நபி (ஸல்) அவர்களின் அழகு
நபி ஸல் அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
=========================
மாதம் :...2
தொடர் :....8
~~~~~~~~~~~~~~~~~~~~~~
அபூ உபைதா பின் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் கூறுவதாவது;
ரபீவு பின்து முஅவ்வித் (ரலி) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்களின் அழகுக் குறித்து எனக்கு வர்ணித்துச் சொல்லுங்கள்" என்று கேட்டுக் கொண்டேன். அப்பொழுது அவர் கூறினார் .
"மகனே! அவரை நீ பார்த்தால், உதயமாகின்ற சூரியனை நீ பார்ப்பதுப் போன்று இருக்கும் ( அந்த அளவிற்கு அவர்களின் முகம் பிரகாசமாகக் காணப்படும்; பார்த்துக்கொண்டேவும் இருக்கலாம்.)
நூல்: தாரமீ, தப்ரானீ.
ஜாபிர் பின் சமூரா (ரலி) அவர்கள் கூறுவதாவது;
பௌர்ணமி இரவில் நபி ( ஸல் ) அவர்களை சிவப்பு ஆடைகள் அணிந்திருந்த நிலையில் நான் பார்த்தேன். நான் அவர்களையும் நோக்கினேன். சந்திரனையும் நோக்கினேன். அப்போது நபி அவர்கள் சந்திரனைவிட மிக அழகானவர்களாக எனக்குத் தோன்றி னார்கள்.
நூல் : திர்மிதீ, தாரமீ.
அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது; "நபி (ஸல்) அவர்களின் முகம் வாளைப்போல் இருந்ததா?" என்று பர்ராவு பின் ஆஸிஃப் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார். அதற்கு அவர்கள், "இல்லை; சந்திரனைப் போன்று இருந்தது" என்று பதில் கூறினார்கள்.
நூல் : புகாரி
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல்) அவர்களை விட அழகான ஒருவரை நான் பார்த்ததில்லை. சூரியன் அவரின் முகத்தின் மீது ஓடுகிறதோ என எண்ணுகிற அளவிற்கு (பிரகாசமாக) அவர்களின் முக அழகு இருக்கும்.
நூல் : முஸ்னது அஹ்மத்
அலீ (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது; நபி (ஸல்) அவர்கள் வெள்ளையாகவும் சிவப்பாகவும் இருந்தார்கள். அவர்களின் முகத்தில் வேர்வைத் துளிகள் முத்தைப் போன்று காணப்பட்டது. இதுப் போன்ற ஒரு காட்சியை இதற்கு முன்பும் அதற்குப் பின்பும் நான் யாரிடத்திலும் கண்டதில்லை.
நூல் :முஸ்னது அஹ்மத்
Comments
Post a Comment