நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்த வரலாறுகளைப் படிப்பதும் கேட்பதும்:

நபி (ஸல்) அவர்களை
நான் கனவில் பார்த்தேன்
÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷~÷

மாதம்  : ------ 3

தொடர் : ------ 23

5. நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்த வரலாறுகளைப் படிப்பதும் கேட்பதும்:
=================================

நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டதாக அறிவிக்கப்பட்டுள்ள வரலாறுகளையும், நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கிய நூல்களை வாசிக்க  வேண்டும்.

நபி (ஸல்) அவர்களை கனவில் பார்த்ததாகப் பேசப்படும் சொற்பொழிவுகளை காது தாழ்த்திக் கேட்க வேண்டும். இவற்றால் ஷவ்க் - நபியின் மீதுள்ள நேசம் அதிகரிக்கும்படியாக நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்; 

மேலும் நபி (ஸல்) அவர்கள் குறித்த உருவத் தோற்றம் நம் ஆழ்மனதிலும் அறிவிலும் பதிய வேண்டும். இவ்வாறான செயல்களைத் தொடர்ந்து செய்யும் போது நாம் எதிர்பார்த்த நல்லது நடக்கும். 

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்;
பூமியிலிருந்து வந்து தன்னைச் சந்தித்த ஒரு  வானவரிடம் அல்லாஹ் சில கேள்விகளை கேட்டான்.

என் அடியார்களை எந்த நிலையில் நீங்கள் விட்டுவிட்டு என்னிடம் வந்தீர்கள்?

அதற்கு மலக்குகள், "பள்ளிவாசலில்  கூட்டமாக அமர்ந்து திக்ர் , திலாவத் செய்த நிலையில் அவர்களை பிரிந்து வந்தேன்" எனக் கூறுவார்

அதற்கு அல்லாஹ், "அங்கிருந்த அனைவரையும் நான் மன்னித்து விட்டேன் அதற்கு நீங்கள் தான் சாட்சி" என்று கூறுவான்.

அந்த வானவர்களிடையே உள்ள ஒரு வானவர், “(அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகின்றவர்களில் உள்ளவன் அல்ல! அவன் ஏதோ வேலை நிமித்தமாகவே அங்கு வந்தான் , அவனையுமா நீ மன்னிக்கிறாய்?” எனக் கேட்பார்.

அதற்கு இறைவன், “அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள்; அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (நற்பேறு பெறுவானே தவிர,) நற்பேறற்றவனாக ஆகமாட்டான்” என்று அல்லாஹ் கூறினான். 

நூல் : புகாரி 6408

இந்த ஹதீஸில் காணப்படுவது போல் ஒரு மனிதர் தொடர்ந்து நபிகள் நாயகத்தை கனவில் காண வேண்டும் என்கிற ஆசையோடும், வேட்கையோடும் தொடர்ந்து இருந்தால், ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் அல்லாஹ் அவருக்கு அவருடைய கனவில் அண்ணல் நபி (ஸல்) அவர்களை காட்சியளிக்கச் செய்வான். 

நபியை 
நினைத்துக் கொண்டே இருங்கள்! 
ஒரு நாள் நனவாகும்!

அடுத்த மாதம் தொடரும்.........

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்