கனவுகளின் விளக்கம் :
நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷
மாதம் : ------ 3
தொடர் : ------ 13
========================
நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அகிலத்தின் அருளாளராக அனுப்பி இருக்கின்றான்; அவரை நேரடியாகக் கண்டவர்கள் பெரும் பாக்கியவான்கள்; யார் அவரைக் கனவில் கண்டாரோ அவரும் பாக்கியவான்தான்;
ஒரு ஊரில் அல்லது ஒரு குடும்பத்தில் ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்திருந்தால் அது அவருக்கு மட்டுமான பாக்கியம் அல்ல! அங்குள்ள அனைத்தும் முஸ்லிம்களுக்குமான பாக்கியம்.
நபி (ஸல்) அவர்களை அழகிய தோற்றத்தில் யார் கனவில் காணுகிறாரோ அவர் மார்க்க விஷயத்தில் அழகாக செயல்படுகிறார் என்று பொருள்.
நபி ( ஸல்) அவர்களின் உடலிலோ உடையிலோ ஏதேனும் குறைபாடுகளை கனவில் ஒருவர் கண்டால் அவர் மார்க்க விஷயத்தில் குறைபாடு உடையவர் என்று பொருள்.
நபி (ஸல்) அவர்கள் தெளிவான ஒரு கண்ணாடியை போன்றவர். அவரை கனவில் காணுகிறவர் நபிகளாருக்கு எதிரில் நிற்பவரை போன்று ஆவார்.
கண்ணாடியின் தரம் எவ்வளவு அழகாக தெளிவாக இருக்கின்றதோ அந்த அளவிற்கு அதன் எதிரில் நிற்பவர் தன்னைக் காண்பார்.
இதன் அடிப்படையில் நபிகளாரின் உடலிலோ உடையிலோ ஏதேனும் குறைகளை கண்டால் அவர் தன்னில் உள்ள குறைகளைச் சரி செய்து கொள்ள வேண்டும் என்பதே கனவின் விளக்கம் என்பதை கனவு காண்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்களை கனவில் காண்பது சுன்னத் - நபி வழியாகும். நபி (ஸல்) அவர்களின் தோற்றம் குறித்து வர்ணித்து சொல்லக்கூடியவர்கள் இன்று யாருமே இல்லை; இந்நிலையில் நபிகளாரை கனவில் கண்டவர் பெரும் பாக்கியசாலியே!
நபிகளாரைக் கனவில் கண்டவரின் உலக வாழ்வும் மறுமை வாழ்வும் சிறப்பாகவே அமையும்.
மேலும் கனவில் காண்பவரிடம் மார்க்கம் எந்த அளவு இருக்கின்றதோ அதற்கேற்ப அவர் கண்ணாடியில் காண்பது போன்று நபிகளாரை கனவில் காண்பார்.
.
.
.
.
.
தொடரும்.........
Comments
Post a Comment