அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும், அவனிடமிருந்து எதிர்பார்ப்பதும்...:

நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

மாதம்  : ------ 3

தொடர் : ------ 22

4. அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதும், அவனிடமிருந்து எதிர்பார்ப்பதும்...:
==================================

நபி (ஸல்) அவர்களை உலகிலும் மறுமையிலும் காண வேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்; தொடர்ந்து அல்லாஹ்விடம் நச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். 

நபிகளாரின் வாழ்வியலை பின்பற்றி அண்ணாரின் மீது அதிகமாக ஸலவாத் சொல்லிக் கொண்டே வந்தால் விரைவில் எதிர்பார்த்த பாக்கியம் கிடைக்கும்; தொடர்ந்து வாசலை தட்டிக் கொண்டே இருந்தால் தான் வாசல் திறக்கும்.

ஸல்மான் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் கூறுவதாவது; நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‌.

நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்படுபவன், சங்கையானவன். ஒரு மனிதர்  தன் இரு கைகளையும் அவன் பக்கம் உயர்த்தும் போது அந்த இரு கைகளும் வெறுங்கையாக திருப்பி அனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான். 

நூல்: திர்மிதீ 3556

اللهم إنِّي أسأَلُكَ رُؤيا صالحةً صادقةً مذكورة غير منسية

اللهم لا تحرمني من رؤيا نبيك محمد وآله وأصحابه،

இறைவா! நினைவில் நிற்கும்படியான, உண்மையான நல்ல கனவை உன்னிடமிருந்து நான் எதிர்பார்க்கின்றேன். 

இறைவா! உனது நபியான முஹம்மது நபி (ஸல்) அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும், அவருடைய தோழர்களையும் நான் கனவில் காண்பதை விட்டும் என்னை நீ தடுத்து விடாதே!

என மேற்கண்ட துஆவினை அதிகம் அதிகமாக ஓதி வர வேண்டும். தமிழிலும் துஆ செய்து வரலாம். துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படுகிற நாட்கள், ஒப்புக்கொள்ளப்படுகிற இடங்கள், ஒப்புக்கொள்ளப்படுகிற நேரம் ஆகியவற்றில் இந்த துஆக்களை கேட்க வேண்டும்.

நண்பர்கள், குடும்பத்தினர்கள், நாம் அறிந்த ஆலிம்கள், இறை நேசர்கள் போன்றவர்களிடம் மேற்கண்டவாறு துஆ செய்யும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். 

உம்ராவிற்குச் சென்ற உமர் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், "தோழரே! நீங்கள் ஹரமுக்கு சென்ற பிறகு உங்களுடைய துஆவில் என்னை மறந்து விடாதீர்" என்று கேட்டுக் கொண்டார்கள். அது போலவே நாமும் கேட்டுக்கொள்ள வேண்டும்.
.
.
.
.
.
.
தொடரும்..........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்