்குரியவராக இருந்தும் அவர்கள் பணத்துக்காக புகழுக்காக இறைவனின் பெயரை பயன்படுத்தினார் என்று சொல்லவே முடியாது.
ஏனென்றால் அவ்வப்போது "தப்புச் செய்தால் நானும் இறைவனிடம் தப்பிக்க முடியாது" என்று சொல்லி வந்தார்கள். இது அவர்களின் புகழை குறைக்கும் படியான ஒருச் சொல் என்றும் கருதாமல் இறைவன் மீதுள்ள அச்சத்தின் காரணமாக அப்படிச் சொன்னார்கள்.
அவர் உதிர்த்த வார்த்தைகளாகவே வாழ்ந்தார்கள். இவர் தம் இறைவனை கண்ணிமைக்கும் நேரம் கூட மறவாமல் வணங்கினார்கள். நள்ளிரவில் தூக்கத்தைத் துறந்து கால் வீங்குமளவு நின்றும் குனிந்தும் நிலத்தில் சிரம் வைத்தும் வணங்கினார்கள்.
ஓரிரு இரவுகள் மட்டும் அல்ல! ஓரிறை கோட்பாட்டை
உரைத்த முதல் நாளிலிருந்து உயிர்த் துறந்த இறுதி நாள் வரை.
இவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள், செயல்படுகிறார்கள், என்று இன்று வரை எவரும் சொன்னதில்லை.
அவர்கள் பேசிய பேச்சுக்கள் முக்காலத்திற்கும் ஏற்ற முத்தான
கருத்துகளாகும். அவர் தான் பேசிய பேச்சுக்கள் எதையும் திரும்ப
பெற்றதில்லை.
அவர்களுடைய அறிவுரைய அன்றிருந்தவர்களில்
எவரும் உதாசினப்படுத்தியதில்லை.
அவர்கள் இறை வழிப்பாட்டை வலியுறுத்தியதின் நோக்கம் மக்களை ஒரே இறைவன் என்ற கொள்கையில் மட்டுமே இணைக்க முடியும் என்றும், இதன் மூலமாகவே சமத்துவம், சகோதரத்துவம், மனித நேயம், ஒற்றுமை, கல்வியில் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி ஆகியன உருவாக்க முடியும் என்றும் தீய பழக்கங்கள், மூட குலப் பெருமைகள், மொழி வெறி, இனவெறி ஆகியவற்றை அடியோடு வேறறுக்க முடியும் என்றும் நம்பினார்கள். அதுவே உண்மையானது.
இறைவனின் வழிகாட்டுதல்படி இறுதிவரை செயல்பட்டு கி.பி.634இல் இறைவனடி சேர்ந்தார்கள். உலகில் மக்கள் நலனை மட்டுமே மனதில் கொண்டு வாழ்ந்த ஒரு மாமனிதர் இவர்களைத்தவிர வேறு எவரையும் தைரியமாக சுட்டிக்காட்ட முடியாது.
தலைவர்கள் சரிந்தால் அவர்களின் கொள்கைகள் பயனற்று போவதைத்தான் கண்டிருக்கிறோம். இவர்களின் கொள்கைகள் இன்று வரை எந்த மாற்றத்திற்குள்ளாகாமல் இஸ்லாமியர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஏன் தெரியுமா? இவர்கள் மட்டும் தான் உலகின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கியவர்கள்.
இவர்கள் வாழும் காலத்தில் இவரை பின் துயர்ந்த ஒவ்வொருவரும் தலைவர்களாவர்.
கண்டிப்பாக தொண்டர்களோ, சீடர்களோ.
சிசியர்களோ, அபிமானிகளோ அல்ல. ஏனென்றால் நபிகள் நாயகம் மரணிக்கும் போது, "என் தோழர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நேர்வழி அடைவீர்" என்று சொன்னார்கள். ஆம்! அனைவரையும் தன்னைப் போல் உருவாக்கினார்கள்.
உலகில் தலைவர்களை உருவாக்கிய ஒரே தலைவர் நபிகள் நாயகம் தான்.
இன்று உலகில் அனைவராலும் ஆய்வு செய்யப்படும் மார்க்கம் இஸ்லாம். நீங்களும் ஆய்வு செய்யுங்கள். அல்லாஹ்விடம் வாருங்கள்!
Comments
Post a Comment