இஸ்லாம் மார்க்கம் வளர்ச்சியடைய காரணம் என்ன ? - 2
இஸ்லாம் மார்க்கம்
வளர்ச்சியடைய காரணம் என்ன ? - 2
நேற்றைய தொடர்....
5. இஸ்லாம் ஓர் எளிமையான மார்க்கம். இஸ்லாத்தில் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்கள் என்பது அறவே இல்லை! எனவே இஸ்லாம் அனைத்து மக்களிடமும் எளிதாக சென்றடைந்து விட்டது.
6. இஸ்லாத்தின் கோட்பாடுகள் புரிவதற்கு மட்டும் எளிமையானது அல்ல! அவற்றைப் பின்பற்றுவதற்கும் எளிமையானது தான்!
துரவரம், நெருப்பில் நடக்குதல், அழகு குத்துதல் போன்ற தன்னை வருத்திக் கொள்ளும்படியான எந்த அம்சமும் இஸ்லாத்தில் இல்லை. அதனால் இஸ்லாம் அனைவரையும் சென்றடைகிறது.
அன்றாட வாழ்வில் மனிதனால் எதை பின்பற்றி நடக்க முடியுமோ அதை மட்டுமே இஸ்லாம் வகுத்துக் கொடுத்திருக்கிறது.
7. இஸ்லாத்திலும் இஸ்லாமியர்களிடத்திலும் இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி செய்தவர்களிடத்திலும் சகிப்புத்தன்மை மிகுந்து காணப்பட்டது.
அதனால் தான் எகிப்து, ஜோர்டான் போன்ற நாடுகளை முஸ்லிம்கள் ஆட்சி செய்தாலும் கிறிஸ்தவர்கள் நிம்மதியாகவும் எல்லா வகை கிறிஸ்தவர்களும் அவரவர் கோட்பாட்டின் அடிப்படையில் சுதந்திரமாகும் செயல்பட முடிகிறது .
அவரவர், அவரவர் மதத்தைப் பின்பற்றி வாழ்வதற்கு இஸ்லாமிய அரசர்கள் முழு சுதந்திரம் வழங்கியிருப்பதாலே இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு அதிகமாணவர்கள் இஸ்லாத்தில் நுழைகிறார்கள்.
ஏன் இந்தியாவிலும் கூட 800 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்தார்கள். இப்பொழுதும் இந்தியாவில் ஹிந்துக்கள் தான் பெருவாரியாக இருக்கிறார்கள். அதற்கெல்லாம் காரணம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் சகிப்புத்தன்மையும் பெருந்தன்மையும் தான்!
8. இஸ்லாம் ஓர் விடுதலை மார்க்கம். இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மதத்தினர் சிறுமைப்படுத்தப்பட்டும், ஒடுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் இருந்த வேளையில் அவர்களுக்கு அவற்றிலிருந்து விடுதலையை தந்த மார்க்கம் இஸ்லாம். அவர்கள் இஸ்லாத்தில் இணைந்து விட்டதால் நிம்மதியாக இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பகுதியிலும் இஸ்லாம் ஒரு வகையில் பரவியது.
இந்தியாவில் விடுதலையைத் தேடி இஸ்லாத்தில் இணைந்தவர்கள் 20% பேர் என விவேகானந்தர் கூறுகிறார்.
"ஒடுக்கப்பட்ட இந்து சமுதாய மக்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டு இருந்தது; வெளித்தோற்றத்தில் கூட அவர்களுக்கு சமத்துவம் வழங்கப்படவில்லை; இஸ்லாத்தின் சகோதரத்துவ கோட்பாடு அவர்களுக்கு கவர்ச்சியாக அமைந்ததால் அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் இணைந்தார்கள்" என The Discovery of India எனும் நூலில் இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் கூறுகிறார்கள்.
"இங்கிலாந்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களின் நேர்மையை பார்த்து, அதனால் கவரப்பட்டவர்கள் இஸ்லாத்தில் இணைந்தார்கள்" என Thomas Walker Arnold அவர்கள் தனது நூலில் கூறுகிறார்கள்.
9. அரபு நாடுகளில் ரோமானிய, பாரசீக, பைசாந்திய பேரரசு களின் கொடுமைகளுக்கு எதிராக இஸ்லாம் அவர்களிடையே பரவியதாக வரலாறு சொல்கிறது.
இந்தியா மற்றும் உலக நாடுகளில் இஸ்லாம் அரசர்களால் பரப்பப்படவில்லை; சூஃபிகளாலும் வியாபாரிகளாலுமே இஸ்லாம் பரவியதாக வரலாற்றில் பதிவாகி இருக்கின்றது.
காண்க :
https://defense-arab.com/vb/threads/52963/
Comments
Post a Comment