உலக நாடுகளில் எத்தனை மஸ்ஜிதுகள் உள்ளது? :

உலக நாடுகளில் 
எத்தனை மஸ்ஜிதுகள் உள்ளது? :
===============================

உலகில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமான மஸ்ஜித்கள் இருக்கின்றது.

முஸ்லிம்களே இல்லை என்று சொல்லப்பட்ட பல நாடுகளில் இன்று முஸ்லிம்களும் பள்ளிவாசல்களும் பெருகி இருக்கின்றன.

சீன அரசாங்கம் ஆயிரக்கணக்கான மஸ்ஜித்களை இடித்தது. ஆனால் சீன அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது வெய்சூ பிராந்தியத்தில் மட்டும் 2400/ மஸ்ஜிகள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். 

ஃபிரான்ஸில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 20 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று 2260 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் உருவாகியுள்ளன. 

ஜெர்மனியில் 1999 இல் 40 பள்ளிவாசல்கள் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று 4000 மஸ்ஜித்கள் பெருகியுள்ளன. 

இங்கிலாந்தில் 1890 இல் ஒரு பள்ளிவாசல் மட்டுமே இருந்துள்ளது. ஆனால் இன்று இங்கிலாந்து முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள் உருவாகி இருக்கின்றது.

இதுபோன்று பெல்ஜியம், இத்தாலி, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் மஸ்ஜிதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. 

நேபாளத்தில் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இஸ்லாத்தை ஏற்றதாக நேபாள் இஸ்லாமிக் சொஸைட்டியில் உள்ள குர்ஷித் ஆலம் என்பவர் குறிப்பிடுகிறார்.

"ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் வீதம் ஆண்டுக்கு 100 பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன" என்று பிரபல அமெரிக்கச் செய்தி ஊடகமான சி.என்.என். குறிப்பிடுகிறது. 2024 ஏப்ரல் மாதம் வரை 3000/ திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் இருப்பதாக ஒர் ஆய்வு கூறுகின்றது.

அதுமட்டுமல்லாமல்  அமெரிக்காவில் பல  கிறித்தவ தேவாலயங்கள் மூடப்பட்டு அந்த தேவாலயங்கள் மஸ்ஜித்களாக மாற்றப்பட்ட பல நூறு  நிகழ்வுகள் அமெரிக்காவில் அரங்கேரி உள்ளது.

அமெரிக்காவில்  வாஷ்வேகாஸ் நகரத்தை சூதாட்ட நகரம் என்று சொல்வார்கள். அங்கும் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளது. அங்கு நடைபெறும்  தொழுகையின் போது மக்கள் வெள்ளம்  நிரம்புவதால் சாலைகளில் தொழும் காட்சிகளை சர்வசாதாரணமாகக் காணலாம்.

ஒருப்படி அரிசியில் ஆறு பேர் சாப்பிடலாம் என்றும், 60 கிலோ மீட்டர் வேகத்தில் பைக்கில் பயணித்தால் எத்தனை மணி நேரத்தில் ஒரு ஊருக்கு சென்று விடலாம் என்றும் நாம் கணிப்பது போல, 

பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை வைத்து அந்த நாடுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கையை நீங்கள் கணித்துக் கொள்ளுங்கள்.

படத்தில் இருப்பது அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளிவாசல்.

Comments

Popular posts from this blog

O.M. ஹள்ரத் அவர்களின் திருமண உரை

அதிரை ஆசான் மௌலானாமுஹம்மது ஷஹீத் ஆலிம் அவர்கள்