2. அதிகமாக வழிப்படுதலும் பாவங்களில் இருந்து விலகி இருத்தலும் :

நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

மாதம்  : ------ 3

தொடர் : ------ 21

2. அதிகமாக வழிப்படுதலும் 
பாவங்களில் இருந்து விலகி இருத்தலும் :
=============================

கடமையான வணக்கங்கள், தொழுகை, நோன்பு ஸதக்கா, திக்ரு போன்ற நஃபில் -  மேல்மிச்சமான வணக்கங்களில் அதிகமாக ஈடுபட்டு வந்தால் அல்லாஹ்வின் அன்பும் அவனது திருப்பொருத்தமும் கிடைக்கும்.

அல்லாஹ் சொல்வதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்; என் அன்பைப் பெறுகிற வரை என் அடியான் நஃபிலான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டே இருக்க வேண்டும்; நான் அவனை நேசித்து விட்டால் அவன் கேட்கும் காதாக, அவன் பார்க்கும் கண்ணாக நான் ஆகி விடுவேன். 

நூல்: புகாரி, முஸ்னது அஹ்மத்.

3. நபி நேசம் உண்மையான நேசமாக.....:
==================================

நபி (ஸல்) அவர்கள் எதை இந்த சமுதாயத்திற்கு வழங்கினார்களோ அவைகள் அனைத்தையும் தம் செயலிலும், சொல்லிலும் வெளிப்படுத்தி வாழ வேண்டும். அதை அல்லாஹ் கூறுகிறான்; 

وَٱعْلَمُوٓاْ أَنَّ فِيكُمْ رَسُولَ ٱللَّهِ ۚ

அறிந்து கொள்ளுங்கள்! உங்களுடைய அல்லாஹ்வின் தூதர் உங்களில் இருக்க வேண்டும். 49 : 7

ஒரு மனிதன் ஒரு செய்தியை, ஒரு உருவத்தை தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தால் அது அவனுடைய ஆழ் மனதில் பதிந்து விடும். பதிந்த உணர்வுகள் ஆழ் மனதில் அமைதியாக இருக்கும். திடீரென ஒரு நாள் ஆழ் மனதில் பதிந்த உணர்வுகள் கனவுகளாக காட்சியளிக்கும்.

ஒரு மாணவர் தன் ஆசிரியரிடம் கூறினார்; "ஆசிரியரே! என் கனவில் நான் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வேண்டும்; அதனால் அவர்கள் மீது மேலும் எனக்கு அன்பும், அளவு கடந்த பேரன்பும் அதிகரிக்கும்" அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.

அவருடைய ஆசிரியர் அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று விரும்பி ஒரு செய்தியைக் கூறினார்; 

"இப்பொழுதிலிருந்து இரவு உறங்குகிற வரை நீ தண்ணீர் குடிக்கக்கூடாது; தாகம் எடுத்தாலும் தண்ணீர் பருகாதே! இரவு உணவை சாப்பிடும் பொழுது அதில் அதிகமாக உப்பை சேர்த்துக் கொள்! இரவு உறக்கத்தில் என்ன மாதிரியான கனவை நீ கண்டாய் என எனக்கு சொல்" எனக் கூறினார்.

மாணவர் ஆசிரியர் சொன்னதைச் செய்தார்; விடிந்த பிறகு ஆசிரியரிடம் வந்து, "கடந்த இரவு நான் நபி (ஸல்) அவர்களை கனவில் பார்க்கவில்லை" என்று கூறினார் .

"நீ எதைப் பார்த்தாய்?" என ஆசிரியர் கேட்டார். அதற்கு அந்த மாணவர், "ஆறுகளுக்கு அருகே நடப்பது போலவும், வானத்திலிருந்து மழை பொழிவது போலவும், பூமியில் செடிகொடிகள் முளைத்திருப்பது போலவும், எங்கு பார்த்தாலும் என்னை சுற்றிலும் தண்ணீர் இருப்பது போலவும் கனவு கண்டேன்" என்று கூறினான்.

ஆசிரியர் கூறினார்; "நீ உறங்குவதற்கு முன் கடுமையான தாகத்தில் இருந்ததால், உனது கனவில் பல்வேறு வகையான நீர் நிலைகளைக் கனவில் பார்த்தாய்; 

நீ நபி (ஸல்) அவர்களைக் கனவில் காண வேண்டுமானால், அவர்களை உன் தாகத்தை விட அதிகமாக நேசி, அவர்களைப் பின்பற்று, அவர்களின் வாழ்வியலை உனது வாழ்வியலாக்கு, அவர்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடந்து கொள்!" என்று கூறினார். 

மாணவர், தன் ஆசிரியரின்  அறிவுரையில் உள்ள உண்மையான உள்ளார்ந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டார்.

.
.
.
.
.
.
தொடரும்..........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்